வாஷிங்டன்:சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு தொப்பை ஏற்படுவதற்குக் காரணமான மரபணுக்களைக் கண்டுபிடித்துவிட்டார்கள்.
அமெரிக்காவின் பிலெடெல்பியா நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர்கள் ஸ்ட்ரூவான் கிராண்ட் தலைமையில் இந்த ஆய்வை மேற்கொண்டு வெற்றி கண்டுள்ளனர். இந்த முடிவுகள் ""நேச்சர் ஜெனடிக்ஸ்'' என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
ஐரோப்பிய, ஆஸ்திரேலிய, வட அமெரிக்கக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வு இதற்கு முன்னதாக 14 முறை மேற்கொள்ளப்பட்டது. சிறு குழந்தையிலேயே தொப்பை இருந்த 5,530 சிறார்கள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டனர்.
தொப்பைக்குக் காரணமான 2 மரபணுக்களைக் கண்டுபிடித்ததுடன் 2 மரபணு மாறிலிகளையும் அடையாளம் கண்டுள்ளனர்.
தொப்பையைக் குறைப்பதற்கான மரபணு சிகிச்சை முறைகளுக்கு இந்த ஆய்வுகள் வெகுவாகப் பயன்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது., இனி சில ஆய்வுகளை மேற்கொண்டு தொப்பை வராமல் இருக்க சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிப்பார்கள் என்று தெரிகிறது.
0 comments :
Post a Comment