இந்திய மனைவியர் தங்கள் கணவரிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள். அதற்கேற்றபடி கணவர்குலம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளிப்பட்ட அம்சங்கள்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமா? எந்நேரமும் நீங்கள் ஓர் அடிமை (அன்புக்கு?!) என்பதை மறந்துவிடாதீர்கள். மனதளவில் அடிமை என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால் இதுதான் மகிழ்ச்சி என்ற எண்ணமும் தானாக வந்துவிடும்.
குடும்பத்தில் மனைவிதான் Boss. இதை மறந்துடாதீங்க பாஸூ. Boss is always correct என்பது முதலாளித்துவத்தில் மட்டுமல்ல, இந்தியக் குடும்பத்திற்குமான ’விதி’.
கணவர்களே, பேச்சைக் குறையுங்கள். மனைவி எப்போது என்ன பேசினாலும் அதனைக் கவனிக்க வேண்டியது உங்கள் வேலை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மனைவியர் தன்னைப் பற்றியே தன் கணவர் சிந்தித்துக்கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால் எப்போது என்ன யோசனையில் இருந்தாலும், “உன்னைப் பற்றித்தான் யோசித்துக்கொண்டிருந்தேன்” என்று சொல்லத் தயங்காதீர்கள். (அது பச்சைப் பொய் என்பது தெரிந்திருந்தாலும்).“இன்றைக்கு நாம வெளியிலே போகலாம்” என்று உத்தரவாதம் கொடுத்தீர்கள் என்றால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுங்கள். உங்களுக்கு அலுவலகம், அசைன்மென்ட், புராஜக்ட் என எதுவேண்டுமானாலும் முக்கியமாக இருக்கலாம். மனைவியருக்கு கணவன் கொடுத்த உத்தரவாதம்தான் முக்கியம். எனவே உணருங்கள்.

“பராவயில்லீங்க.. இன்னொரு நாள் நாம வெளியிலே போகலாம்” என்று மனைவியர் சொன்னால், அதனை கணவன்மார் உடனே அப்படியே நம்பி சும்மா இருந்துவிடக்கூடாது. மனைவியரின் ஒவ்வொரு சொல்லுக்குள்ளும் ஓராயிரம் பொருள் உண்டு. ஆம் என்றால் இல்லை என்றும், இல்லை என்றால் ஆம் என்றும் பல அர்த்தங்கள் உண்டு. அதனை சரியாகப் புரிந்துகொண்டு செயல்படுபவனே சரியாகக் கணவன் பணி செய்பவன்.
நீங்கள் ஒரு பெண்ணைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறீர்கள் என்றால் அது உங்கள் மனைவியாக மட்டுமே இருக்கவேண்டும். தன்னைப்போல திறமையான ஒரு பெண்ணைத் தன் கணவர் பார்த்திருக்கவே மாட்டார் என்பதுதான் இந்திய மனைவியரின் மனநிலை. எனவே, அலுவலகத்தில் உங்களுடன் பணியாற்றும் பெண்கள் பற்றியோ, ஃபேஸ்புக் இன்பாக்ஸில் வந்து உரையாற்றும் பெண்கள் பற்றியோ பெருமையடித்து, உங்களுக்கு நீங்களே சூன்யம் வைத்துக் கொள்ளாதீர்கள்.
மனைவிக்கு என்ன உடை பிடிக்கும், என்ன நிறம் பிடிக்கும், யார் நடித்த படம் பிடிக்கும், ஹோட்டலில் என்ன டிஷ் பிடிக்கும் என்பதையெல்லாம் தெரிந்து வைத்திருக்கவேண்டியது கணவன்மார்களின் கட்டாயக் கடமைகளில் ஒன்று. மனைவியருக்கு நேற்று ஒன்று பிடிக்கும். இன்று வேறொன்று பிடிக்கும். ஆனாலும் அவர் கேள்வி கேட்கும் நேரத்தில் அவருக்கு எது பிடிக்கும் என்று சொல்லக்கூடிய திறமையான யூகிப்பாளராக நீங்கள் இருக்கவேண்டும்.
மறந்தும்கூட உங்கள் குடும்பப் பெருமைகளைப் பேசாதீர்கள். உங்கள் அப்பா, அண்ணன், தம்பி இவர்களைப் பற்றி பேசுவதைத் தவிருங்கள். உங்கள் அம்மா, அக்கா, தங்கையின் பெருமைகளை மூச்சுவிடவே கூடாது. அதேநேரத்தில் உங்கள் மனைவி அவரது குடும்பத்தினர் பற்றிப் பேச ஆரம்பித்தால் அவர் நிறுத்தும்வரை நீங்கள் தடுக்கவே கூடாது. கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
மனைவியின் மனமகிழ்ச்சி என்பது கணவனின் பொருளாதார ஆற்றலை சார்ந்தது. நேற்று நீங்கள் வைரத்தில் தோடு வாங்கிக்கொடுத்திருக்கலாம்.
இப்படியிருந்தால் எப்படித்தான் கணவராகப் பணியாற்றுவது எனக் கவலைப்படுகிறீர்களா?
‘என் கணவர் எனக்கே எனக்கானவர்’ என்பதுதான் இந்திய மனைவியரின் மிகப்பெரும் பெருமிதமாக உள்ளது. அதனால் உங்கள் அன்பை வெளிப்படுத்தத் தயங்காதீர்கள். உனக்காகத்தான் வாழ்கிறேன் என்பதை சின்னச்சின்ன வெளிப்பாடுகள் மூலம் நிரூபியுங்கள். ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துங்கள். காசா, பணமா? அன்பான வார்த்தைகளால் உங்களை நிரூபியுங்கள். உண்மையான அன்புக்கு ஈடுஇணை ஏதுமில்லை. குடும்பத்தின் சிறந்த பணியாளர் விருது உங்களுக்குக் கிடைக்கும்.
1 comments :
பொய்யே பிரதானமாக இருந்தால் உடனே கண்டு பிடித்து விடுவார்கள் - இன்றைய படித்த பெண்கள்...
சில இடங்களில் நிலைமை தலைகீழாகவும் உள்ளது...!
Post a Comment