Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, July 28, 2013

பல்லை பாதுகாப்பது எப்படி?

அவசர உலகத்தில் நாம் சிலவற்றை சரியாக கவனிக்க மறந்துவிடுகிறோம் அதில் பல்லும் ஒன்று அதை பேணுவது எப்படி.

கடைப்பிடிக்க வேண்டியவை:
1. தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். குறைந்தது இரண்டு நிமிடங்கள் மிருதுவான பல் துலக்கியைக் கொண்டு ஈறுகளில் முன்னும் பின்னுமாக இல்லாமல் 45 டிகிரி சாய்த்துப் பிடித்து மெதுவாகச் சுழற்றி துலக்க வேண்டும்.

2.  தவறாமல் உணவுக்குப் பின் வாயை அலசி படுக்கைக்குச் செல்லும் முன் பல் துலக்கும் பழக்கத்தைக் கொண்டு வரவேண்டும்.

3. தினமும் நாக்கைத் துலக்குவதுடன், ஈறுகளை குறைந்தது ஒரு நிமிடமாவது விரல்களால் மிருதுவாக அமுக்கி (மஸாஜ்) விடவேண்டும்.

4.  மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது பல்துலக்கியை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.

5. குளிர்பானங்களுக்கு பதிலாக அதிக அளவு தண்ணீர் அருந்துவதுடன் சத்தான கால்சியம், கனிமம், ஆரோக்கியமான வைட்டமின்கள் கொண்ட பால் பொருட்கள், கேரட், ஆப்பிள் போன்ற உணவுகளை உட்கொள்ளவேண்டும்.

6. பச்சிளங்குழந்தைகளுக்கு பால் கொடுத்த பின் மென்மையான ஈரத்துணியைக் கொண்டு குழந்தை வாயின் ஈறுகளைத் துடைத்து பற்களைப் பாதுகாத்திட வேண்டும்.

7. ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் பல் மருத்துவ நிபுணரிடம் பற்களை பரிசோதித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை:
1. ஈறுகள் பழுதாகும் விதமாக தீவிரமாக பல் துலக்குதல், கடுமையான பல்துலக்கியைப் பயன்படுத்துதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

2.அமிலம் கலந்த உணவுகள், பெப்சி, கோலா போன்ற மென்பானங்களைத் தவிர்ப்பதுடன், இனிப்பு மிகுந்த உணவுகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

3.குழந்தைகளுக்கு பால் புட்டியில் பழச்சாறு கொடுப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

4.பச்சிளங்குழந்தைகளுக்கு உறங்கும்பொழுது பால், பழச்சாறு ஆகியவற்றை புட்டியில் வைத்து புகட்டும் பழக்கம் வேண்டாம். உணவு ஊட்டிய பின் தண்ணீர் கொடுத்து தூங்க வைக்கவேண்டும்.

5.எக்காரணத்தைக் கொண்டும் பற்களைக் கொண்டு பாலித்தீன் உறைகள், புட்டி மூடிகளைத் திறக்க வேண்டாம்.

6.  பல் வலி ஏற்படும்பொழுது விக்ஸ், கோடாலித் தைலம், ஜண்டு பாம் போன்ற வலி நிவாரணக் களிம்புகளை முகத்தில் தேய்த்தல் கூடாது..

1 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!