Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, June 17, 2013

தலைவலிக்கு தானாக மருந்து எடுப்பது சரியா?

வலிப்பு நோய், தலைவலி, நரம்பு தளர்ச்சி, மறதிநோய், பக்கவாதம் ஆகிய நோய் குறித்த சந்தேகங்களுக்கு கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை நரம்பியல் நிபுணர் டாக்டர் அருள்செல்வன்  அளித்த பதில்கள் வருமாறு :  நரம்புதளர்ச்சி நோயின் அறிகுறிகள் என்ன?. நடை, பாவனை மெதுவாக இருக்கும். தள்ளாட்டம், தடுமாற்றம் ஏற்படும் அடிக்கடி கீழே விழுவார்கள். கை, கால் நடுக்கம், இறுக்கம் ஏற்படும்.

பக்கவாதம் ஏற்பட காரணம் என்ன? அவசர சிகிச்சை என்ன? ஒரு பக்க கை, கால் செயலிழத்தல் பக்கவாதம் எனப்படுகிறது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, சிகரட், மது பழக்கம், உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது. 70 சதவீதம் ரத்த ஓட்டம் தடைபடுவதாலும் 30 சதவீதம் ரத்த கசிவாலும் ஏற்படுகிறது. பக்கவாதம் ஏற்பட்டவர்களை நான்கரை மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு கொண்டு வந்தால் ரத்த ஓட்டத்தை சரிசெய்வதற்கான ஊசி மருந்தை போட்டால் பக்கவாதத்தை போக்க முடியும். காலதாமதமாக சிகிச்சைக்கு வந்தால் +பக்கவாதம் சரியாக பல மாதங்களோ, ஆண்டுகளோ ஆகும். அப்படியே ஆனாலும் முழுமையாக சரியாகாது. பக்கவாதம் வந்தவர்களை விரைந்து குறித்த காலத்திற்குள் சிகிச்சை எடுத்தால் 100 சதவீதம் சரியாகும். இவற்றிற்கு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம்.

வலிப்பு நோய் உள்ளவர்கள் அன்றாட வாழ்வில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள் என்ன?

உயரமான இடத்தில் வேலை பார்க்க கூடாது. அப்போது வலிப்பு வந்தால் கீழே விழுந்து படுகாயம் ஏற்படும். நீர் நிலைகளில் நீச்சல் அடிக்க கூடாது. நீச்சலடிக்க முடியாமல் உயிரிழக்க நேரிடும். நெருப்பு அருகில் இருக்கக்கூடாது. தீயில் சிக்கும் அபாயம் உள்ளது. விரதம் இருக்கக்கூடாது. இதனால் உடலில் சர்க்கரை அளவு குறைந்து மூளையில் மின் அதிர்வுகள் ஏற்பட்டு வலிப்பு ஏற்படும். தேவையான அளவு தூங்கி, நேரம் தவறாமல் உணவு உண்ண வேண்டும்.

வலிப்பு நோய் பரம்பரை நோயா: ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு பரம்பரையாக ஏற்படலாம்.நரம்பு தளர்ச்சி பரம்பரை நோயா: நரம்புத்தளர்ச்சி பெரும்பாலானோருக்கு வருவதற்கு காரணம் டோபமைன் எனும் வேதிப்பொருள் குறைவாக சுரப்பதால் வருவது. இதற்கு பரம்பரை காரணமல்ல.

என் வயது 45. ஒரு ஆண்டாக தலைவலிக்கிறது. சில இடங்களில் ஸ்கேன் செய்து பார்த்தோம் குறை எதுவும் தெரியவில்லை என்கிறார்கள்...வேறு காரணம் இருக்குமா?

