Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, November 14, 2011

மேயர் தேர்தலில் அசத்தும் அமெரிக்கர் !

அர்டாலி: அமெரிக்காவின் லோவா மாகாணத்திற்கான உள்ளாட்சித்தேர்தல் கடந்த 11-ம் தேதி நடந்தது.

இதில் அர்டாலி என்ற மாநகராட்சி மேயர் பதவிக்கு அங்குள்ள ஹாம்டன் டூமவுன்ட் என்ற பள்ளியில் படித்து வந்த ஜெர்மிமின்னிர்,18 மாணவன் மேயர் வேட்பாளராக போட்டியிட்டான். இதில் 24 ஒட்டுகள் ‌பெற்று மேயராக ‌தேர்வு செய்யப்பட்டார்.

இம்மாணவனை எதிர்த்து போட்டியிட்டவரும் தற்போது மேயராக இருந்தவருமான வெர்ஜில் ஹோமர் வெறும் 8 ஓட்டுக்கள் ‌மட்டுமே பெற்றார். இதனை அம்மாகாணத்தின் ‌கே.ஐ.எம்.டி. என்ற டி.வி.சானல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து மேயராக தேர்வு செய்யப்பட்ட மாணவன் ஜெர்மிமின்னீர் கூறுகையில், எனது தந்தை, நான் பிறப்பதற்கு முன்பு இம்மாநகராட்சியின் முன்னாள் மேயராக இருந்தவர். தற்போது நான் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன் என்றார். அடுத்த ஆண்டு ஜனவரி 3-ம் தேதி மேயராக பதவி‌ஏற்கவுள்ளார். நான்கு ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார் ஜெர்மி மின்னீர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!