Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, January 26, 2013

கூறுபோட வந்த கொள்ளிகட்டைகள்!?

தேசத்தை கூறுபோட வந்த கொள்ளிகட்டைகள் யார் என்பது சொல்லாமலே புரிந்துவிடும். தேசத்தின் பல பாகங்களிலும் குண்டுகள் வெடிக்கச்செய்து அதை சிறுபான்மையினர் தலையில் போட்டுவிட்டு ஒன்று அறியாதவர்கள் போல் இந்தனை காலங்கள் ஒதுங்கி,ஒளிந்து இருந்தனர். அது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தேசத் துரோகிகள்ளின் முகம்.

“நாட்டில் நடக்கும் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு இந்துத்துவ பயங்கரவாதிகள்தான் காரணம்” என்று உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறியதுதான் தாமதம்- உடனே நாலா பக்கங்களிலிருந்தும் அவர்மீது கண்டனக் கணைகள் பாய்கின்றன. ‘பதவி விலகு, மன்னிப்பு கேள், தேசத் துரோகம்’ என்றெல்லாம் அம்புகள் பாய்கின்றன.

அரசியல்வாதிகள் எப்போதாவதுதான் உண்மை பேசுவார்கள். இப்போது ஷிண்டே கூறியிருப்பது
கலப்படமற்ற உண்மையாகும். சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு, அஜ்மீர்குண்டுவெடிப்பு, மாலேகாவ் குண்டுவெடிப்பு, மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு முதலிய பயங்கரவாதச் செயல்களை எல்லாம் அரங்கேற்றியவர்கள் முஸ்லிம் தீவிரவாதிகள்தாம் என்று எந்தவிதமான விசாரணையும் இல்லாமல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுத் தீர்ப்பையும் வழங்கி ஒரு சமுதாயத்தையே அவமானப்படுத்தின.

ஆனால் 2011ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தெஹல்காவுக்காக ஆஷிஷ் கேதான் நடத்திய புலனாய்வில்தான் பல உண்மைகள் தெரியவந்தன.

இரண்டு ஆண்டு கழிந்த நிலையில் இதோ, இப்போது தேசியப் புலனாய்வுக் குழுவின் (என் ஐ ஏ) விசாரணை முடிவுகள் வெளிவந்திருக்கின்றன.

இன்னும் முழுமை அடையாத அந்தப் பட்டியல் வருமாறு: *சம்ஜவ்தா குண்டுவெடிப்பு- முக்கிய குற்றவாளி ராஜேந்தர் கைது(2012, டிசம்பர் 15) என் ஐஏவின் குற்றவாளிகள் பட்டியலில் இருப்பவர்கள்- சுவாமி அசிமானந்தா, சாத்வி பிரக்யா சிங், கொல்லப்பட்ட ஆர் எஸ் எஸ் ஊழியர் சுனில் ஜோஷி, சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சம்கிரா, கமால் சவ்ஹான், அமித்.

* மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பிலும் ராஜேந்தர் சவ்தரிக்குப் பங்குண்டு. அபிநவ் பாரத் என்னும் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த இந்த ஆள் சம்ஜவ்தா, மாலேகாவ், அஜ்மீர் குண்டுவெடிப்பிலும் தொடர்புடையவர் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* (டிசம்பர் 16) மக்கா மஸ்ஜித் வழக்கில் அபிநவ் பாரத் அமைப்பைச் சேர்ந்த ஜேத்ராம் கைது செய்யப்பட்டார்.

* (டிசம்பர் 26) 2004 இல் ஜம்மு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தியது சம்ஜவ்தா குற்றவாளிகள்தான் என என் ஐ ஏ உறுதி.

* (டிசம்பர் 27) மாலேகாவ் வழக்கிலும் ராஜேந்தர் சவ்தரிக்குத் தொடர்பு உண்டு, அவர் கைதுசெய்யப்படுவார்.

* இந்தூரில் குற்றவாளிகள் வெடிகுண்டு வைப்பதற்கான பயிற்சி எடுத்தனர் என்று என் ஐ ஏ கூறுகிறது.

* (ஜனவரி 2) மாலேகானில் வெடிகுண்டு வைப்பதற்கு முன்பு விரிவாக சர்வே செய்ததாக யான்சிங் ஒப்புதல் வாக்குமூலம்.

* (ஜனவரி 5) பயங்கரவாதக் குற்றச்சாட்டின் அடிப்படையில் லோகேஷ் சர்மா கைது செய்யப்பட்டார்.

* (ஜனவரி 7) மேற்சொன்ன வழக்குகளில் தடய அறிவியல் ஆதாரங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளன.

* (ஜனவரி 9) இந்துத்துவ தீவிரவாதிகளுக்கு கோத்ரா ரயில் எரிப்பிலும் தொடர்பு என்று
தேசியப் புலனாய்வுக் குழு அறிக்கை.

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாய்ச் சித்திரித்த ஊடகங்கள் இந்தச் செய்திகளையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

அப்படியே செய்தி வெளியிட்டாலும் எங்கோ ஒரு மூலையில் நாலுவரியில் இந்தச் செய்திகள்
முடிந்துவிட்டன.

இத்தனை உறுதியான சான்றுகளின் அடிப்படையில்தான் ஷிண்டே இந்துத்துவ பயங்கரவாதம் குறித்த உண்மையை இனியும் மறைக்க முடியாது என்ற நிலையில் குறிப்பிட்டுள்ளார்.

அது தேசத் துரோகம் என்றால் நாடு முழுக்க குண்டுவைத்த இந்துத்துவத் தீவிரவாதிகளின்
செயல்களுக்கு என்ன பெயர்?

Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!