புதுடெல்லி: 2002ல், நடந்த கலவரத்தின் சூத்திரதாரி, இனக்கலவரத்தை முன் நின்று நடத்தும் ஒரு அயோக்கிய முதல்வர் என்றால் மிகை இல்ல.
குஜராத்தில் மீண்டும் கலவரம் : முஸ்லிம் நிறுவனங்களுக்கு தீ வைப்பு; மீடியாக்கள் மூடி மறைப்பு!..... !! குஜராத் கலவரத்தின் 11ம் ஆண்டு நினைவாக, இந்த ஆண்டும் "VHP" குண்டர்கள், முஸ்லிம்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
தொழிற்சாலைகளை "தீ" வைத்து கொளுத்தியுள்ளனர். FIR போடப்பட்டும் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித்திரிந்துக் கொண்டிருக்கின்றனர். குஜராத்தின் "சோட்டா உதைப்பூரில்" (பரோடா/ வடோதரா) இந்த ஆண்டு பிப்ரவரி 12, மார்ச் 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில், முஸ்லிம் நிறுவனங்கள் தீ வைத்துக்கொளுத்தப்பட்டுள்ளன. முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சம்பவம் ஒன்றில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம், காவல் நிலையத்தில் புகாரளிக்க சென்றபோது, கலவரக்காரர்கள் ஒன்று திரண்டு, காவல் நிலையத்தின் மீது கல்லெறிந்தும், முஸ்லிம்களை "கொச்சையான" வார்த்தைகளில் திட்டியும், காவல் நிலையத்தை விட்டு முஸ்லிம்களை வெளியேற்றக்கோரியும் கலாட்டாவில் ஈடுபட்டனர். இதனால், காவல் நிலையத்தில் முஸ்லிம்கள் கொடுத்த புகாரை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
அதை தொடர்ந்து, தாக்குதலுக்கு உள்ளான 200 முதல் 250 எண்ணிக்கையிலான முஸ்லிம்கள், மீண்டும் காவல் நிலையத்துக்கு புகாரளிக்க வந்தபோது, துப்பாக்கிகளை காட்டி போலீசார் முஸ்லிம்களை மிரட்டியுள்ளனர், ஒரு காவலர் முஸ்லிம் இளைஞர் ஒருவரின் மார்பில் துப்பாக்கியை பதித்து அச்சுறுத்தியும் உள்ளார். கூட்டம் களைய மறுக்கவே தடியடி நடத்தியும் - கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் சிதறடித்துள்ளனர். இத்தனை நடந்தும் "மரண வியாபாரி மோடியின் சாம்ராஜ்யத்தில்" எந்த மீடியாவும், இந்த சம்பவங்களை வெளிக்கொண்டு வரவில்லை.
முன்னதாக, பிப்ரவரி 13 அன்று "சோட்டா உதைப்பூரில்" கடையடைப்பு நடத்தக்கோரி, இரு தினங்களாக (பிப்ரவரி 11&12) ஊர் முழுவதும் நோட்டீஸ்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் மத துவேஷக் கருத்துக்களும், பொது அமைதிக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய அளவுக்கு முஸ்லிம்களுக்கு எதிராக, கடுமையான சொற்கள் பயன் படுத்தப்பட்டிருந்தது. இதனால் கடையடைப்புக்கு ஒரு நாள் முன்பே, பிப்ரவரி 12 அன்றே முஸ்லிம் நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. முஸ்லிம்களின் தொழிற்சாலைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.
பிளாஸ்டிக் தொழிற்கூடம் ஒன்று முற்றாக எரிந்து நாசமானது. சம்பவ இடத்துக்கு SP, DIG என, உயர் போலீஸ் அதிகாரிகள் வந்தனர். FIR பதிவு செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்கு மேலாகியும் குற்றச்செயலுக்கு காரணமானவர்கள் - "FIR "ல் பெயர் உள்ளவர்கள் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இத்தகவல்கள் அனைத்தும், மனித உரிமை ஆர்வலர்களின் ANHAD (Act Now For Harmony and Democracy) என்ற அமைப்பின் சார்பில் "உண்மை அறியும் குழு" அமைக்கப்பட்டு, நேரடி விசாரணையின் மூலம் அறிக்கையாக தரப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தக்குழு மாவட்ட கண்காணிப்பாளரை சந்தித்து கேட்டபோது, இந்தப்பிரச்சினையை தாங்கள் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், ஆட்சேபகரமான நோட்டீசை யார் அச்சடித்தது எனக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார், மாவட்ட கண்காணிப்பாளர். முஸ்லிம்களுக்கு சொந்தமான மினரல் பவுடர் தயாரிப்பு தொழிற்சாலைகள், சுரங்கங்கள், வியாபார நிறுவனங்கள், பண்ணைகள், ப்ளாஸ்டிக் குடோன்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு காட்சி ஊடகங்கள் இங்குள்ள காட்சிகளை படம் பிடித்தபோதும் தொலைக்காட்சி சானல்கள் எதுவுமே இதுத்தொடர்பான செய்திகளையோ, காட்சிகளையோ நரேந்திர மோடியின் உத்தரவுக்கு கீழ்படியும் அடிமை சேவகம் புரியும் குஜராத் ஊடகங்கள் ஒளிபரப்பவில்லை.
0 comments :
Post a Comment