லண்டன்: பாட்டி வைத்தியம்' என்ற பெயரில், பருக்கள் மீது வினிகர் பூசுவது, சரும பளபளப்பிற்கு எலுமிச்சை சாறு பயன்படுத்துவது போன்றவை பிரச்னையை மேலும் அதிகரிக்கத் தான் செய்யும் என, மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரிட்டனைச் சேர்ந்த, "கேர்' என்ற நிறுவனம் இது குறித்து ஆய்வு நடத்தியது. சருமத்தை மிருதுவாக்க பற்பசையை பயன்படுத்துவதாக 18 சதவீதம் தெரிவித்தனர். மற்றவர்கள் சமையல் எண்ணெய், எலுமிச்சை சாறு, தேன் போன்றவற்றை பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். 65 சதவீதம் பேர், வீட்டில் இருக்கும் சமையலறை பொருட்களை, சரும பிரச்னைகளைச் சமாளிக்க தொடர்ந்து பயன்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளனர்..
சரும வறட்சிக்கு, 20 சதவீதம் பேர், கை வைத்தியத்தை பின்பற்றுகின்றனர். மேலும், 19 சதவீதம் பேர், கரும்புள்ளிகளுக்கும், 18 சதவீதம் பேர், சொறி மற்றும் படைக்கும், 8 சதவீதம் பேர், "சோரியாசிஸ்' நோய்க்கும் கை வைத்தியத்தைப் பின்பற்றுகின்றனர். கடையில் வாங்கும் மருந்துகள், தங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதாலேயே, கை வைத்தியத்தைப் பின்பற்றுவதாக பலர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, மருந்து கம்பெனி அதிகாரி ஸ்டீவ் ரைலி கூறுகையில், "இது போன்ற பொருட்கள், சருமத்தின் மேல் உபயோகத்திற்கு உகந்ததல்ல. பற்பசை, சருமத்திலுள்ள எண்ணெயை ஈர்த்து பருக்கள் காய்ந்து உதிர்வதற்கு உதவி புரிந்தாலும், செல்களில் அரிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். வினிகர், எலுமிச்சை சாறு இரண்டுமே அமில சத்து கொண்டவை என்பதால், அவை சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும்' என்றார்.
0 comments :
Post a Comment