Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, January 15, 2014

அழிவின் அடையாள தமிழக அரசு!?

குடிநீரை அரசு விற்பது என்பது சரிவின் துவக்கம். மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவது அரசின் கடமை. அதற்கு வழியில்லை என்று அரசே ஒத்துக்கொள்வதுதான் மலிவுவிலை குடிநீர் வழங்கும் முடிவு. 

தனியார் கம்பெனிகளுடன் போட்டிபோட்டு நான் குறைந்த விலையில் தண்ணீர் தருகிறேன் என்று அரசு கூறுவது அழிவின் அடையாளம். 

மத்திய அரசின் தேசிய நீர்க்கொள்கையின் வரைவை வாசித்துப் பார்த்தால் ஏற்படும் அதிர்ச்சி சொல்லிமாளாது. நீரை தனியார்மயமாக்குவதை எதிர்க்கும் நாம் நீரை விற்பனைப் பண்டமாக்க அரசே முயல்வதை அதைவிட இருமடங்கு எதிர்க்க வேண்டும். மக்களை இப்படிப் பழக்கப்படுத்திவிட்டால், நீர் அரசியலை எளிதாகச் செய்யலாம் என்பது அரசுகளின் திட்டம். அதற்கு நாம் இரையாகிவிடக் கூடாது.  

மக்களின் நுகர்வு மனநிலையை குறிவைத்து நடக்கும் இந்த வியாபாரத்தை செய்வது அரசுக்கு அழகல்ல. தந்திரத்தின் ஒரு பகுதியே இது. குடிநீர், மருத்துவம், கல்வி இவற்றை இலவசமாக அளிக்க முடியாத ஓர் அரசு கையாலாகாத அரசு.

ஆனால்., நம் ஊரில் இம்மூன்றுமே தான் முக்கியமான வியாபாரம். இன்னும் என்னவெல்லாம் மலிவு விலையில் கிடைக்கப்போகிறதோ? இலவசமாய் தரவேண்டியவற்றை காசு கொடுத்துவாங்க வைப்பதும், காசு கொடுத்து வாங்கவேண்டியவற்றை இலவசமாய் வாங்க வைப்பதுமான அரசு தான் நமக்கு வாய்த்திருக்கிறது.

பாசிசத்தின் காரிருள் இந்நாட்டின் ஆட்சி, அதிகார, நீதி, ஊடக துறைகளையெல்லாம் சூறையாடி வரும் வேளை..!?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!