புதுடெல்லி: திருட்டும், வழிப்பறியும் அதிகரிக்கிறது ஆகையால் திருட்டை ஒரு தொழிலாக அங்கீகரியுங்கள்! கொலை அதிகமாக நிகழுகிறது ஆகையால கொலைச் செய்ய அனுமதியுங்கள்! என்று கோரிக்கை விடுப்பது எவ்வளவு தூரம் அறிவீனமோ அதைப் போன்றதே பாலியல் வன்கொடுமைகளை தடுக்க பாலியல் தொழிலை அங்கீகரிப்பது என்பதை அறிவுடையோர் புரிந்துகொள்வர். ஆனால், தன்னார்வ தொண்டு என்ற பெயரில் இயங்கும் பாரதிய பதிதா உத்தார் சபாவுக்கு இதுவெல்லாம் புரியவா போகிறது.
பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் மேம்பாட்டுக்காக சேவை செய்து வருவதாக கூறும் பாரதிய பதிதா உத்தார் சபா வர்மா மத்திய குழுவுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பலாத்காரத்தால் டெல்லி மாணவி உயிரிழந்தது வருந்தத்தக்கது. பாலியல் தொழிலை சட்டப் பூர்வமாக அங்கீகரிக்காதது பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இந்தத் தருணத்தில் இந்தத் தொழிலை அங்கீகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். ஏற்கெனவே 164 நாடுகளில் பாலியல் தொழில் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.” இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்ததையடுத்து, பலாத்கார சட்டத்தை கடுமையாக்குவது குறித்து ஆலோசனை வழங்க, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் 3 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைகளை யார் வேண்டுமானாலும் அக்குழுவுக்கு அனுப்பலாம் என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
1 comments :
kodumai sir...
Post a Comment