இவருக்கு கண் தெரியாது. நடக்க முடியாது. ஆனாலும் இவர் பிச்சை எடுக்கவில்லை. பிச்சை என்று சொல்வதை விட மற்றவர்களிடம் எதையும் எதிர் பார்த்து இருக்கவில்லை என்று சொல்லலாம். குற்றாலம் பேருந்து நிலையம் அருகில் நான் கண்ட அற்புதமான மனிதர். (முகநூல் செய்தி)
இவர் உழைத்து உண்கிறார். எப்படி என்று நினைக்கிறீர்களா.!!
அவருக்கு உடலில் மட்டும் தான் ஊனம் உள்ளத்தில் அல்ல. அவர் பேனா விற்கும் வியாபாரியாக இருந்து தன்னுடைய தேவைகளை நிறைவேற்றி கொள்கிறார்.
இன்று எத்தனையோ பேர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்து உழைத்துஉண்ண மறுக்கின்றனர். கை கால்கள் நன்றாக இருப்பவர்கள் கூட அடுத்தவர்களின் தயவை எதிர் பார்த்து இருக்கின்றனர். தன்னால் நடக்க முடியாத பார்க்க முடியாத நிலையிலும் உழைத்து சாப்பிடும் அவரை நினைக்கும் போது நிச்சயமாக அவரை பாராட்டியே ஆக வேண்டும்.
அவரிடம் சென்று இரண்டு பேனாக்களை வாங்கி கொண்டு 15 ரூபாயை கையில் கொடுத்தேன். ஒரு பேனா ஆறு ரூபாய் தான் என்று சொல்லி மீதி காசை என்னிடம் கொடுத்தார். அதற்கு நான் சில்லறையை நீங்களே வைத்துகொள்ளுங்கள் என்று சொன்னேன். அதற்கு அவர்..வேண்டாம் எனது பேனாவிற்கான விலையை மட்டும் கொடுங்கள் என்று சொல்லி வலுகட்டாயமாக சில்லறையை என் கையில் கொடுத்து விட்டார்.
அவரை நினைக்கும்போது என் மனதில் ஒரு உணர்ச்சிபெருக்கு தோன்றியது. பிறகு அவருக்கு ஒரு காபியும் வடையும் வாங்கி கொடுத்தேன். அதை குடித்து விட்டு மீண்டும் அவர் தனது பயணத்தை தொடர்ந்தார். தன்னம்பிக்கைதானே தாரக மந்திரம்.
2 comments :
போற்றப்பட வேண்டிய மனிதர்...
குற்றாலம் செல்பவர்கள் இவரிடம் கண்டிப்பாக பேனா வாங்கவும்..உழைப்பை மதிக்க வேண்டியது அவசியம்..
Post a Comment