லண்டன்: மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்கு கண்ணாடி மற்றும் ராட்டை உள்ளிட்ட பொருட்கள் லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது.
டில்லியில், 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி காந்தியடிகள், ஆர் எஸ் எஸ் தீவிரவாதி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் போது குண்டு துளைத்ததால், அவர் உடலில் இருந்து சிதறிய ரத்தம் அங்குள்ள புல்களின் மீது படிந்தது. இதை அவருடன் இருந்த பி.பி.நம்பியார் சேகரித்து வைத்திருந்தார்.
காந்திஜியின் ரத்த கறை படிந்த புல், புல்லில் இருந்த மண் ஆகியவற்றை ஒரு பெட்டியில் புனிதமாக சேகரித்து வைத்திருந்தார் நம்பியார். இதேபோல காந்தி பயன்படுத்தி வந்த ராட்டை, மூக்கு கண்ணாடியையும் அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வந்தார்.
தற்போது இந்த பொருட்கள் லண்டனில் ஷ்ராப்ஷையர் பகுதியில், "முல்லக்' ஏல நிறுவனத்தால், வரும் 17ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது. மகாத்மாவின் உடமைகளான இவை 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பவுண்டுகள் வரை ஏலம் போகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஹிந்துத்துவா, (ஆர் எஸ் எஸ்) தீவிரவாதத்தின் ஊற்றுகன் என்பதை இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்ளலாம்., (காந்தியை கொன்ற தீவிரவாதி கோட்சேதான் என்று நிரூபணமானதும் ஆர் எஸ் எஸ் கோட்சேவை கழட்டிவிட்டது வேறுவிசயம்)
0 comments :
Post a Comment