Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Friday, August 30, 2013

இளிச்சவாயன் இந்திய நுகர்வோர்!?

நம்ம நாட்ல வாங்கற எந்த நிறுவனத்தின் காஸ்ட்லி மொபைலா இருந்தாலும் அது ரெண்டு வருஷத்துக்கு கூட உபயோகிக்க முடியறது இல்ல, ஏன்னா எல்லாம்  தரமின்மைதான்.

மொபைல் வாங்கின மூனு, நாலு மாசத்துக்குள்ளேயே கம்பெனியோட சர்வீஸ் சென்டர் போயிட்டு வருது. வாரண்டி முடிஞ்சு போச்சுன்னா ஏதாவது மாத்தனும்னா மொபைலோட விலையில் பாதிய கேக்கறாங்க சர்வீஸ் சென்டர்கள்ல. நல்லா இருக்கும்போதே எக்ஸ்சேஞ்சுன்னு போனா அடிமாட்டு விலைக்கு கேக்கறாங்க. எந்த நிறுவனத்தின் மொபைலா இருந்தாலும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருது. ஆனா இதே மாதிரியான மொபைல்கள் எந்த கம்பெனி தயாரிப்பாக இருந்தாலும் வெளிநாட்லேந்து கொண்டு வந்து யூஸ் பண்ணா நல்லாவே இருக்கு.

நோக்கியாவின் வெளிநாட்டு தயாரிப்புகளின் தரம் இந்தியாவில் தயாரிக்கப்படும் போது இருக்கிறது இல்ல. சோனியும் அப்படித்தான். அதே மாதிரி வெளிநாட்டு தயாரிப்புகள் அங்கிருந்து இந்தியாவிற்கென தயாரித்து வரும்போது அதன் தரம் மிகவும் குறைந்துவிடுகின்றது.

இங்கே தரக்கட்டுப்பாடுகள் சரியான முறையில் கடைபிடிக்கப்படறது இல்ல. கவனிக்க வேண்டியவங்களை கவனித்துவிட்டு இப்படி தரமற்ற தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டிவிடுகின்றார்கள்.

எல்லாவிதத்திலும் இந்தியாவில் நுகர்வோர்கள் தான் இளிச்சவாயர்களாக உள்ளார்கள்.

Wednesday, August 28, 2013

இப்படியும் ஒரு சட்டமன்ற உறுப்பினர்!!

படத்தை பார்த்ததும் பட ஹீரோ என்று என்ன தோன்றுகிறதல்லவா ஆம்! இவர் ஒரு அரசியல் ஹீரோ.

நாஜிம், காரைக்கால் தெற்கு தொகுதியில் தொடர்ந்து 25 வருடங்களாக தோல்வியே இல்லாத திமுக சட்ட மன்ற உறுப்பினர். 

இவரின் தொடர் வெற்றிக்கு சாதி, மத ஓட்டுக்கள் என்று எந்த வித குறுக்கு வழியுமில்லை. பணம் சம்பாதிக்க வேண்டியும் இவர் அரசியலுக்கு வரவில்லை பரம்பரை பணக்காரர். அரசியலுக்கு வரும் முன்னரே தேவைக்கேற்ற வாழ்வாதாரத்தோடு இருந்தவர். இன்று வரை இவர் மக்கள் மனதில் பிடித்த இடம் மட்டும் சற்றும் மங்காமல் அப்படியே இருக்கிறது. 

ஆளுங்கட்சி என்ன செய்யுது? யாரை எப்போது குறை சொல்லலாம் என்று பொழுதைக் கழிக்காமல் அட்டவணை முறையில் மக்கள் பணிகளைப் பிரித்து அவர் தொகுதி முன்னேற்றத்தில் கவனம் கொள்கிறார். ஒரு மனித நேயமிக்க தொகுதி மக்கள் நலனில் அக்கறை கொண்ட சட்ட மன்ற உறுப்பினரைப் பார்ப்பதே அரிதாகி விட்டக் காலத்தில் இவரை ஊக்குவிப்பதற்காக மட்டுமே இந்தப் பதிவு. 


