Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, May 18, 2014

கரியை முகத்திலும் பூசிக்கொண்ட இந்தியர்கள்!?

பெரும் தொழில் நிறுவனங்களை நடத்தும் ‘கார்ப்பரேட்’ நிறுவனங்களுக்கு 2005-2006 ஆம் ஆண்டில் இந்திய அரசு தள்ளுபடி செய்த வரியைக் கணக்கிட்டால் சராசரியாக ஒரு நிமிடத்துக்கு ரூ.7 மில்லியன்.
தங்கம்-வைரத்துக்கு தள்ளுபடி செய்துள்ள வரி கடந்த 36 மாதங்களில் ‘2 ஜி’ அலைவரிசை ஊழலுக்கு சமம்.
2005-லிருந்து 2013 வரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட வருமான வரி, சுங்க வரி, ‘கஸ்டம்ஸ் டூட்டி’ ரூ.31,111,69 (ரூபாய் 31 லட்சத்து 111 ஆயிரத்து 69 கோடி ரூபாய்)(2005 ஆம் ஆண்டிலிருந்து, 2013 ஆம் ஆண்டுக்குள் தள்ளுபடி விகிதம் 130.53 சதவீதம் அதிகரிப்பு)
தங்கம், வைரம் மற்றும் நகைகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.3,14,456 கோடி.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இவ்வளவு பெரும் தொகையை தள்ளுபடி செய்த நிதியமைச்சர் ப.சிதம்பரம், இந்தியாவில் தனி நபர் நேரடி வருமான வரி 5.5 சதவீதமாகவும், மறைமுக வருமான வரி 4.4 சதவீதமாகவும் மிக மிகக் குறைவாகவே உள்ளது என்றும் கவலைப்படுகிறார். தள்ளுபடி பற்றி அவர் கவலைப்படவில்லை! நாட்டை “தேசபக்தர்கள்” கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து விட்டார்கள்!
காங்கிரஸ் அரசிடமிருந்து யார் யாரெல்லாம் தள்ளுபடிகளையும் , சலுகைகளைப் பெற்றார்களோ அவர்கள்தான் இந்த தேர்தலில் மோடியை முன்னிலைப் படுத்தியவர்கள். 10 ஆண்டுகள் காங்கிரசை வைத்து அவர்கள் ஆடிய ஆட்டம்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அத்துனை ஊழல்களுக்கும் முழுமுதற்காரணம். ஆனால் மக்களால் காங்கிரஸ் தூக்கி எறியப் படலாம் என்று அனுமானித்தவர்கள் மோடியை வைத்து அடுத்துவரும் ஆட்சியில் விளையாடத் தயாராகி விட்டனர்.
இந்த கூத்து தெரியாமல் சாமானிய இந்தியன் கரியை தன் விரலில் மட்டுமல்ல முகத்திலும் பூசிக்கொண்டான். பாவம் இந்தியன் !! நானும் தான்!! (ந. கிருஷ்ணன்).

@ஒவ்வொரு ஊரிலும் ஆங்காங்குள்ள பெரிய குற்றவாளிகளை நாம் தலைவர்களாக்கி இருக்கின்றோம். அங்கு அவர்கள் விஷமம் (சதி) செய்து கொண்டிருப்பார்கள். 

3 comments :

தமிழர்களை அவமதிப்பதில் வடக்கே உள்ளவர்களுக்கு அப்படி என்ன ஆனந்தமோ ..!
இதனால் தான் காங். BJP யான தேசிய கட்சிகள் தமிழர்களால் ஒதுக்கபடுகின்றனர்
சில மாணங்கெட்ட இணதுரோகிகளான BJP யின் முகநூல் கூலிபடையினர்
ராஜபக்சேயும் நரமோடியும் சிறந்த தேச பக்தர்கள்னு ஸ்டேடஸ் போட்டாலும் போடுவார்கள்
முதலில் மனுசனா வாழுங்கடா

26ம் தேதிக்கு என்று ஒரு விஷேசம் உண்டு.
26,ஜனவரி, 2001ல் குஜராத்தில் பூகம்பம் நிகழ்ந்தது.
26, ம் தேதிதான் ஒரிசாவில் புயல் அடித்தது,
26,டிசம்பர், 2004ல் சுனாமி தாக்கியது.
வரும் 26ம் தேதி அன்று மோடி பதவி ஏற்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

இந்த 26 மே மாதம் தமிழர்களுக்கு துக்க தினம். இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷே இந்தியாவிற்கு வருகிறான். அதுவும் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கும் நிகழ்ச்சிக்கு. வெற்றி களிப்பு தீர்வதற்குள் நரேந்திர மோடி நம் நெஞ்சில் குத்துகிறார் . இது தமிழர்களுக்கு ரொம்ப தேவை. அதுவும் கன்னியாகுமரியில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட பொன் ராதாகிருஷ்ணன் சொல்கிறார். வெட்கம் அவமானம். கன்னியாகுமரி மக்கள் இவருக்குப் போய் ஒட்டு போட்டார்களே.

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!