மாப்பிள்ளை படம்மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கொழுக் மொழுக் நடிகை ஹன்சிகா. தொடர்ந்து எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற படங்களில் நடித்த ஹன்சிகா இப்போது, சிம்புவின் வேட்டை மன்னன், வாலு படங்களிலும், சிங்கம்-2 விலும் நடித்து வருகிறார்.
சின்ன குஷ்பு என்று வர்ணிக்கப்படும் ஹன்சிகாவுக்கு ஒரு கவலை. அதாவது சமீபகாலமாக தனது உடல் எடை அதிகரித்து வருகிறது என்பது தான். ஸ்லிம் நடிகைகளுக்கு மத்தியில் குண்டான தனது உடம்பால் வாய்ப்புகள் பறிபோய்விடும் என்று பதறிய ஹன்சிகா, தனது உடல் எடையை குறைக்க முடிவெடுத்து இருக்கிறார்.
இதற்காக அவர் அமெரிக்கா பறந்து இருப்பதாக கூறப்படுகிறது. இனி யாரும் தன்னை கொழுக் மொழுக் நடிகை என்று கூப்பிடாத அளவுக்கு தனது எடையை குறைத்து திரும்ப இருக்கிறாராம்., விரைவில் கொழுக் மொழுக் ஹன்சிகா, ஸ்லிம் ஹன்சிகாவாக திரும்பி வர இருக்கிறார்.







1 comments:
nice post
Post a Comment