ஜாதி, மதங்களைக் கடந்து மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சி தான் அரசியல் என்பதை நீங்கள் நம்பினால் இதனை பகிர்ந்து இவரை ஊக்கப்படுத்துங்கள்.

Monday, August 26, 2013

தி நகரில் புதைக்கப்படும் உண்மைகள்!?

சென்னை: தி நகரில் உள்ள சரவணா மற்றும் ஜெயசந்திரன் குழுமங்களில் வெளியூர்களை சேர்ந்த பெண்கள் பெருமளவில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இது போன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மிக மோசமாகவும், கீழ்த்தரமாகவும் நடத்தபடுகின்றனர. பெரும்பாலான பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்க உள்ளாக்கபடுகின்றனர்.

இங்கே நடக்கும் பெரும் அநியாயங்களை ஊமை ஊடகங்கள் ஏனோ மறைத்து விடுகின்றன. கடந்த 29.5.13 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு சரவணா செல்வரத்தினம் நிறுவனத்தில் பணிபுரியும் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை சேர்ந்த ரம்யா(20) என்ற இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார. இந்த செய்தி தி.நகர் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அத ிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அப்பெண்ணின் மரணத்திற்கான காரணத்தை மறைத்து விட்டு, அதே நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு இளைஞரை அப்பெண் காதலித்ததாகவும், அவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கதை கட்டுகிறது சம்பந்தப்பட்ட நிர்வாகம் தற்கொலைக்கு தூண்டியதாக பழி சுமத்தப்பட்டு காவல் நிலையத்தில் சித்திரவதைக்குளளாக்கப் பட்டு வரும் அப்பாவி இளைஞர் சுரேந்தர் நெல்லை மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவராவார்.

இந்த சம்பவத்தை தற்கொலை என்று சொல்வது முழுக்க முழுக்க உண்மைக்கு புறம்பானதாகும்.

சம்பந்தப்பட்ட இருவரும் வெவ்வேறு கிளை நிறுவனங்களில் பணிபுபுரிந்து வருபவர்கள். இந்நிறுவனத்தின் விதிமுறைகளின் படி, இவர்கள் இருவரும் சந்திக்க கூட முடியாது. இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவரகள். அறிமுகமில்லாத இவர்கள் இருவரும்எப்படி காதலித்திருக்க முடியும்....?.. ?..?

இந்த பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்த இடம் எதுவென்று தெரியுமா இதே சரவணா செல்வரத்தினம் நிறுவனத்திற்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதியில்தான்.

சம்பவத்தன்று அந்த பெண் உடல் நிலை சரியில்லாததால், விடுமுறையில் இருந்துள்ளதாக அந்நிறுவனத்தின் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன.

ஆனால் அப்பெண்ணுடன் பணிபுரியும்மற்ற பெண்களிடம் விசாரிக்கையில், அந்த பெண் யாரையும் காதலிக்கவில்லைய ென்றும், சம்பவத்தன்று விடுப்பு எடுப்பதாக தெரிவிக்கவில்லையென்றும அப்பெண்ணுக்கு உடல் நிலையில் எந்தபிரச்சனையும  இல்லையென்றும் தெரிவிக்கின்றனர ். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் அந்த பெண்ணைத்தவிர வேறு யாரும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால் விடுதியின், பெண் காப்பாளர், விடுதி காவலர், மற்றும் பணியாளர்கள் எங்கே போனார்கள்..??..?

மதியம் சரியாக 3.30 மணிக்கு அனைவரும் வேலை காரணமாக வெளியே சென்றிருப்பார்க ளோ..? அப்படியென்றால் நடந்தது என்ன..?

தற்கொலையா.? அல்லது பாலியல் வன்புனர்வினால் ஏற்பட்ட கொலையா..? இல்லையென்றால் அப்பெண்ணின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் சடலத்தை அப்பெண்ணின் குடும்பத்திடம் ஒப்படைத்தது ஏன்.?..?

பழி சுமத்தப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் நிலை என்ன ?

இந்நிறுவனத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது புதிதல்ல அப்படியிருந்தும இந்நிறுவனத்தின் மீது இது வரையில் ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.

