Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, August 3, 2013

முக்கிய முடிவெடுக்கும் முதலைகள்!?

டெல்லி: ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பிஜேபி இருந்தாலும் முடிவுகளை எடுப்பது கார்ப்பரேட் நிறுவனங்களே என்று தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் பணத்துக்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நாட்டை விற்பதாக, குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெய்பால் ரெட்டியிடம் இருந்து பெட்ரோலியத்துறை பறிக்கப்பட்டதற்கு ரிலையன்ஸ் நிறுவனமே காரணம் என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பெட்ரோலிய அமைச்சராக யார் வருவது என்பதை ரிலையன்ஸ் நிறுவனம் தான் தீர்மானிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் அரசுகள் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவது ஏன் என கேள்வி எழுப்பினார். காங்கிரசும், பாரதிய ஜனதாவும் முகேஷ் அம்பானியின் சட்டைப்பையில் இருப்பதாக சாடினார்.

பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்த, ஜெய்பால் ரெட்டியை, அந்த பொறுப்பிலிருந்து அகற்ற காரணம், ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியே. கிருஷ்ணா – கோதாவரி பேசின் பகுதியில் ரிலையன்ஸ் எடுக்கும் எரிவாயுவுக்கு அதிக விலை கேட்டு, அதற்கு ஜெய்பால் அனுமதி அளிக்காததால் தான், அவருக்கு அறிவியல் தொழில்நுட்ப துறை வழங்கப்பட்டது. மணிசங்கர் அய்யர், ஜெய்பால் ரெட்டி தவிர்த்து, பிற பெட்ரோலிய அமைச்சர்கள், அம்பானிக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளனர். குறிப்பாக, முரளி தியோரா, நிதியமைச்சராக இருந்த, பிரணாப் முகர்ஜி ஆகியோர், ரிலையன்ஸ்சுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, காஸ் விலையை அம்பானி உயர்த்தியுள்ளார். அதற்கு, ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்கள் உதவி செய்துள்ளனர்.

அமைச்சர்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் தான் தேர்ந்தெடுக்கின்றனர். தொலை தொடர்பு அமைச்சரை, டாடா நிறுவனம் நியமிக்கிறது; பெட்ரோலிய அமைச்சரை ,ரிலையன்ஸ் நிறுவனம் நியமிக்கிறது. இது தான், இந்த நாட்டின் லட்சணம். பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஊழல் செய்பவர்களுக்கு உதவுவதும் குற்றமே; அந்த வகையில், பிரதமர் மீதும் வழக்கு பதிவு செய்யலாம். எனவே, ரிலையன்ஸ் நிறுவனத்தின் அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கெஜ்ரிவால் வலியுறுத்தினார். சக்திவாய்ந்த முதலாளிகள்தான் மத்திய அரசை வழிநடத்துவதாக அவர் விமர்சித்தார்.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள ரகசிய தொடர்பு:

முன்னதாக அவர், ஆடியோ டேப் ஒன்றை போட்டுக் காட்டினார். அரசியல் தரகர், நீரா ராடியாவுக்கும், முன்னாள் பிரதமர், வாஜ்பாய் மருமகனுக்கும் இடையே நடந்த, போன் உரையாடல் அது. அதில், தயாநிதிக்கு, தொலை தொடர்பு துறை அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி என்பது பற்றி பேசப்பட்டிருந்தது. அமைச்சர் பதவி குறித்து, தி.மு.க., மேலிடம், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம், நேரடியாக பேரம் பேசிய விவரங்களை, நீரா ராடியாவும், வாஜ்பாய் மருமகன், ரஞ்சன் பட்டாச்சார்யாவும், தங்கள் போன் உரையாடலில் பேசிய விவரங்கள், அதில் இடம் பெற்றிருந்தன. அந்த உரையாடலில், காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான, குலாம் நபி ஆசாத்திற்கும், தனக்கும், ஹாட் லைன் தொடர்பு இருப்பதாக, ரஞ்சன் பட்டாச்சார்யா கூறுகிறார். இரண்டாவது, டேப் உரையாடல், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர், முகேஷ் அம்பானி தொடர்பானது. அதில் பேசிய, ரஞ்சன் பட்டாச்சார்யா, காங்கிரசும் என் சொந்த கடை போன்றது தான் என, பேசுகிறார்.

பின்னர் பிரபல வழக்கறிஞருமான, பிரஷாந்த் பூஷனுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த கெஜ்ரிவால்; “ நீரா ராடியா போன் உரையாடல், இந்த நாட்டின் உண்மையான நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் உள்ள கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள ரகசிய தொடர்புகளை அம்பலம் ஆக்குகிறது. இந்த நாட்டை, கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் தான் ஆள்கின்றனர். காங்கிரசுக்கு ஓட்டு போட்டாலும், பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு போட்டாலும், முடிவெடுப்பது நிறுவனங்களின் தலைவர்களே.” என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!