துபாய்: மினி உலகக் கோப்பை என்றழைக்கப்பட்ட 50 ஓவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிட்யை 2013-ம் ஆண்டுடன் முடிவுக்கு கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி முடிவு செய்துள்ளது.
2015-ம் ஆண்டு முதல் டெஸ்ட், ஒருநாள், இருபது ஓவர் என ஒவ்வொரு போட்டிக்கும் ஒரே சாம்பியன்ஸ் டிராபிதான் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன் டிராபியை கைவிட ஐசிசி முடிவு செய்துள்ளது.
2017-ம் ஆண்டு முதல் உலகக் கோப்பை டெஸ்ட் போட்டி அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப் போட்டி நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது. அதனால் 2013-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டிகளின் அட்டவணையில் இருந்து சாம்பியன்ஸ் டிராபி போட்டி நீக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமைச் செயல் அதிகாரி ஹாரூண் லோர்கட் கூறுகையில், “கிரிக்கெட் அட்டவணையைப் பார்த்தீர்களானால் அதில் சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை இருக்காது. எதிர்காலத்தில் அந்தப் போட்டியை நடத்துவதில்லை என்று கைவிட்டுவிட்டதே அதற்குக் காரணம். டெஸ்ட் போட்டியில் உலகச் சாம்பியன் பட்டத்துக்கான போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.
2013-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி போட்டி இங்கிலாந்தில் நடைபெறுகிறது. அதுதான் கடைசி சாம்பியன்ஸ் டிராபி. இந்தப் போட்டி 1998-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1998, 2000, 2002, 2004, 2006, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது.
1 comments :
Nice post ... it is published in front page of
Tamil DailyLib.
Please add the Vote button also for easy posting and voting
To get the Vote Button
தமிழ் DailyLib Vote Button
Post a Comment