VIP முகமூடி அணிந்துள்ள இம்மாதிரி சமூக விரோதிகளின் மீது அதிகார வர்க்கமும் காவல் துறையும் கனிவு காட்டுவது ஏனோ.?

இந்நிகழ்வுகளுக்கு முடிவு தான் என்ன..? அந்நிறுவனத்தில் பணிபுரியும் மற்ற பெண்களின் என்ன வழி.

--விடை தெரியாமல் தி.நகர் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்.

Saturday, August 24, 2013

விஜய் மீது ஏன் அனுதாபம் வரவில்லை ?

விஸ்வரூபம் திரைப்படத்துக்கு சிக்கல் வந்தபோது  கமல் மீது ஒரு அனுதாபம் இருந்தது. ஆனால், எது சிக்கல் என்றே தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் விஜய் மீது ஏன் அவர் ரசிகர்களைத் தவிர யாருக்குமே அனுதாபம் இல்லை.

2007ம் ஆண்டு. விஜய் டிவியில் வரும் லொள்ளு சபா நிகழ்ச்சியை பார்த்து ரசிக்காதவர்கள்  யாருமே  இருக்க முடியாது. பல திரைப்படங்களை ரசிக்கும் வகையில் கலாய்ப்பார்கள். அப்படி பல படங்களை கலாய்த்து பெரிய நடிகர் ஆனவர்தான் சந்தானம்.  

சந்தானம் திரைத்துறைக்கு சென்றதையடுத்து, அவர் இடத்தில் லொள்ளு சபாவில் நடித்தவர் நடிகர் ஜீவா. விஜயின் போக்கிரி படத்தை பேக்கரி என்ற பெயரில் லொள்ளு சபா நிகழ்ச்சியில் செம்மையாக கலாய்த்தார். இணைப்பு https://www.youtube.com/watch?v=Y7zfsdxPiPk.

நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை சந்திரசேகருக்கும் இது பிடிக்கவில்லை. உடனே தமிழகம் முழுக்க விஜய் டிவியை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டினர். பயந்து போன விஜய் டிவி நிர்வாகம், நடிகர் விஜயிடம் மன்னிப்பு கேட்டது. அது தொடர்பாக ஒரு ஸ்லைடையும் நிகழ்ச்சி நடுவே ஒளிபரப்பியது. இது முதல் சம்பவம். 

திரைப்படம் தொடர்பாக விஜய் டிவி நீயா நானா நிகழ்ச்சியில் நடந்த விவாதத்தின்போது, பார்வையாளர் ஒருவர் விஜய் படத்தில் கதையே இல்லை.அரைச்ச மாவையே அரைக்கிறார்கள் என்று சொன்னார். உடனே விஜய் ரசிகர்களை தூண்டி விட்ட விஜய்யும் அவர் தந்தையும், ரசிகர்களை விட்டு, விஜய் டிவிக்கு கடிதங்கள் மற்றும் தொலைபேசி மூலமாக மிரட்டல் விடுத்தார்கள். இதையடுத்து நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத், விஜய் மனதை புண்படுத்தியதற்காக  மன்னிப்பு கேட்டார். இணைப்பு https://www.youtube.com/watch?v=J_3ZSd6dRmA

ஒரு நடிகர் என்ற வகையில் தன்னை யாரும்  கிண்டல் செய்வதைக்  கூட பொறுத்துக் கொள்ள முடியாத நடிகர் விஜய் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா ? அவ்வளவு பெரிய அப்பாடக்கர் என்று தன்னை விஜய் மற்றும் அவர் தந்தை நினைத்துக் கொண்டதால்தான் இன்று தலைவா படத்தை வெளியிட முடியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறார்கள். இவர்களின் கையறு நிலையைப் பார்த்து யாருக்கும் பரிதாபம் வரவில்லை மாறாக நல்லா வேணும் என்ற எண்ணமே பெரும்பாலானோருககு இருக்கிறது. 

நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு மாசம் தூங்க மாட்ட என்றும், நான் புறா இல்லடா சுறா என்றும் பன்ச் டயலாக் பேசிய விஜய், "நானும் எங்கள் யூனிட்டும் ஆடிப்போயிருக்கிறோம், அதிர்ச்சியில் இருக்கிறோம்" என்று பேசி வீடியோ வெளியிடுகிறார். மாண்புமிகு அம்மா அவர்கள் தமிழகத்தையே முதல் மாநிலமாக கொண்டு வர வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார்கள் என்று பேசுகிறார். (அதுவும் ஒரு வகையில் உண்மைதான். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முறையாக ஒரு திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீசாகப் போகிறது.) தமிழக முதல்வர் இதில் தலையிட்டு படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கெஞ்சுகிறார். இணைப்பு https://www.youtube.com/watch?v=1QbMG5bpYyU

இவருக்கு படம் எப்படி முக்கியமோ அது போலத்தானே தொலைக்காட்சிக்கும் அந்த நிகழ்ச்சிகளும். அவர்களை மிரட்டி மன்னிப்புக் கேட்கச் செய்தபோது உங்களுக்கு அவர்களின் வலி என்னவென்று இப்போது புரிந்து கொள்ளுங்கள்.

Thursday, August 22, 2013

"ஸ்டாக் தீர்ந்து போச்சு"ன்னு சொல்றாங்களா?

ரேஷன் கடையில் "ஸ்டாக் தீர்ந்து போச்சு"ன்னு சொல்றாங்களா? உடனே நீங்கள் செய்யவேண்டியது இதுதான்.

உங்கள் ரேஷன் கடையில் ஏதோ ஒரு பொருளை நீங்கள் வாங்கச் செல்கிறீர்கள், ரேஷன் கடை ஊழியர் உங்களிடம் நீங்கள் கேட்கும் பொருளின் ஸ்டாக் இல்லை, தீந்து போச்சு, இன்னும் வரல்ல என்ற பதில்களை கூறுகிறார்களா? உண்மை நிலவரத்தை அறிய "உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை" ஒரு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்க மொபைல் போனை எடுங்க அதுல கீழ சொல்ற நம்பருக்கு கீழ வர்ற மாதிரி எஸ்.எம்.எஸ். அனுப்புங்க அவ்வளவுதான் மேட்டர் ஓவர்:

எஸ்.எம்.எஸ். அனுப்பவேண்டிய தொலைபேசி எண்: 9789006492, 9789005450, இந்த 2 நம்பர்ல ஏதாவது ஒரு நம்பருக்கு கீழ வர்ற மாதிரி எஸ்.எம்.எஸ். பண்ணுங்க:

[PDS] ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு [மாவட்டக்குறியீடு] அப்பறம் ஒரு ஸ்பேஸ் விடுங்க பிறகு [கடை எண்]. இதை டைப் செய்து அந்த தொலைபேசி எண்ணுக்கு அனுப்புங்க. மாலை 5 மணிக்குள்ள அனுப்பினீங்கன்னா உடனே பலன் கிடைக்கும்.

மாவட்ட எண், கடை எண் உங்கள் ரேஷன் கார்டிலேயே இருக்கும். (படத்தைப் பார்க்கவும்).

Tuesday, August 20, 2013

மீண்டும் காம லீலைகள்! பாரத் கி ஜே!!

என்னடா இது நம்ம சாமியார்களின் கொட்டம் கொஞ்ச நாள் அடங்கி இருக்குதேன்னு பார்த்தேன், இதோ ஆரம்பித்து விட்டார்கள் மீண்டும் காம லீலைகள். 

ஓ நம லீலைகள் நமக,, பாரத் மாதாக்கி ஜே ஜே!!! (கள்ள சாமியுடன் குஜராத் கேடி கலிகாலம் கொடுமடா).

சென்னை பெரம்பூரை சேர்ந்த அந்த 13 வயது சிறுமி தனது தந்தையை இழந்து தாயின் துணையுடன் வாழ்ந்து வந்தாள்,, இந்நிலையில் தாயாரான சசிகலா அவர்கள் கடந்த ஆண்டு பெரம்பூரில் உள்ள ஆசிரமத்தில் அறவழி சித்தர் எனும் குறி சொல்லும் சாமியாரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார், அவனின் வயது 48.