மூளையில் வீக்கம் இருப்பது கூட தலைவலிக்கு காரணமாக இருக்கலாம். மூளையில் வீக்கம் இருப்பது சிலருக்கு ஸ்கேனில் தெரியாது. நரம்பியல் நிபுணரின் தேர்ந்த அனுபவத்தில் கண்ணில் லைட் அடித்து பார்த்தால் அதை கண்டுபிடிக்க முடியும். அதற்கு பின்னர் சிறப்பு ஸ்கேன் மூலம் மூளையின் வீக்கத்தை கண்டு பிடிக்கலாம். அதற்குரிய சிகிச்சைகளை மேற்கொண்டு மூளையின் வீக்கத்தை சரி செய்து, தலைவலியை போக்கலாம். மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் 2 உள்ளது. ஒரு ரத்தக்குழாய் மூளைக்கு செல்லும், மற்றொன்று மூளையிலிருந்து இதயத்திற்கு செல்லும். மூளையிலிருந்து இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் ஒரு இடத்தில் ரத்தம் உறைந்திருந்தாலும் தலை வலிக்கும். அதை கண்டு பிடிக்க வேண்டும். அப்படி இருந்தால் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்த்து அறுவை சிகிச்சை இல்லாமல் மருந்து மூலம் உறைந்த ரத்தத்தை கொஞ்சம், கொஞ்சமாக கரைத்து, ரத்த ஓட்டத்தை சீராக்கலாம். ஒரு வாரத்தில் குணமாகும்.

கருத்தடை மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு, அம்மாத்திரை ஏற்படுத்தும் பின்விளைவாக பெண்கள் சிலருக்கு மூளையிலிருந்து இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் ரத்தம் உறைவு ஏற்படும். முதலில் ரத்த உறைவை சீராக்கிய பின்னர், கருத்தடை மாத்திரை சாப்பிடுவதை தவிர்த்து மாற்று கருத்தடை முறைகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்குவோம். ஒரு ஆண்டுக்கு மேலாக தலைவலி இருப்பது மூளையில் வீக்கம், ரத்தக்குழாயில் ரத்தம் உறைவு காரணமாக இருக்க வாய்ப்புள்ளதால், உடனடியாக கே.எம்.சி.ஹெச்.நரம்பியல் நிபுணரை அணுகவும்.

நான் 2 மாதத்திற்கு முன்பு பைக்கில் செல்லும் போது கீழே விழுந்தேன். தலையில் லேசாக அடிபட்டது. வலி இல்லை. ஆனால் இப்போது சில நாள்களாக தொடர்ந்து வலிக்கிறது. தற்போதைய தலைவலிக்கு 2 மாதத்திற்கு முன்பு நடந்த விபத்து காரணமாக இருக்குமா?

சிலருக்கு விபத்து ஏற்படும் போது தலையில் அடிபட்டால் உடனடியாக எந்த பாதிப்பும் ஏற்படாது. 2 அல்லது 3 மாதத்திற்கு பிறகு மூளையில் ரத்தக்கசிவோ, கட்டியோ ஏற்படலாம். உடனடியாக நரம்பியல் நிபுணரை பார்த்து ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும்.

அதிக நேரம் கம்ப்யூட்டர், டி.வி.யை பார்த்து கொண்டிருந்தால் தலைவலி வருவது ஏன்?

அதிக நேரம் கண் விழித்து கம்ப்யூட்டரோ, டிவியோ பார்ப்பதால் கண்ணை சுற்றியுள்ள தசைகளுக்கு அதிக வேலைப்பளு ஏற்படும். தலையின் பக்கவாட்டு பகுதிகள், தலையின் பின்புற தசைகள் இறுக்கமடையும், டென்சன் ஏற்பட்டு தலைவலி வரும்.

தலைவலிக்கு மாத்திரைகள் தொடர்ந்து உட்கொள்வதனால் ஏதேனும் பின்விளைவுகள் உண்டா?

தலைவலி வந்தவர்கள் தானாக மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று, தாங்களாக சில மாத்திரைகளின் பெயர்களை சொல்லி வாங்கி சாப்பிடுகிறார்கள். அடிக்கடி சாப்பிட்டால் அந்த மாத்திரையின் பின்விளைவாக கிட்னியை பாதிக்கும். தலைவலி அடிக்கடி வந்தால் டாக்டரின் பரிசோதனைக்கு பின்னர், காரணங்களை கண்டறிந்து அதற்குரிய மாத்திரைகளை அவர் பரிந்துரைப்பார். அவற்றை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் தலைவலி வருவது தொடராது.

Reactions:

1 comments :

தலைவலி மட்டுமல்ல... காய்ச்சல் என்றாலும் தானாக மருத்துவம் செய்தால் பிரச்சனை தான்... பலருக்கும் உதவும் ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்கள்... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!