Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, October 25, 2014

நம்மிடம் வந்த ஒரு முகநூல் கேஸ்!?

ஒரு பெண் திருமணமானவர் ஒரு பெண் குழந்தை உண்டு கணவரும் அப்பாவும் வெளிநாட்டில் இவர் அம்மாவின் பராமரிப்பில் (இந்தம்மா பேஸ்புக்கில்).

அடிக்கடி மகளின் படத்தை முகநூலில் இட்டு லைக் வாங்குவார் கமெண்ஸில் பூரிப்பார் ,இவ்வழியில் நட்பில் இணைந்தார் ஒருவர். அவர் மகளைப் புகழ்ந்து அடிக்கடி இன்பாக்ஸ்இல் ஜொள்ளு வடித்திருக்கிறார் ,ஒருநாள் "இந்த குட்டி இவளோ அழகா இருக்கே இவங்கள பெத்த அம்மா எவளோ அழகா இருப்பாங்க ப்ளீஸ் ஒரு போட்டோ காட்டக்கூடாதா?" என் வழிந்துள்ளார்.

பெண் அப்படியே அங்கமெல்லாம் பூரித்து ஒரு படத்தை அனுப்பிவிட்டார்- அடுத்து அதை பார்த்த நபர் "என்னங்க க்ளோஸாவே இல்ல இன்னொரு படம் நல்ல மேக்கப் போட்டு க்ளோஸா அனுப்புப்பா என்றதும் (பெண் உஷாராகி "உங்க படம் அனுப்புங்க அப்பதான் நான் அனுப்புவேன் என்று சொல்ல) அவர் ஒரு பிரபலமல்லாத ஹிந்தி மாடலிங் ஆளின் படத்தை அனுப்பி இது நான் தான் இப்ப கொஞ்சம் கருத்துட்டேன் துபாய் ல என் வேலை அப்படி என்று புளுகியிருக்கார்.

பொண்ணு அவர் அழகுல மயங்கி அவர் கேட்ட போதல்லாம் டிசைன் டிசைனா படம் எடுத்து அனுப்பிடுச்சு ஆனால் அண்ணன் அப்பறம் தான் வேலையை காட்ட ஆரம்பிச்சிருக்கார்.

அசிங்கமான படங்கள் கேட்டு தொல்லை ,இந்த பெண் சந்தேகம் கொண்டு உங்க அம்மா தங்கை படமிருந்தால் எனக்கு அனுப்புங்க என்று கேட்க அவர் மறுத்துவிட்டார்(அப்படி யாரும் இருந்தாதானே அனுப்புவான் இந்த நாயெல்லாம் என்னைக்கோ குடும்பத்தை விட்டு விரட்டி இருப்பாங்க).

மேற்கொண்டு படங்கள் அனுப்பாத காரணத்தால் அவன் மிரட்ட ஆரம்பிக்க இந்த பொண்ணுக்கு டர்ர்ர்ரு ஸ்டார்ட்.

அவன் மேல் இருந்த அதீத நம்பிக்கையில் துபாயில் அவள் கணவர் தந்தை இருக்கும் இடங்களையும் தெரிவித்திருக்கிறாள் - இதுபோதும் அவனுக்கு அவளை மிரட்ட அவள் கெஞ்சியும் அவன் விடவில்லை இந்தப்பெண் ப்ளாக் செய்தும் அவன் வேறு பெயர்களில் முன்பே நட்பில் இணைந்திருந்தபடியால் தப்பிக்க முடியவில்லை.

உதவி கேட்டு நம் சகோதரர் ஒருவரை அனுகவே அவர் உன் ஐடியை டீஆக்டிவேட் செய் வேறு ஐடியில் அவன் நட்பு வட்டத்து பெயர்களை (mutual friends )இணைக்க வேண்டாம் என்றும் அந்நிய ஆடவருடன் சகஜமாக பேச உங்களுக்கு எப்படி துணிச்சல் வருகிறது என்றும் உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு கொடுக்கப்படும் சுதந்திரத்தை ஏன் இப்படி அசிங்கப்படுத்துகிறீர்கள் என்றும் செமத்தியாக திட்டி அனுப்பினார்.

அடுத்தவன் யாரென்றே தெரியாமல் எப்படி அவன் அனுப்பிய படத்தை நம்பினாய்,உன் புருஷனை விட அந்த கேவலப்பட்ட நாய் எந்த விதத்தில் உயர்ந்தவன் ,வெளிநாட்டில் இருக்கும் உன் கணவன் உன்னோடு பேசிக்கொள்ளத்தானே இந்த அனுமதியை உனக்கு வழங்கியுள்ளான் அதை நீ அத்துமீறலாமா? என்று அறிவுரை கூறப்பட்டது.

பெண்களே! முகநூல் ஒரு இருள் உலகம் இங்கு எல்லோருக்கும் ஒரு கரிய முகம் உண்டு உங்கள் படங்களை எத்தன்மை வாய்ந்ததாயினும இங்கு பதிவிட வேண்டாம்.

உங்களை அறிந்த மக்கள் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை நன்கறிவார்கள் அதுபோல நீங்கள் அறியாத நண்பர்கள் எத்தன்மைவாய்ந்தவர் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்!