அந்த சாமியார் நள்ளிரவு பூஜை செய்ய வேண்டும் என்று சசிகலாவிடம் கூறி பூஜைக்கு ஏற்பாடு செய்து கடந்த அண்டு நவம்பர் மாதம் அந்த சிறுமியை கற்பழித்துள்ளான், இதனை சிறுமி தன் தாயிடம் சொல்லி அழுதப்போது அதற்கு தாய் சாமியார் எது செய்தாலும் நல்லதுக்காகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சாமியார் தன் நண்பர்கள் குமார், செல்வம் ஆகியோருடன் ஒப்படைத்து இவளை விபச்சாரத்தில் ஈடுபடுத்துமாரு கூறியுள்ளான், அந்த கயவர்களும் இவளை அனுபவித்து பின்பு தங்களது குடும்பத்திடம் ஒப்படைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளனர்.

இதிலிருந்து ஒருவழியாக தப்பித்து திருப்பதிக்கு தப்பித்த சிறுமி அங்கு பக்தர்களோடு சேர்ந்து சில நாட்கள் தூங்கியுள்ளார், அங்கிருந்தவர்கள் சந்தேகப்பட்டு போலிசாரிடம் ஒப்படைத்தனர் போலிசார் விசாரித்ததில் நடந்ததை விவரித்தால் சிறுமி.

இதை தொடர்ந்து சாமியார், சிறுமியின் பெற்றோர் ஆகியோரை போலிசார் கைது செய்துள்ளனர், மேலும் பலரை தேடி வருகின்றனர். ஆசிரமத்தில் சோதனையிட்ட போது பல பெண்களின் புகைப்படங்கள் சிக்கி உள்ளது.. மேலும் இவன் இன்னும் எத்தனை பெண்களின் வாழ்க்கையை அழித்துள்ளான் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Sunday, August 18, 2013

டெல்லி சகோதரிக்கு நியாயம் கேட்டு போராடிய நல்லவர்களே?

இந்த அநியாயத்தை பரவலாக கொண்டு செல்லுங்கள் சகோதர, சகோதரிகள் அனைவரும் நீதி கிடைக்கும் வரை போராடுவோம்...! தமிழால் இணைவோம்.

டெல்லி சகோதரிக்கு நியாயம் கேட்டு போராடிய நல்லவர்களே - இங்கே ஒரு திருச்சி சகோதரி ( வயது - 13) சத்தம் போடாமல் இருக்க வாயில் மண்ணை நிரப்பி - கற்பழித்து பிறகு தடயத்தையும் அழித்து - தண்டவாளத்தில் தூக்கி எறிந்த கயவர்களுக்கு எதிராக நியாயம் கேட்க்க எழுவீர்.... மனசாட்சி உள்ள நியாயவான்களாக இருந்தால்.

திருச்சியில் கற்பழித்து படுகொலை செய்யபட்ட 13 வயது அப்பாவி மானவி, அன்புள்ளம் கொண்ட என் சொந்தங்களே, திருச்சி காஜாமலை பகுதியில் குடும்பத்தோடு குடியிருக்கும் 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது சகோதரி தவ்பீக் சுல்தானா, இவர் கடந்த 13.8.13 அன்று காலை பள்ளிக்கு சென்றவர் அன்று இரவாகியும் வீடு திரும்பவில்லை.

மறுநாள் அவருடைய சடலம் நிர்வான நிலையில் சிதைக்கப்பட்டு தன்டவாளத்தில் கிடைத்திருக்குறது, காமுகர்கள் அவரை வாயில் மண்னை நிரப்பி சப்தமிடமல் அடைத்து கற்பழித்து படுகொலை செய்துவிட்டு தடயத்தை அழிப்பதற்க்காக ரயில் தன்டவாளத்தில் வீசியிருக்கிறார்கள்.

கொலை செய்யபட்டவர் கற்பழிக்கபட்டார் என்பதை பிரேதபரிசோதனையில் உறுதி படுத்தகூடிய சில உடல் உறுப்புகளை காணவில்லை,அதை காவல்துறையை சேர்ந்தவர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதோடு மட்டும் அல்லாமல் வழக்கை தற்க்கொலை வழக்காக திசை திருப்ப முயர்ச்சிக்கிறார்கள்.

