Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, January 23, 2013

நிர்வாண ஆசிரியர்கள்! ஆவேசத்தில் மக்கள்!!

வால்பாறை அடுத்துள்ள காடம்பாறையில் பணிபுரிந்து வந்த மின்வாரிய இன்ஜினியர் சுப்ரமணியம், சமீபத்தில், செக்ஸ் புகாருக்கு உள்ளாகி கைதானார். இவரிடம் இருந்து எண்ணற்ற பெண்களின் ஆபாசப் படக் காட்சிகள், "சிடி'க்களாக பறிமுதல் செய்யப்பட்டன. இவரே வீடியோ எடுத்திருந்ததும் அம்பலமானது.

இந்த அசிங்கமே இன்னும் மறையாத நிலையில், அடுத்ததாக, வால்பாறை தாசில்தார் குணாளன் மீது, அலுவலகத்தில் தற்காலிக எழுத்தராக பணிபுரிந்து வந்த காளீஸ்வரி என்ற பெண், செக்ஸ் புகார் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார்.

இவ்விரு சம்பவங்களின் பரபரப்பே அடங்காத நிலையில், மூன்றாவது சம்பவமாக, பள்ளி ஆசிரியர், ஆசிரியையின் ஆபாச காட்சிப் படங்கள் இணையதளத்தில் வெளியாகி, போராட்டத்தில் மக்கள் குதிக்கும் அளவுக்கு, பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

கோவை மாவட்டம், வால்பாறையில், சோலையாறு எஸ்டேட் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது; 150 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர், வேறு ஒரு அரசு பள்ளியின் தலைமை ஆசிரியையுடன், நிர்வாணமாக இருப்பது போன்ற ஆபாசப் படங்கள், சமீபத்தில் இணையதளம் ஒன்றில் வெளியானது.

இது, இப்பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி, பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள், வால்பாறை - பொள்ளாச்சி மெயின் ரோட்டில், நேற்று காலை, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வால்பாறை இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, ஆபாச ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மக்கள் கோரினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக, அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து, பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் முனியசாமி மற்றும் பொதுமக்கள், ’’வால்பாறை, சோலையாறு எஸ்டேட் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் உதயன், 49, வேறு ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியையுடன், பள்ளி வகுப்பறையில் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள், இணையதளத்தில் வெளியாகியுள்ளன.

இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது, பள்ளியில் பயிலும் மாணவியருக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. எனவே, ஆபாச நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்’’என்று கூறினர்.

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவகாரம் குறித்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் காளிமுத்துவிடம் கேட்ட போது, இத்தகைய செயலில் ஈடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் இருவர் மீதும், துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து, விரைவில், "சஸ்பெண்ட்' செய்யப்படுவர்,'' என்றார்.

Reactions:

2 comments :

One main thing to remember.........it is VALPARAI...chill place

more s..x scandals are happening (IIIrd incident) it is better to
make married people to live a joint family. This is the only way to reduce such a scandals in chill area...

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!