Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, June 28, 2014

ஆப் கீ பார் ஆப்பு வைச்சான் பார்!?

ஆப் கி பார் மோடிக்கா சர்க்காரே தான் வேணும்ன்னு ஓட்டுப்போட்டவிங்க எல்லாம் இப்ப இஞ்சித் திண்ண குரங்கு மாதிரியே முழிக்கிறாங்க. 

எலக்‌ஷனுக்கு முந்தி பத்து பேர் கூடி நின்னு பேசற வாய்ப்பிருக்குற இடத்துல எல்லாம் வாண்டனா ஒரு ஆள் மோடியைப் பற்றி பேச ஆரம்பிக்க மற்றவர்கள் விருப்பப்பட்டோ வேறு வழியின்றியோ அதை ஆமோதித்து தலையாட்டும் நிலை இருந்தது.

ஆனா இப்பல்லாம், பத்து பேர் சேர்ந்து நின்னா மோடி பத்திய பேச்சை யாருமே எடுக்கற மாதிரியே தெரியல.

ராஜபக்‌ஷேவ இந்தியா கூப்பிட்ட மேட்டரு, காஷ்மீர் பிரச்சினை, அயோத்தி பிரச்சினை. கல்வியில் காவிமயம். இதெல்லாம் ஏன் ஹிந்தி தினிப்பு மேட்டர் வரைக்கும் கூட சில பேர் கோமணத்தை இழுத்துப் பிடிச்சி அரைஞான் கயித்துல சொறுவ முயற்சித்தாலும்.

வாராவாரம் ஏறுற பெட்ரோல், டீசல் விலையும், இப்போ அறிவிச்சிருக்குற ரயில் கட்டண உயர்வும் கோமணத்தை அம்போன்னு விட வச்சிடிச்சி. சர்க்கரை கிலோக்கு ரூபாய் 3உயர்த்துகிறது மத்திய அரசு ஆவின்பால் ரூபாய் 6 உயர்த்துகிறது மாநில அரசு.

அப்புறம் ஏண்டா டீதூளையும், காபிதூளயும் உசத்தமா இருக்கீங்க? சாயா கடை அண்ணாச்சி, இத்துனூண்டு பிளாஸ்டிக் கப்ல கொடுக்கிற சாயா ரேட்டையும் உசத்திடுங்க.

தமிழ்நாட்டுல ஓஹோன்னு ஓடுன முதல்வன் படம்... ஹிந்தி ரீமேக்குல ஃபெயிலியர் ஆயிடிச்சி...   அது பத்தி டைரக்டர் ஷங்கர் கிட்ட கேட்டப்ப...   இந்தியாவுல ஒரு குறிப்பிட்ட மாநிலத்துல இருக்குற பிரச்சினையை மையமா வச்சி அங்க ஜெயிச்சாலும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கு அதே ஃபார்முலா ஒத்துவராதுன்னு புரிஞ்சிக்கிட்டேன்..  அப்டீன்னு சொன்னார்.

மோடி.  குஜராத் வேற...   ஒட்டுமொத்த இந்தியாங்கறது வேற. முதல்ல நீ ஒரு இந்தியனா மாறனும்...   அதைவிட முதல்ல மனுசனா மாறு முதல்வன் படத்தை இந்தியா முழுக்க ஓட்ட முடியாது.

அதே போல உன் குஜராத் தீவிரவாதத்தை இந்தியா முழுக்க செய்ய நினைப்பது இந்தியாவை பல துண்டுகளாக  உடைப்பதற்கு சமம் நினைவில் கொள் மதம் பிடித்தவனே.

@ future.  ஆப்பு. Wait & see??

1 comments :

தேர்தலில் மோடிக்கு வாக்களிக்காதவர்களுக்கு மட்டும் இந்த பிரசனை இல்லை. வாக்களித்தவர்களுக்கும்,மோடியை வானளாவப் புகழ்ந்தவர்களுக்கும் சேர்த்துதான் இப்போது பிரசனை ஏற்பட்டு இருக்கிறது.

தேர்தலுக்கு முன்பு எதையெல்லாம் காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாடாக,நிர்வாக சீர்கேடாக சொல்லி,பி.ஜே.பி கட்சி பிரசாரம் செய்ததோ அத்தனை பிரச்னைகளும் மோடியின் நிர்வாக மேம்பாட்டால் அதிகரித்து உள்ளது. Rajan .o

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!