அத்தோடு மட்டும் அல்லாமல் இன்று காலையில் சம்பந்தபட்ட சிறுமியின் வீட்டிற்க்கு வந்த ரயில்வே காவல் ரவுடிகள் பிரதத்தை வாங்கிக் கொண்டு அடக்கம் செய்துவிட்டு பிரச்சனை பன்னாமல் சென்றுவிடுங்கள்என்றுமிரட்டும் தொனியில் பேசியிருக்கார்கள்.

டெல்லி மாணவியின் செய்தியை உலகம் முளுளுவஹும் கொண்டு சென்ற ஊடகங்கள் அனைத்தும் இந்த மாணவியின் செய்தியை வெளியிடாமல் மௌனம் சாதிக்கின்றன. ஏன்? இதை செய்தவர்கள் அதிகார பலம் கொண்ட பின்னணி கொண்டவர்கள் என்பதாலா?

முகநூலில் இந்த அநியாயத்தை பரவலாக கொண்டு செல்லுங்கள் சகோதர சகோதரிகள் அனைவரும்.. நீதி கிடைக்கும் வரை போராடுவோம்...!

Friday, August 16, 2013

மோதனும்னு முடிவு பண்ணிட்டேன்னா! விஜய்!!

ஒரு படத்தை வெளியிட எத்தனை பிரச்சினைகள். "தலைவா " திரையிட தமிழகத்தில் தடை?


"தமிழகம் முழுதும் விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடி அடி"

முதல்வரை பார்க்க சென்ற விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் அனுமதி மறுப்பு.

இவ்வளவு நடந்தும், "ஜெவின் ஆட்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும்" -விஜய் நேற்றைய அறிக்கை.

"மோதனும்னு முடிவு பண்ணிட்டேன்னா மந்திரினு பாக்க மாட்டேன், மன்னன்னு பாக்க மாட்டேன்" -சுறாவில் விஜய்.

# சினிமா வேறு, வாழ்க்கை வேறு என்பதை ரசிகர்கள் புரிந்துகொள்க. ரசிகர்களாக மட்டும் இருங்கள் 
plz.

Wednesday, August 14, 2013

ஆட்டையைப் போட முயலும் தேசபக்தர்கள்!?

குழந்தைகள் கையில் கால் மிதிகளை கையில் ஏந்தியபடி வருவது புரிந்து இருக்கும் என நம்புகிறேன், தங்களை தேச பக்தர்கள் என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் காவி கயவர்கள்தான் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பார்ப்பனர்களால் அடையாப்படுத்தியதின் விளைவு சுடு மணலில் கால் மிதிகளை கையில் ஏந்தியபடி செல்கிறது பள்ளி குழந்தைகள். 

தேசபக்த வேடமிட்டு நாட்டை ஆட்டையைப் போட முயலும் காவி பயங்கரவாத கும்பலுக்கு ஆதரவாக செயல்படுபவர்களின் கவனத்திற்கு!

இந்துக்களின் பேரை சொல்லி நக்கி பிழைத்து இந்துக்கள் இடும் நாலு காசில் உடல் வளர்த்து ஊரில் கலகம் வளர்க்கும் காவிகளே. இதோ உன் மதத்தில் பட்டவன் கையில் செருப்பை ஏந்தி நடக்கின்றான் சமூகத்தில் சம உரிமை கிடைக்காமல் இழி சொல்லுடன் பழி பாவங்களை ஏற்று வாழுகிறானே அவனின் துயர் துடைக்க இந்து முன்னனியும் இந்து மக்கள் கட்சியும் பாஜகவும் இதுவரை என்ன கிழித்து இருக்கிறது?  

உங்களால் என்ன முடியும்...?  மதக்கலவரங்களை மூட்டி இந்து இசுலாமிய பிரிவினைக்கு தூபம் போடுவதை தவிர்த்து இந்துக்களுக்கு என்று காவிகள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்...?

சேரியை ஒழித்து இருக்கிறீர்களா...? இசுகாடு, சுடுகாடுகளை ஒன்றாக்கி இருக்கிறீர்களா...?சமூகத்தில் வாழும் அனைத்து சாதி இந்துக்களையும் ஒரே வளையத்திற்குள் அரவணைத்து இருக்கிறீர்களா..? ஏற்றத் தாழ்வுகளை நீக்கி இருக்கிறீர்களா...?

