பிரபல திரைப்பட நடிகர் நாசரை கல்லூரி விழா ஒன்றிற்குத் தலைமை தாங்க அழைத்திருந்தார்கள். நாசரும் சென்றிருந்தார்.
அப்போது கல்லூரி மாணவர்கள் பலர் அவரைச் சூழ்ந்துகொண்டு "உங்கள் பெயரில் "ரசிகர் மன்றம்' ஒன்றை நிறுவ விரும்புகிறோம். அதற்கு உங்கள் ஒப்புதல் வேண்டும்'' என்று கேட்டார்கள். எல்லோரின் எதிர்பார்ப்பிற்கும் மாறாக நாசர் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை! காரணம்? அவரே சொல்கிறார்:
"இந்த ரசிகர் மன்றங்கள் அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள் எல்லோரும் அநேகமாக இருபதிலிருந்து 25 வயதுக்குள்பட்ட இளைஞர்கள்தான். இந்தக் காலகட்டம்தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிக முக்கியமான காலகட்டம். தன் எதிர்கால பிரகாசமான வாழ்வுக்கு அஸ்திவாரக் கல் நட வேண்டிய அருமையான நேரம். இந்தத் தருணத்தில் இன்னொரு மனிதனுக்குக் கொடி பிடிப்பதிலும், பாராட்டு விழா நடத்துவதிலும், போஸ்டர் அடித்து ஒட்டுவதிலும் இளைஞர்கள் தங்கள் பொன்னான நேரத்தைச் செலவழித்துத் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொள்வதை என்னால் அனுமதிக்க முடியாது''.
இளைஞர்களுக்கு சரியான நேரத்தில் சரியான புத்திமதி! சரியா!?
3 comments :
சரி...
sari...
SARIYANA PATHIL
Post a Comment