Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, June 27, 2012

சகுனி நாயகன் அரசியல் பிரவேசமா?

கார்த்தி நடித்த 'சகுனி' படம் கடந்த 22-ந்தேதி ரிலீசானது. மொத்தம் 1,154 தியேட்டர்களில் 'சகுனி' திரையிடப்பட்டு 'சிறுத்தை' படத்தின் வசூலை 3 நாட்களில் முறியடித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 'சகுனி' படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி தியாகராயநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது. விழாவில் கமலா தியேட்டர் அதிபர் வள்ளியப்பன் பேசும்போது, சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் கார்த்தி அரசியலுக்கு வர வேண்டும் என்றார். அதற்கு முன்னோட்டமாக அரசியல் படமான 'சகுனி'யில் நடித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

சென்னை, செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் பேசும்போது, கார்த்தி தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுத்து வருகிறார். அதற்காக அவர் அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. கார்த்தி அரசியலுக்கு வரக்கூடாது என்றார். நடிகர் நாசர் பேசும்போது, கார்த்தியை அரசியலுக்கு அழைக்க வேண்டாம் என்றார்.

பின்னர் கார்த்தி பேசிய தாவது: சகுனி' படத்தில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சிரித்து ரசித்து பார்க்கிறார்கள். வசூலில் எனது முந்தைய படத்தை விட பெரிய அளவில் சகுனி போய் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சகுனி அரசியல் கதையாக இருந்தாலும் வலுவாக அரசியலுக்குள் செல்லாமல் காமெடியாக நகர வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த உணர்வில்தான் இந்த படத்தில் நடிக்கவும் செய்தேன்.

படத்தில் ரஜினி, கமல் என பெயர் சொல்லி அழைப்பது ரசிக்கும்படி இருந்தது. ராதிகா, பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட அனைத்து கேரக்டர்களும் சிறப்பாக அமைந்தன. ஆக்ஷன் இல்லாமல் ஜாலியாக இருக்க ஆசைப்பட்டோம். அப்படியே கதை அமைந்தது. வெற்றியும் பெற்றுள்ளது, இவ்வாறு கார்த்தி பேசினார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!