பீஜிங்: ஐஃபாடும், ஐஃபோனும் வாங்குவதற்கு சீனாவில் 17 வயது இளைஞன் ஒருவன் தனது சிறுநீரகத்தையே விற்றுள்ளான். இச்சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் நடத்திய விசாரணையில் டாக்டர் உள்பட ஐந்து பேர் கைதானார்கள். சின்குவா செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
வாங் என்ற 17 வயது இளைஞனுக்கு ஐஃபோன், ஐபாட் மீது அதீத மோகம். ஆனால், அவற்றை வாங்க அவனிடம் பணம் இல்லை. இந்நிலையில் ஆன்லைன் சாட்டிங் மூலமாக இவனது ஆசையை அறிந்துகொண்ட சிறுநீரக வர்த்தக மாஃபியா கும்பல் சிறுநீரகத்தை விற்றால் 35 ஆயிரம் டாலர் தருவதாக ஆசையை தூண்டியது.
ஐஃபோன், ஐபாட் மோகத்தால் இறைவன் தனக்கு அளித்த சிறுநீரகத்தையும் விற்க தயாரானான் வாங்.
பின்னர் அக்கும்பல் இவ்விளைஞனை கடந்த வெள்ளிக்கிழமை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து அறுவைசிகிட்சை மூலம் சிறுநீரகத்தை எடுத்துக்கொண்டது. ஆனால், அவ்விளைஞனுக்கு 3 ஆயிரம் டாலர் மட்டுமே அளித்து ஏமாற்றிவிட்டது.
அறுவை சிகிட்சைக்கு பிறகு இளைஞன் நோய் வாய்ப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீனாவில் உறுப்பு மாற்று அறுவை சிகிட்சை 15 லட்சம் நபர்களுக்கு தேவையாகும். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் அறுவை சிகிட்சைகள் மட்டுமே நடப்பதாக சின்குவா கூறுகிறது. இதனால் சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளது என்று செய்தி நிறுவனம் கூறுகிறது.
அண்மையில் சீன பள்ளிக்கூடங்களில் புத்தகங்களுக்கு பதிலாக ஐபாட் உபயோகிக்க அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.
0 comments :
Post a Comment