ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். பெங்களூரு அவரது சொந்த ஊர். ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு, "பென்ஸ்' மோட்டார் தொழிற்சாலையில், "பிட்டர்' ஆக வேலை செய்கிறார். உடைந்த தமிழில் பேசுவார்.
பிட்டராக இருந்தாலும் விபவரமானவர்; பல சப்ஜெக்ட்களிலும் ஞானம் உள்ளவர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, பலஅரிய தகவல்கள் கிடைத்தன.
அது தம்பி... இப்போது இந்தியாவுலே பென்ஸ் கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது. ஆஹா ஜெர்மன் நாட்டு கார்ன்னு பணக்காரங்களும், பெரிய தொழில் அதிபர்களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்கறாங்க. இந்தக் கார்ல இருக்கிற பல முக்கியமான பாகங்கள், கியர் பாக்ஸ் உட்பட, இந்தியாவுலே, "டாட்டா' கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது. நாங்க, அதை அங்கே பூட்டி, பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்!.
இதுக்கு காரணம் என்ன தெரியுமா? ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு தான் ஆகிறது இந்தியாவில். நாங்கள், எங்களுக்குத் தேவையான டிசைன் மற்றும் மூலப் பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்... இங்கே லேபர், "சீப்!' அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, "அட்வான்டேஜ்' ஆகிப் போகிறது.
இந்தியாவில் லேபர் எவ்வளவு, "சீப்' என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்க தம்பி...' என்றவர், தம் சட்டைப் பையில் இருந்து, ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக் காட்டினார்.
ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமெரிக்க தொழிலாளியை வேலைக்கு அமர்த்தலாம்... இல்லே, தைவான் நாட்டுத் தொழிலாளி ஐந்து பேரையோ, பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும். ஆனா, இந்தியாவின் கதையோ அபாரம்... ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் 128 இந்திய தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்ன்னா பாரேன்.
இந்திய தொழிலாளியின் குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 25 ரூபாய்ன்னா, ஜெர்மன் தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்! அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள், புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்டத் தயங்கப் போறாங்க.
கடந்த, 20 ஆண்டுகளில், இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர் ஜெர்மானியர்கள்... ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால், சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த, ஜெர்மன் சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இங்கு வந்துள்ளன,' என்றார் அந்த நண்பர்.
புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் வெளிநாட்டு மூலதனத்தை இங்கே குவிப்பதை மட்டுமே அரசு கருத்தில் கொள்ளாமல், நம்நாடு குப்பைத் தொட்டிகளின் சங்கமமாகாமல் பார்த்துக் கொள்வதும் மிக, மிக அவசர அவசியம்.

2 comments :
Mmm...
128 பேர்கள்...!
உழைப்பிற்கேற்ப ஊதியம் என்றும் இருந்ததில்லை... ம்...!
Post a Comment