அஹ்மதாபாத்: சமூக நீதிக்காக வழங்கப்படும் 5-வது அன்னை தெரசா சர்வதேச விருது குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோ(கே)டியால் பழிவாங்கப்பட்ட மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுக்குறித்து அன்னை தெரசா விருதுக்காக சஞ்சீவ் பட், தேர்வுச் செய்யப்பட்டுள்ள தகவலை வெளியிட்ட அன்னை தெரசா ஃபவுண்டேசனின் தலைவர் ஆப்ரஹாம் மத்தாய் கூறியிருப்பதாவது:
பாதுகாப்பற்ற சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக உறுதியாக நிற்கும் நபர் தாம் சஞ்சீவ் பட். அவருக்கு இவ்விருதை வழங்குவதில் திருப்தி அடைகிறோம் என்று மத்தாய் கூறியுள்ளார்.
அதேவேளையில், இவ்விருதை மரணித்த தனது தாயாருக்கு சமர்ப்பணம் செய்வதாக சஞ்சீவ் பட் கூறியுள்ளார்.விருது தனது நிலைபாடுகளுக்கான அங்கீகாரம் என்றும்,போராட்டத்தை வீரியத்துடன் எடுத்துச் செல்ல போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் மோடியின் பங்கினைக் குறித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த சஞ்சீவ் பட் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக மோடி அரசு அவரை பதவியில் இருந்து இடை நீக்கம் செய்திருந்தது.
இவ்விருது இதற்கு முன்பு திபெத்தின் ஆன்மீக தலைவர் தலைலாமா, மனித உரிமை ஆர்வலரும், பாகிஸ்தனின் முன்னாள் அமைச்சருமான அன்ஸார் பர்ணி, மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர்.மஹாதீர் முஹம்மது ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
1 comments :
தகவலுக்கு மிக்க நன்றி....
நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment