Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, June 20, 2013

அரசின் அயோக்கியத்தனமும் காவிகளின் கபோதித்தனமும்!?

அரசின் அயோக்கியத்தனத்திற்கும், காவிகளின் கபோதித்தனத்தையும் எடுத்துக்காட்டுவதே இப்பதிவின் நோக்கம். (காவிகளின் கரம் எப்படியெல்லாம் பரவி கிடக்கிறது மத சார்பற்ற நாடு என்று சொல்லிக்கொள்ளும் இந்தியாவில்?).

ஹைதராபாதில் "அஷ்-ஷிஃபா" என்ற பெயரில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் இப்ராஹீம் அலி ஜுனைத், போலீசின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க ஓடுகிறார்.. ஓடுகிறார்... போலீசின் மரணப் பிடியிலிருந்து மானவப்பருவத்திலிருந்­தே தப்பித்து??? ஓடிக் கொண்டே இருக்கிறார்.

நீரிழிவு நோய்க்கான மருந்துகளை சொந்தமாக தயாரித்து மருத்துவ சேவை செய்து வரும் யூனானி டாக்டரின் மருத்துவமனைக்குள் (நோயாளிகள் உள்ளே இருப்பதையும் பொருட் படுத்தாமல்) அதிரடியாக நுழைந்த இரண்டு புலானாய்வு அதிகாரிகள், சகட்டு மேனிக்கு கேள்விகள் கேட்டு, டாக்டரை நோயாளியாக்கி இருக்கையில் போட்டு விட்டு சென்றனர்.

சபாரி கோட் சூட்டுடன் வந்த இருவரில், ஒருவர் செல்போன் பேசிக் கொண்டும், மற்றவர் சிறிய அளவிலான நோட்டில் குறிப்பெடுத்துக் கொண்டும் இருந்தார்.

வந்தவர்கள், மிரட்டும் தொனியில் பல்வேறு கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்துச் சென்றுள்ளனர்.

தில்குஷ் நகர் குண்டு வெடிப்பை நடத்தியது யார்? பின்னணியிலிருப்பது யார் யார்?? மஜீத் என்பவர் தற்போது எங்குள்ளார்?

இந்தியாவை விட்டு மஜீத் எப்போது சென்றார்? தற்போது அவர் சவூதி அரேபியாவில் உள்ளாரா?? என பல கேள்விகளை எழுப்பினர், தேசிய புலனாய்வுத்துறை(NSA) அதிகாரிகாரிகள்.

மஜீத் என்ற இளைஞர், மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில், டாக்டர் இப்ராஹீம் அலியுடன் சேர்த்து (அநியாயமாக) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக கைதியாவார்.

இவர்களை கைது செய்தது தவறு, என்று உள்ளூர் காவல்துறை முதல் உள்துறை அமைச்சர் வரை (முஸ்லிம் இளைஞர்கள் அப்பாவிகள் என) ஊரறிய ஒப்புக் கொண்டு விடுதலை செய்யப்பட்டனர்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து மருத்துவமனையில்சேர்த்தவர், டாக்டர் இப்ராஹீம் அலி ஜுனைத்.

2007 மே மாதம் 18ந்தேதி ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடித்தது, மறுநாள் 19ந்தேதி, மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட உண்மை அறியும் குழுவில் இடம் பெற்று மக்களை சந்தித்து சம்பவம் குறித்த தகவல் சேகரித்து விட்டு வீட்டுக்கு திரும்பிய இவரை 20ந்தேதி கைது செய்தனர்.

7 நாட்கள் வரை சட்ட விரோத காவலில் வைத்து மிருகங்களை விட கொடுமையாக சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார்.

ஆந்திர உயர் நீதிமன்றத்தில் "ஆட்கொணர்வு" மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தி கைது செய்தனர்.

6 மாத சிறை வாசத்தின் காரணமாக மருத்துவ படிப்பின் இறுதியாண்டு தேர்வு எழுத முடியாத சூழல் ஏற்பட்டது.

உயர் நீதிமன்ற தலையீட்டை அடுத்தே, அவர் பரீட்சைக்கு அனுமதிக்கப்பட்டு முதல் வகுப்பில் தேர்வானார்.

2003ம் ஆண்டில், 18 வயது கூட நிறைவடையாத பள்ளிப் பருவத்திலேயே 3 மாதம் சிறைகொடுமைக்கு ஆளானவர் தான் இந்த டாக்டர்.

உள்ளூர் பாஜக எம்.எல்.ஏ.,வான "இந்திர சேன ரெட்டி" என்பவர், ரியல் எஸ்டேட் மாபியா கும்பலுடன் சேர்ந்துக் கொண்டு "வக்ப் வாரியத்துக்கு சொந்தமான" முஸ்லிம் கப்ருஸ்தானை ஆக்கிரமிக்க முயற்சித்தபோது,போராட்டத்தில் ஈடுபட்ட இப்ராஹீம் உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார், பாஜக எம்.எல்.ஏ.

முஸ்லிம்களின் மயான பூமியை ஆக்கிரமிக்கும் எண்ணத்துடன் அங்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலையை அகற்றக் கோரும் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு பாடம் கற்பிப்பேன் என அப்போதே கொக்கரித்தார், பாஜக எம்.எல்.ஏ.

அந்த வழக்கில் சிறை சென்று 3 மாத படிப்பு பாதிக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தாலும், அன்று முதல் போலீசின் தொடர் கண்காணிப்பிலிருந்து வரும் டாக்டர் இப்ராஹீம் அலி, சொல்லொண்ணா துயரத்துக்கு ஆளாகி வருகிறார். 

அடுத்தது இவர்? .... போலீசுக்கு விரைவில் இரையாகப் போகும் முஸ்லிம் மருத்துவர்??

Reactions:

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!