Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, March 23, 2014

ரசத்தின் ரகசியம் இதுதாங்கே!?

பலருக்கு சமையல் என்றாலே அலர்ஜிதான் போங்க  ரசத்தின் ரகசியம் இதுதாங்கே. நம் இன்றைய வாழ்வில் உடலுக்கு நன்மை தராத எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளையும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவையும் தான் அதிகமாக எடுத்துக் கொண்டு வருகிறோம். அப்படிப்பட்ட சூழலில் வாரத்தில் ஒரு நாளாவது இதுபோன்ற மருத்துவ குணமுள்ள உணவை எடுத்துக் கொண்டால் நல்லது. இது ஒரு மருத்துவ குணமுள்ள ரசம். ஜலதோஷம், தொண்டை கரகரப்பு, உடல்வலி, அஜீரணம் இவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தை சாப்பிடலாம். மற்றவர்களும் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். 


கண்டந்திப்பிலி ரசம்: தேவையானப் பொருட்கள், கண்டந்திப்பிலி – ஒரு மேசைக்கரண்டி, தக்காளி – ஒன்று, கொத்தமல்லி – ஒரு கொத்து, வேக வைத்த பருப்பு – கால் கப், புளி தண்ணீர் – அரை கப், உப்பு – ஒன்றரை தேக்கரண்டி, மிளகு, சீரகப் பொடி – ஒரு தேக்கரண்டி, மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி, நெய் – 2 தேக்கரண்டி, எண்ணெய் – ஒரு தேக்கரண்டி.

தக்காளியை கழுவி விட்டு நீளவாக்கில் நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 

கொத்தமல்லியை ஆய்ந்து கழுவி எடுத்துக் கொள்ளவும். 

கண்டந்திப்பிலியை பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு எண்ணெய் சட்டியில் கரைத்து வைத்திருக்கும் புளித் தண்ணீரை ஊற்றி, அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டங்களைப் போட்டு கரண்டியை வைத்து நன்கு மசித்து விடவும்.

அதனுடன் மிளகு, சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் ஒன்றரை தேக்கரண்டி கண்டந்திப்பிலிப் பொடி போட்டு 15 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.

ரசம் ஒரு கொதி வந்ததும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பருப்பை அதனுடன் சேர்த்து கலக்கி விட்டு 3 நிமிடம் கொதிக்க விடவும். பருப்பு சேர்ப்பதால் ரசம் நன்கு சுவையாக இருக்கும். ரசம் 3 நிமிடம் நன்கு கொதித்து நுரைத்து வரும் போது மேலே கொத்தமல்லி தழையை தூவி இறக்கவும்.

பிறகு இரும்பு குழிக்கரண்டி அல்லது சிறிய வாணலியில் 2 தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடிக்க விடவும்.

கடுகு வெடித்ததும் மீதம் உள்ள கண்டந்திப்பிலி பொடியை போட்டு தாளித்து அதை ரசத்தில் ஊற்றி அதே கரண்டியை வைத்து ரசத்தை கலக்கி விடவும்.

இப்போது சுவையான கண்டந்திப்பிலி ரசம் தயார். உடல் அலுப்பினை போக்குவதற்கு இந்த கண்டந்திப்பிலி ரசம் கைகண்ட மருந்து.

5 comments :

செய்து பார்ப்போம்... செய்முறை குறிப்பிற்கு நன்றி...

I think the admin of this web page is actually working hard in favor of his web page, as here every material is quality based
material.

Feel free to surf to my site; yes

I constantly spent my half an hour to read this web site's articles everyday
along with a mug of coffee.

Feel free to surf to my web blog: perfumes for men

You can make the experience more fun by enrolling yourself as well so you can attend together.

Unfortunately, not much has changed in how credit card companies raise
rates on future balances. Gathering items of your own need not be expensive, but make it special
- something that he will surely like and doesn't get to eat every day -
it's a special occasion, after all.

Also visit my web blog - amazon gift card code generator

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!