Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, April 20, 2012

சேது சமுத்திர திட்டத்துக்கு எதி(ரி)ரானவர்கள் இவர்கள்!?


புதுடெல்லி: சேது சமுத்திரம் தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்து நீதிமன்றமே முடிவுச் செய்யலாம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.

கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து மற்றும் அனில் ஆர் தாவே ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு அரசு நிலைப்பாட்டை தெரிவித்தனர்.

“சேது சமுத்திரத்தை தேசிய சின்னம் ஆக அறிவிப்பதில் மத்திய அரசின் நிலை என்ன?” என்று ஹரேன் ராவலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், “சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் 2008-ம் ஆண்டில் மத்திய அரசு ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதில், ‘மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை சரியா, தவறா என்பது போன்ற விவாதத்தில் மத்திய அரசு கருத்து கூறுவது சரியாக இருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளது. இப்போதும் அதே நிலையில்தான் மத்திய அரசு உள்ளது. அதனால், சேது சமுத்திரம் குறித்து புதிதாக கருத்து தெரிவிக்க ஒன்றும் இல்லை. மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக நீதிமன்றம் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம்” என்று பதில் அளித்தார்.

அவரது பதிலையே ‘மத்திய அரசின் கருத்து’ என நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர். இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணையை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

சேது சமுத்திரம் கப்பல் போக்குவரத்து திட்டத்திற்கு முதல் தடையிட்டது ஜெயாலலிதா, சுப்ரமணியம் சுவாமி, ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மற்றும் பார்ப்பனர்கள், பார்ப்பன நாளேடுகள் மட்டுமே இத்திட்டத்திற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர் என்பது குறுப்பிடத்தக்கது., நினைவு சின்னமாக்க துடிக்கும் இவர்கள் இத்திட்டத்தை தொடங்க ஏன் தடைபோடுகிறார்கள்!?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!