Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, March 16, 2013

இதற்காக கமலுக்கு ஆஸ்கர் அவார்ட் தரலாம்


விஸ்வரூபம் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் தடை, இடைஞ்சல் செய்தால், இந்தியாவைவிட்டு வேறு நாட்டுக்குப் போய்விடுவேன் என்று கமலஹாஸன் அடிக்கடி கூறுகிறாரே, இதன் பொருள் என்ன?


விஸ்வரூபம் படத்திற்கு தமிழகத்தில்தான் பிரச்சினை ஏற்பட்டது. இது தனது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்று அவர் கருதினால், இவருக்கு பட்டு கம்பளம் விரிக்கும் மராட்டியத்திற்கு இவர் போகலாம். அல்லது வேறு மாநிலத்திற்குப் போய்விடுவேன் என்று சொல்லலாம். தமிழகத்தில் பிரச்சினை என்பதற்காக இந்தியாவை விட்டே போய்விடுவேன் என்று யாராவது சொல்வார்களா?

இதைச் சிந்தித்தால், அவரது வார்த்தையின் அர்த்தம் உங்களுக்குப் புரிந்துவிடும்.

ஒருவர் பிறந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் மாறிக் கொள்வதாக அறிவித்தால், அதற்கான உரிமை அவருக்கு உண்டு. அதை அவரால் செய்ய முடியும். ஆனால் தனது நாட்டைவிட்டு வேறு நாட்டுக்குப் போவதாக யாரும் முடிவு செய்ய முடியாது. எந்த நாடாவது அவருக்கு அடைக்கலமும் குடியுரிமையும் தருவதாக உறுதி மொழி அளித்தால் மட்டுமே ஒருவரால் அப்படிக் கூற முடியும்.

எனக்கு இந்தியா பிடிக்கவில்லை. நான் வேறு நாட்டுக்குப் போய்விடுவேன் என்று ஒருவன் சொன்னால் அது சாத்தியப்படுமா? அவனை எந்த நாடாவது ஏற்றுக் கொண்டால்தான் இப்படி அவனால் சொல்ல முடியும். இதைச் சிந்தித்தாலும் கமலஹாஸனின் சொல்லுக்கு அர்த்தம் விளங்கிவிடும்.

விஸ்வரூபம் படத்தை அமெரிக்கத் தூதரகம் சென்று போட்டுக்காட்டி, தான் ஒரு அமெரிக்க அடிமை என்பதை முன்னரே ஒப்புக்கொண்டு அமெரிக்காவில் நிரந்தரமாக வசிக்கும் அனுமதியை அவர் பெற்றிருக்கவேண்டும். விஸ்வரூபம் படத்திற்கு பிரச்சினை இல்லாவிட்டாலும், அவர் அமெரிக்காவில் செட்டில் ஆவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் முடித்திருக்க வேண்டும்.

கமலஹாஸன் அமெரிக்காவுக்குப் போய் செட்டிலாகி, அமெரிக்க நாகரிகத்துடன் கலந்துவிடும் முடிவு முன்னரே எடுக்கப்பட்டுவிட்டது. இவரது கலாச்சாரம் அந்நாட்டின் கலாச்சாரத்தோடு அப்படியே ஒத்துப் போகும் என்பதில் சந்தேகம் இல்லை.

விஸ்வரூபம் பிரச்சினையை அவர் காரணமாகச் சித்தரிப்பது ஏற்கத்தகாததாகும். அமெரிக்கா இவருக்கு பச்சைக் கொடி காட்டாமல் இருந்தால், நாட்டைவிட்டுப் போய்விடுவேன் என்று இவரால் சொல்ல முடியாது. அது அவர் அதிகாரத்தில் உள்ள விஷயம் அல்ல.

விஸ்வரூபத்தில் நடித்ததைவிட நாட்டை விட்டே போகப்போகிறேன் என்ற நாடகத்தில் மிகச் சிறப்பாக நடித்து நாட்டு மக்களை ஏமாற்றுவதில் அவார்டு பெற்றுவிட்டார் என்பதுதான் இதன் சரியான அர்த்தம்.,  இதற்காக வேண்டியாவது கமலுக்கு ஆஸ்கர் அவார்ட் தரலாம்.

Reactions:

1 comments :

கூத்தாடி, கோமாளி..
அமெரிக்க கைகூலி நாட்டுபற்று புடலங்கா வெங்காயம் விளக்கெண்ணெய் என்று வீம்பிழைத்த கமல ஹாசனை யாராவது பார்த்தீங்களாயா...?
சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் ஈழத்திற்கு ஆதரவாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளும் நேரத்தில் இந்த ஈர வெங்காயம் எங்கே போய் ஒடி ஒளிந்து இருக்கிறது...?

இந்த ஈர வெங்காயத்திற்கு சொம்பு தூக்கி கருத்து சுதந்திரத்திற்கு சொம்பு தூக்கிய நடுநிலை நாட்டாமை சொம்புகளே...
கமலை தேடி பிடித்து கொண்டு வாருங்கள்...!

லயோலாயா கல்லூரி வாசலில் தமிழ் இன ஆதரவாளானாக ஒரே ஓரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க சொல்லுங்கள் பார்போம்..?
போங்கடா வெண்ணைகளா...
நாட்டை விட்டு ஓடி போக போகிறேன் என்றதும்..
உன் கோமண துணியை கூட விற்று கமலின் விஷ்வரூபம் படத்தின் கடனை அடைக்க துணிந்த தமிழனே...
உன் ஈழ உறவுக்கு குரல் கொடுக்க ஓடி வரச்சொல் பார்ப்போம்...?
உன் பேரை சொல்லி வயிறு வளர்க்கும் கூத்தாடிக்கு ஆதரவாக உன் தொப்புள் கொடி உறவான இசுலாமியர்களின் உணர்வை கொச்சை படுத்த துணிந்தாயே சக தமிழா... வெட்கப்படு. tamil eelam

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!