Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, November 19, 2011

மப்புக்கு ஆப்பு!! வருகிறது புது சட்டம்!?

புதுடில்லி: போக்குவரத்து விதிகளை கடுமையாக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுனர் உரிமம் ரத்து அல்லது மூன்று மாத சிறைத் தண்டனை ஆகிய கடுமையான தண்டனைகள் உண்டு.

இந்தியாவில் போக்குவரத்து விதிமுறைகள் மீறல் காரணமாக, விபத்துகள் நடப்பது அதிகரித்து வருகின்றன. விபத்தில், நான்கு நிமிடங்களுக்கு ஒரு உயிர் பலியாகிறது. கடந்தாண்டில் மட்டும், விபத்துகளில் நாடு முழுவதும் 1.6 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, விபத்துகளை தடுக்கும் வகையில், போக்குவரத்து விதிகளை கடுமையாக்க, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு, 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுவதுடன், மூன்று மாத சிறைத் தண்டனை மற்றும் குறிப்பிட்ட காலத்துக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து போன்ற கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். பதிவெண் இல்லாத வாகனத்தை ஓட்டுபவருக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு, சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமைச்சக ஒப்புதல் கிடைத்த பின், பார்லிமென்டில் மசோதா தாக்கல் செய்யப்படும்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!