Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, July 22, 2013

ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிந்தான்?
ஆயுதம் ஏந்தியவன் ஆயுதத்தால் அழிந்தான்?


அன்பிற்கினிய சொந்தங்களே இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக தொடர்ந்து கீழ்தரமான பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுக்கொண்டும், அதன் படி செயல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தேசபக்த அமைப்பை பற்றி தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

மக்கள் பிரச்சனையை பேச சட்ட சபைக்கு அனுப்பினால் அங்கு அமர்ந்துக்கொண்டு ஆபாச படம் பார்ப்பதும், அமைச்சர் என்ற பெயரில் விபச்சாரத்தில் ஈடுபடும் பா.ஜா.காவையும், அதன் தாய் அமைப்பு என சொல்லப்படும் பயங்கரவாத அமைப்பான RSS அமைப்பை பற்றியும் இங்கு நான் கொஞ்சம் சொல்ல நினைக்கிறேன். 

நீங்கள் இந்த புகைப்படத்தில் பார்ப்பது RSS அமைப்பை சேர்ந்த 
பயங்கரவாதி ஒருவன் அப்பாவிகளை வெடிக்குண்டு வைத்து கொல்வதற்காக பயங்கரமான வெடிகுண்டுகளுடன் மோட்டார் சைக்கிளில் போகும் போது எதிர்பாராத விதமாக வெடித்து அவன் இறந்த செய்தியே.

இந்த காவி பயங்கரவாதிகளின் வரலாறு தான் என்ன,. தேச தந்தை காந்தியை கொன்றது முதல், இன்றைக்கு நடக்கும் குண்டுவெடிப்புகள் வரை அனைத்திற்கும் இந்த RSS அமைப்பு தான் முழு பொருப்பு என்பதை யாராலும் மறுக்க முடியுமா?

ஆனால் இவர்கள் அனைத்து சம்பவங்கலிலும் முதலில் தப்பித்து விட்டு இறுதியில் குட்டு உடைந்து மாட்டிக்கொள்வது தான் இவர்கலின் ஈனச்செயல்.

இந்தியாவில் மூன்றுமுறை தடை செய்யப்பட்ட அமைப்பு என்று இதை சொன்னால் நம்புவீர்களா நம்பி தான் ஆக வேண்டும். அவ்வளவு பயங்கரமானவர்கள் இந்த காவி தீவிரவாதிக
ள்.

எடுத்துக்காட்டாய் இந்தியாவில் நடந்த சில குண்டு வெடிப்புகளை பார்ப்போம்:

அஜ்மீர் தர்காவில் அக்டோபர் 11, 2007ல் குண்டு வெடித்து 3 பேர் கொல்லப்பட்டனர். இது ஹூஜி, எல்-இ-டி அமைப்புகளைச் சேர்ந்த ஜிகாதி பயங்கரவாதிகளின் கைவண்ணம் என்ற புலனாய்வு அதிகாரிகளின் கதையை பத்திரிகைகளும் ஆர்வத்துடன் பரப்பி வந்தன. கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் ஹபீஸ் ஷமீம், குஷிபுர் ரஹ்மான், இம்ரான் அலி ஆகியோர் அடங்குவர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தான் போலீஸ் தேவேந்திர குப்தா, விஷ்ணு பிரசாத், சந்திரசேகர் பட்டிதார் என்ற மூன்று பேரை கைது செய்தது. Rss உறுப்பினரான குப்தாதான் அந்த குண்டை வெடிக்கச் செய்த மொபைல் தொலைபேசியையும் சிம் கார்டையும் வாங்கினார் என்று தெரிய வந்தது. குண்டு வெடிப்புக்கு சில வாரங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட சுனில் ஜோஷி திட்டமிட்டவர்களில் முக்கியமானவர் என்று அறிவிக்கப்பட்டது.

பெங்களூர் குண்டுவெடிப்பும் மொபைல் மூலம் வெடிக்க வைக்கப்பட்டதே. அதற்கு இன்னும் விசாரனை முடியவில்லை.

ஹைதராபாத் மே 18, 2007ல் ஹைதராபாத் மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் 14 பேர் கொல்லப்பட்டனர்; 50 பேர் காயமடைந்தனர்.’உள்ளூர் உதவியுடன் ஹர்கத்-உல்-ஜிகாத்-எ-இஸ்லாமி (HuJI) என்ற அமைப்புதான் இதைச் செய்திருக்க வேண்டும்’ என்று ஹைதராபாத் போலீஸ் சொன்னது. 80 முஸ்லீம்கள் அடைத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு 25 பேர் குற்றம் செய்ததாக ஒத்துக் கொள்ள வைக்கப்பட்டனர்.ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு, ‘அஜ்மீர் குண்டு வெடிப்பிலும் மெக்கா மசூதி குண்டு வெடிப்பிலும் ஒரே மாதிரியான மொபைல் போன்-சிம் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருந்தன’ என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்தது. ‘பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ்-டி.என்.டி. வெடிமருந்து கலவை இந்திய இராணுவத்தில் பயன்படுத்தும் விகிதத்திலானது’ என்றும் தெரிய வந்தது. இப்ராஹிம் ஜூனைத், ஷோயிப் ஜாகிர்தார், இம்ரான் கான், முகமது அப்துல் கலீம் உள்ளிட்ட பலர் விடுதலை செய்யப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திரா கல்சங்காரா பற்றிய தகவல் சொல்பவர்களுக்கு ரூ 10 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என்று ஜூன் 2010ல் போலீஸ் அறிவித்தது. லோகேஷ் ஷர்மா என்பவர் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவை அச்சுறுத்தும் காவி பயங்கரவாதிக
ளின் அசிங்கம் மற்றும் அயோக்கியத்தனங்களை இனி வரும் காலங்களில் தேசபக்த முகத்திரையை கிழித்து இதன் பயங்கரவாத நடவடிக்கையை மக்கள் முன்னிலையில் வைப்போம். 

Reactions:

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!