Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, November 17, 2011

புலம் பெயர்ந்த இலங்கை (ஈழ) தமிழர்களுக்கு இடம் கிடைக்குமா ?

கொழும்பு: இலங்கைத் தமிழர்களை குடியமர்த்துவதற்காக, அந்நாட்டு அரசு, 1,336 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

இலங்கையில், அரசு படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த சண்டையின் போது, திரிகோணமலை, முல்லைத் தீவு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, ஏராளமான மக்கள் வெளியேறி, அகதிகள் முகாமில் தங்கினர். புலிகளுடனான சண்டை முடிந்து விட்டதால், குடிபெயர்ந்த தமிழர்களை, மீண்டும் அவரவர் இடங்களில் குடியமர்த்தும்படி, இந்தியா உள்ளிட்ட நாடுகள், இலங்கை அரசை வற்புறுத்தி வருகின்றன. கடந்த 2009ம் ஆண்டு நடந்த சண்டையின் போது, 3 லட்சம் தமிழர்கள் அகதிகள் முகாமில் தங்கினர். படிப்படியாக, இவர்களை குடியமர்த்தும் பணி நடக்கிறது.

இது குறித்து, இலங்கை தகவல் தொடர்பு அமைச்சர் ராம்புக்வெலா குறிப்பிடுகையில், "இன்னும் 10 ஆயிரம் பேரை குடியமர்த்த வேண்டியுள்ளது. முல்லைத் தீவில் 1,672 குடும்பங்களும், திரிகோணமலையில் 1,272 குடும்பங்களும், மன்னார் பகுதியில் 116 குடும்பங்களையும் குடியமர்த்துவதற்கு, 1,336 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை கொண்டு, தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்படும்' என்றார். "தமிழர்களுக்கு அதிகாரப் பங்களிப்பு குறித்து, அமைப்பு ரீதியான பேச்சு வார்த்தை, அடுத்த மாதம் மூன்று நாட்கள் நடக்கும்' என, இலங்கை அரசின் பிரதிநிதியும் எம்.பி.யுமான, ராஜிவா விஜேசிங்கா தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!