Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, November 18, 2011

அறிக்கை விட்டு ஆட்டம் போட்ட ஜெயா வாய் மூடியது ஏன்? கலைஞர்!?

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்சார பற்றாக்குறை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழ்நாட்டில் 6 மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 970 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. சென்னை தவிர மற்ற நகரங்களில் தினமும் 4 மணி நேரம், கிராமங்களில் 5 மணி நேரம் மின்வெட்டு மின்வெட்டு அமலில் உள்ளது. திமுக ஆட்சியில் மின்சாரம் இல்லை என்று அறிக்கை விட்ட ஜெயலலிதா, இப்போது வாயை மூடிக்கொண்டுவிட்டார்.

விலை உயர்ந்த மதுபானங்களை விற்பனை செய்யும் கடைகளை சென்னை, கோவை, மதுரை போன்ற நகரங்களில் திறக்கப்போவதாக அறிவித்திருப்பது தான், அதிமுக அரசின் புதிய சாதனை.

சென்னையில் முத்தமிழ்ப் பேரவைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக அரசு ஆணைப்பிறப்பித்திருப்பதற்கும் திமுக தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆட்சியில் அமரும் முன்பு தான் சினிமாவில் ஆடுவதுபோல் ஆட்டம் போட்டார்., ஆனால் இப்போது எல்லா சுமைகளையும் மக்கள்தான் சுமக்க வேண்டும் என்று அறிக்கை விடுகிறார்.. மக்கள் தலை மேல் இடி மேல் இடி.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!