Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, September 19, 2013

காலை உணவில் கவனம் தேவை!

பொதுவாக உண்ணும் உணவு செரிமானமாவதற்கு இரைப்பையில் சுரக்கும் அமிலம் தான் உதவியாக உள்ளது. ஆனால் இந்த அமிலமானது அளவுக்கு அதிகமாக சுரக்கும் போது, அவை இரைப்பையை அரிக்க ஆரம்பித்து, வயிற்றில் எரிச்சலை உண்டாக்குகிறது. இவ்வாறு வயிற்றில் ஏற்படும் அதிகப்படியான எரிச்சலைத் தான் அமில சுரப்பு அதாவது acidity என்று சொல்வார்கள். 

இத்தகைய அமில சுரப்பு ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, வறுத்த மற்றும் காரமான உணவுகளை அதிகம் சாப்பிடுவது, அதிகமாக புகைப் பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்றவைக் குறிப்பிடத்தக்கவை. மேலும் காலை உணவைத் தவிர்ப்பது, வெறும் வயிற்றுடன் நீண்ட நேரம் இருப்பது, கொழுப்பு உள்ள உணவுகளை அதிகம் சாப்பிடுவது போன்ற வையும் அமில சுரப்பை ஏற்படுத்தக்கூடியவையே. இத்தகைய அமில சுரப்பைச் சில அறிகுறிகள் கொண்டு அறியலாம்.

அவை நெஞ்செரிச்சல், குமட்டல், வாந்தி, உணவு உண்ட பின் ஒரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரத்திற்குள் வயிற்றில் வலி அல்லது எரிச்சல் ஏற்படுவது, அடிக்கடி ஏப்பம், வாயில் கசப்பு சுவையை உணர்வது, அடிக்கடி பசி எடுத்தல் போன்றவை. ஆகவே இத்தகைய அறிகுறிகள் இருந்தால், அப்போது உடனே அதனை குணப்படுத்துவதற்கான முயற்சி யில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவை பெரும் பிரச்சனையை உண்டாக்கிவிடும். அதிலும் அமில சுரப்பைப் போக்குவதற்கு எங்கும் செல்ல வேண்டாம். அதனை சரி செய்ய பல இயற்கை முறைகள் உள்ளன. அவைகளைப் பின்பற்றி வந்தாலே, அமிலசுரப்பை எளிதில் குணப்படுத்தலாம்.

தண்ணீர் - தினமும் காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் இரண்டு கோப்பை தண்ணீர் குடித்து வந்தால், அமில சுரப்பு வராமல் தடுக்கலாம்.

முட்டைகோஸ் - இதன் சாறை நாள்தோறும் அருந்தி வந்தால் அமில சுரப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

மோர் - மோருடன் ஒரு மேசை கரண்டி கொத்துமல்லி சாறு கலந்து தினமும் குடித்து வந்தால், அமில சுரப்புக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

கிராம்பு - கிராம்பு மிகவும் காரமாகத் தான் இருக்கும். இருப்பினும் அதனை வாயில் போட்டு மென்று சாப்பிட்டால், அமில சுரப்பு பிரச்சனையைப் போக்கலாம்.

தேன் மற்றும் ஆப்பிள் – உணவு உண்ணுமுன் ஒரு மேசை கரண்டி தேனுடன், இரண்டு மேசை கரண்டி ஆப்பிள் சாறு கலந்து குடித்தால், அமில சுரப்பு வராமல் தவிர்க்கலாம்.

புதினா சாறு - உணவைச் சாப்பிட்டு முடித்த பின், கொதிக்கும் நீரில் புதினா இலையைப் போட்டு கொதிக்க விட்டு, பின் குளிர வைதது குடித்தால், அமில சுரப்புக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும்.

இளநீர் - பல மருத்துவ குணம் கொண்ட இளநீரை, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் அமில சுரப்பு குணமடையும்.

வெள்ளரிக்காய் - வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. அத்தகைய வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், அமில சுரப்புக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

துளசி இலை - அமில சுரப்பு, வாயு தொல்லை, குமட்டல் போன்றவற்றிற்கு துளசி இலை ஒரு சிறந்த நிவாரணியாகும்.


குறிப்பு: உடம்புக்கு எப்படி ஓய்வு தேவையோ அதேபோல் குடலுக்கும் ஓய்வுதேவை ஆதலால் இரவில் குறைவாக உண்பது அதுவும் படுக்கை செல்ல ஒரு மணி தியாலங்களுக்கு முன் உணவு உண்பது ஆரோக்கியமானது. (அதிக உணவு சாப்பிடுபருக்கு காலையே சிறந்தது).

1 comments :

பயனுள்ள குறிப்புகள்... நன்றி...

சிலவற்றை தொடர வேண்டும்...

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!