கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவ, மாணவியரை, சீனியர் மாணவர்கள், "ராகிங்' செய்வதும், கிண்டல் கேலி செய்வதும், காலகாலமாக நடந்து வருகிறது. இந்த கிண்டலும், கேலியும் அதிகரித்து, ஒரு கட்டத்தில் தற்கொலை மற்றும் விபத்து, கொலை, ஆசிட் வீச்சு உள்ளிட்ட அசம்பாவிதங்களும் நடந்து விடுகின்றன.
நடப்பு கல்வியாண்டில், கல்லூரிகள் திறக்க உள்ள நிலையில், அனைத்து கல்லூரிகளிலும், "ராகிங்'கை தடுக்க, புகார் பெட்டி அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு உயர்கல்வித் துறை அமைப்புக்கும், தமிழக டி.ஜி.பி., தனிப்பட்ட முறையில், நடவடிக்கை எடுக்கக்கோரி, கடிதம் அனுப்பியுள்ளார்.
இதில் கூறியிருப்பதாவது:""கல்லூரிகளில் எக்காரணம் கொண்டும், ராகிங், கேலி, கிண்டல் உள்ளிட்ட எவ்வித செயல்பாடுகளாலும், மாணவ, மாணவியர் பாதிக்கப்படக் கூடாது. இதற்காக ஒவ்வொரு கல்லூரியிலும் முதல்வரின் அறை முன், "புகார் பெட்டி' ஒன்றை அமைக்க வேண்டும்.கல்லூரி முதல்வர் தலைமையில், "ராகிங்' தடுப்பு நடவடிக்கைக் குழு ஒன்றை அமைத்து, இப்புகார் பெட்டியில் மாணவ, மாணவியர் ரகசியமாக சேர்க்கும் கடிதங்களின் மீது, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் போலீசாரின் உதவியையும் முதல்வர் கேட்டுப் பெறலாம்.
மேலும், பேராசிரியர் தலைமையிலான, கண்காணிப்புக் குழு அமைத்து, கல்லூரியில், "ராகிங்' நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். "ராகிங்' உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் மாணவ, மாணவியர் மீது, போலீஸ் புகார் அளிக்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.''இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1 comments :
உங்கள் இணையத்தளத்துக்கு எளிதான முறையில் டிராபிக் பெறுவது எப்படி ?
Tamilpanel.com தளத்தின் மூலம் உங்கள் இணையத்திற்கு , மிக எளிதான முறையில் நூற்றுக் கணக்கான வாசகர்களை எளிதில் பெறலாம் .இதில் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில் நீங்கள் , ஓட்டுப் பட்டையோ , வாக்குகளோ அல்லது உங்கள் தளத்தின் செய்திகள் முன்னணி இடுகையாகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை
மேலும் விபரங்களுக்கு
http://www.tamilpanel.com/
நன்றி
Post a Comment