"துப்பாக்கி" திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம் பெற்றுள்ளது இந்திய புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், மத்திய திரைப்பட தணிக்கைக்குழு என திரைப்படம் தொடர்பான அனைத்து அமைப்புகளுக்கும் 29.11.2011 அன்று தமிழ்நாடு அரசின் பொதுச் சுகாதாரத்துறை எழுதிய கடிதத்தில்
திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.26-03-2012 அன்று கேரள உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணையை
செயல்படுத்த உத்தரவிடப் பட்டுள்ளது.
இந்நிலையில் பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் சௌமியா அன்புமணி கொடுத்துள்ள புகாரில் “ இவ்வாறாக, நடுவண் அரசு, தமிழ்நாடு அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத் துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை
கட்டுப்படுத்தும் நடுவண் அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படிக் குறறம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது
அதிர்ச்சி அளிக்கிறது. எனவே ‘துப்பாக்கி’ திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குநரும், நடிகரும் இத்திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறாமல் தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய அரசு புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை முழுமையாக பின்பற்ற வேண்டும்
என்றும் பசுமைத் தாயகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார். அஜித் நடித்த அசல் படத்திலும் இதேபோல் புகையிலை பயன்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அஜித் படத்திற்கு வராத பிரச்சனை விஜய் நடித்துள்ள படத்திற்கு வந்துள்ளது.
அஜித்தை கண்டுகொள்ளாத சட்ட பிரச்சனை, விஜய் மீது மட்டும் ஏன் இந்த கொலவெறி....? (படத்திலிருந்து சிகரெட் பிடிக்கும் காட்சியை நீக்கிய இயக்குனர் நடிகர் மற்றும் தயாரிப்பாளருக்கு ஒரு "ஒ" போடுவோம்)
1 comments :
ஊரான் பிள்ளை தப்பு செஞ்சா கண்டிப்பமா? ஆனா நம்ம பிள்ளை தப்பு செஞ்சா கண்டிப்பம்ல அதுபோலதான் இதுவும்
Post a Comment