விஸ்வரூபம் படம் தடை உத்தரவு, முன்னும் பின்னும். நடந்த பின்னணி என்ன?
ஓர் அலசல் ரிப்போர்ட்....!!?
கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்துக்கு மிகப் பெரிய சிக்கல் வந்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து விஸ்வரூபம் படத்தை 2 வாரங்களுக்கு திரையிட தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் படத்தை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தாமல் இருப்பதற்காக 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள கமல்ஹாசனின் விஸ்வரூபம் படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. சமீபத்தில் இப்படம் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குப் போட்டுக் காட்டப்பட்டது. அதைப் பார்தத் இஸ்லாமிய அமைப்பினர் படத்தில் இஸ்லாமும், இஸ்லாமியர்களும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் அமைப்பின் தலைவர்கள் கூறியுள்ளனர்,
திருக்குர்ஆனை தீவிரவாதிகளின் கையேடு போல காட்டியுள்ளதாகவும், மதுரை, கோவை போன்ற நகரங்கள் தீவிரவாதிகளின் புகலிடம் போல காட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனவே படத்தை வெளியிட விட மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
மீலாடி நபியன்று ரிலீஸுக்குத் திட்டம் : விஸ்வரூபம் படத்தை மிலாடி நபி தினமான நாளை கமல்ஹாசன் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்தார். இதுதான் இஸ்லாமியர்களை கடும் கொதிப்புக்குள்ளாக்கி விட்டது.
பெரும் போராட்டத்துக்கு முஸ்லீம்கள் திட்டம் : இதையடுத்து அவசர கூட்டத்துக்கு தமிழ்நாடு தெளஹீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்தன. படத்தை வெளியிட விடாமல் தடுப்போம் என்றும் இவை சூளுரைத்தன.
கமிஷனர் அலுவலகம் விரைந்த சந்திரஹாசன் : இதையடுத்து கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு விரைந்தார். ஆனால் அங்கு கமிஷனர் ஜார்ஜ் இல்லை. இதையடுத்து சில உயர் அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேசினார். பின்னர் கிளம்பிச் சென்றார்.
உள்துறை செயலாளரை சந்தித்த தவ்ஹீத் ஜமாஅத் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகள் தமிழக அரசின் உள்துறை செயலாளரை சந்தித்து இந்திய வரலாற்றில் இஸ்லாமியர்களை இழிவுப்படுத்தி இந்த அளவிற்கு எந்த படமும் வெளிவந்ததில்லை எனவும்,
இந்த படம் திரைக்கு வருமேயானால் நிச்சயம் நாட்டில் சட்டம் ஒழுங்கு ஏற்படும் என்றும், ஒட்டு மொத்த சமுதாயமும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இத்திரைப்படத்தை தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்,
கமிஷனர் அலுவலகம் விரைந்த முஸ்லிம் தலைவர்கள் : இந்த நிலையில் முஸ்லிம் அமைப்பு கூட்டமைப்பின் சார்பாக கமிஷனர் அலுவலகம் விரைந்து இப்படம் குறித்து தெளிவாக விளக்கம் அளித்து திரைப்படத்தை தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்,
கோவை கலெக்டரின் திடீர் அறிக்கை : இந்த நிலையில்தான் கோவை மாவட்ட கலெக்டர் கருணாகரன் தமிழக உள்துறைச் செயலாளர் ராஜகோபாலுக்கு ஒரு அறிக்கை அனுப்பி வைத்தார். அதில் கோவை மாவட்டம் பதட்டமான பகுதியாகும்.இங்கு தற்போது அமைதி நிலவுகிறது. ஆனால் விஸ்வரூபம் படம் வெளிவந்தால் பெரும் கலவரம் வெடிக்கும் சூழல் உருவாகும். எனவே அப்படத்தைத் திரையிட அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்.
மாவட்ட எஸ்.பிக்களும் கவலை : அதேபோல பல்வேறு மாவட்ட எஸ்.பிக்களும் படத்தைத் திரையிட்டால் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை வரும் என்று உள்துறை செயலாளருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.
2 வாரங்களுக்குத் தடை : இதையடுத்து நேற்று உள்துறைச் செயலாளர் ராஜகோபால் அதிரடியாக படத்தை 2 வாரங்களுக்குத் திரையிட தடை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் போராட்டங்கள், பிரச்சினைகள் வெடிப்பதைத் தவிர்க்கும் வகையில் 144 தடை உத்தரவை தேவைப்படும் இடங்களில் பிறப்பிக்கவும் அவர் மாவட்ட எஸ்.பிக்கள், கமிஷனர்களுக்கு உத்தரவிட்டார்.
கமல் அலுவலகத்தை முற்றுகையிட்ட முஸ்லீம்கள் : இந்த நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் அலுவலகத்தை இந்திய தேசிய லீக் கட்சியினர் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
@ நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார்? அந்த ஆரிய கும்பலை சேர்ந்தவர்தான் இந்த கமல். தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ? இதை பற்றியெல்லாம் படமெடுக்க கேடுகெட்ட கமல், விஜய், மணிரத்னம், முருகதாஸ் போறவர்களுக்கு துணிவு இருக்கா ?.
1 comments :
இஸ்லாமிய தீவிரவாதம்! இந்து தீவிரவாதம்! சரியா?
http://www.sinthikkavum.net/2013/01/blog-post_25.html
விஸ்வரூபம் கமலஹாசனின் பரிணாம வளர்ச்சி!
http://www.sinthikkavum.net/2013/01/blog-post_2139.html
Post a Comment