அப்படி கட்டாயம் உங்கள் முகத்தை வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்றால் அதனால் வரும் பின்விளைவுகள் மற்றும் இழப்புகளை தாங்கிக்கொள்ள தயாராய் இருங்கள்!

அந்த துணிச்சல் இருந்தால் இந்த அறிவுரையை தூக்கி எறியுங்கள் ! செல்போன்கள் எதிர்விளைவுகளையும் ஏற்படுத்துகிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் குறிப்பாகப் பெண்கள் தான். 

அறிமுகம் இல்லாத நபர்களிடம் உங்கள் செல்போன் எண்ணை பகிர்ந்துகொள்வதை தவிர்த்துவிடுங்கள். தேவையற்ற நபர்களிடம் தேவையற்ற பேச்சுக்கள் அறவே வேண்டாம். அறிமுகம் இல்லாத, அவ்வளவாக பழக்கமில்லாத நபர்களிடம் சொந்த தகவல்களை பகிர்வது, வீட்டுக்குள் அனுமதிப்பது போன்ற செயல்களையும் பெண்கள் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள். விக்கிறவனுக்கு ஒரு கண் போதும், வாங்குகிறவனுக்குத் தான் ஆயிரம் கண்கள் வேண்டும் என்றொரு பழமொழி தமிழில் உண்டு. அது போல ஆண்களை விட பெண்கள் எப்போதும் ஒரு படி மேலே ஜாக்கிரதை உணர்வோடு செயல்பட்டால் இது போன்ற சுய கவுரவத்திற்கு இழுக்கு ஏற்படும் நிலைமையிருந்தும், சமூக நெருக்கடிகளில் இருந்தும், பல இழப்புகளிலிருந்தும் தங்களை காப்பாற்றிக் கொள்ளமுடியும்.

Thursday, October 16, 2014

ATM குறைகளை நிவர்த்தி செய்ய!

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார். அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS) வந்துள்ளது. உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார். mவங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார். அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த X தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.

அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார். அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html ஆதங்கமாக தெரிவித்துள்ளார். மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர். அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.

மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman } "https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html   உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள். ( can  u do copy past please).

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.
 
மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது. இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.
 
எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை. PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

Friday, October 3, 2014

பாதிப்பு பொது மக்களுக்கே!?

18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பை நெருங்கியதற்கு நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவே மிக முக்கிய காரணம்.

சொத்துக் குவிப்பு வழக்கை தமிழகத்தில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது முதல், அந்த வழக்கை நடத்த இதுவரை 5 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.  


மக்கள் வரி பனத்தை கூட்டு கொள்ளையடித்துவிட்டு அப்பாவி மக்களை தூண்டிவிட்டு அனுதாபம் என்ற பெயரிலும் வன்முறை வெரியாட்டம் ஆடும் அதிமுக. 

மாபெரும் அரசு எந்திரத்தின் தூணாக நிற்கும் அரசு அதிகாரிகள்,போலீஸ் சட்டம் ஒழுங்கை பாதுகாக்காமல் இருந்தது ஏன்??. நம்முடைய வரிப்பணத்தில் ஓடும் அரசு பேருந்து மீது தாக்குவதால் நாட்டிற்கோ, ஜெயலலிதாவிற்கோ என்ன லாபம்?. நம் வீட்டு பெண்கள் இது போல போக வழியின்றி, உண்ண உணவகம் இன்றி இருந்தால் நமக்கு எவ்வளவு கஷ்டம் என்பதை உணர்ந்து அரசியல் கட்சியினர் ஆர்பாட்டம் செய்யாமல் இயல்பு வாழ்விற்கு துணை நிற்பதே மனிதாபிமான செயல். உருவ பொம்மை எரிப்பதால் ,மாற்று கட்சி அலுவலகம் தாக்கப்படுவதால் என்ன லாபம்?? அப்பாவி பொது மக்களுக்கு தான் பாதிப்பு.

ஜெயலலிதா மேல் உண்மையான பாசமிருந்தால் உன் வாகனத்தை எரி அதவிட்டுட்டு பொது மக்கள் வர்ர பஸ்ஸ எரிக்கிறது அப்பாவி மக்களே பயப்படுத்துவது இதுவே முதலும் கடசியுமாக இருக்கட்டும். இது அதிமுக மட்டுமல்ல திமுகாவுக்கும்  சேர்த்துதான். இந்த வழக்கு வெற்றிபெற காரணம் முழுக்க முழுக்க நீதிபதி சாரும் ஏனென்றால் இந்த தீர்ப்பை அறிவிக்க எவ்வளவு தைரியம் வேண்டும் அதை மைக்கேல் டி'குன்ஹா  செய்து காட்டினார்.

@ இவர்கள் அன்று கொள்ளை அடித்த சொத்துக்களின் இன்றைய மதிப்பு பல ஆயிரம் கோடிகள். ஆனால் அபராதமோ வெறும் 100 கோடி. இன்று தமிழகத்தில் இவர்கள் போடும் இந்த முதலைக்கண்ணீர் நாடகம் மக்களை இதிலிருந்து திசை திருப்பத்தான். இது போல அடுத்தடுத்து தீர்ப்பு வந்தால் இனி ஊழல் செய்து சொத்து சேர்க்க முடியாதே. பாதிப்பு பொது மக்களுக்கே!?.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!