பிறகு என்ன வெங்காயத்திற்கு இந்து முன்னனியும்,இந்து மக்கள் கட்சியும்,பாஜகவும்...?

அவன் கையில் ஏந்தும் செருப்பை உங்கள் மீது வீசி எறியும் முன் அவன் காசில் உண்டு கொழுக்கும் காவி கூட்டங்களே திருந்தி கொள்ளுங்கள்.

Sunday, August 11, 2013

தடையில்லா மின்சாரம் இத்தினங்களில்?

மின்சார உற்பத்தி குறைவு எல்லா மக்களும் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பகுதியா பிரித்து மின்சாரம் விணியோகிக்கிறோம், அதனால் மக்கள் பொருத்துக்கொள்ள வேண்டும் என்று   சொல்கிறது அரசாங்கம்.

பண்டிகை தினங்களில் மட்டும் எப்படி தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது.  எப்படி கொடுக்க முடிகிறது?.

அப்போது மட்டும் எப்படி உற்பத்தி அதிகரிக்கிறது. பண்டிகைக்காலங்களில் தடையற்ற மின்சாரம் சந்தோஷம் தான் இருந்தாலும் இப்படி பட்ட கால கட்டங்களில் எப்படி சமாளிக்கிறாங்க. அதே டெக்னிக்கை பயன்படுத்தி ஏன் எல்லா காலத்திலும் தடையற்ற மின்சாரம் தரமுடியவில்லை?. தறக்கூடாது என்று முடிவு செய்துட்டால் தலைகீழா நின்னாலும் அது கிடைக்காதுதான்.

அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா என்று சாதாரணமா எடுத்துக்கொள்ள முடியவில்லை. யோசிங்கப்பா.

Thursday, August 8, 2013

நினைவிருக்கிறதா இவரை ?

முஹம்மது ஹனிப் இந்த பெயர் நம்மில் எத்தனை பேருக்கு நினைவில் இருக்கிறது என்று தெரியவில்லை.

ஆனால் 2007 ஆம் ஆண்டு காலகட்டதில் உலகின் அனைத்து ஊடகங்களிலும் இவர் தான் பல நாட்களுக்கு தலைப்பு செய்தி அதிலும் இந்திய ஊடகங்களில் 24 மணி நேர செய்தியே இவர் தான். எதற்காக தெரியுமா ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் விமான நிலையத்தில் வைத்து தீவிரவாதி என்ற பொய்யான குற்றசாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டது.இவரது விசாவையும் ஆஸ்ட்ரேலிய அரசு ரத்து செய்தது. 

இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த இளம் மருத்துவர் ஹனீப். இவர் ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்த போது தான் ஜூலை 2 ஆம் நாள் 2007ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 25 நாள் சிறைவாசத்திற்கு பின்னர் 27 ஆம் தேதி நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.. இதில் வேடிக்கை என்னவென்றால் விசாரணை நடை பெற்றுக்கொண்டிருக்கும் போதே கை கால்களை வைத்து உலக மற்றும் இந்திய ஊடகங்கள் பொய்களை பரப்பியது. இதில் இந்திய ஊடகங்கள் ஒரு படி மேலேயே சென்று பொய்யான செய்திகளின் மூலம் ஏற்கனவே இந்தியாவில் தீவிரவாதிகள் என பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்களையே உண்மையான தீவிரவாதிகளை போல பொய்களை பரப்பும் நமது ஊடக பார்ப்பன எலிகள் ஹனீப் சம்பவத்தை உலக தீவிரவாதத்துடன் இந்திய முஸ்லிம்கள் தொடர்பு போன்ற கற்பனைகளுக்கு பஞ்சமில்லா செய்திகள் தான் வளம் வந்தது.

கர்நாடகாவை சேர்ந்த பாஜக கூட்டணியான ஜனதாதள கூட்டணி அரசின் குமாரசாமியும் கூட சரியான முறையில் அவருக்கு உதவி புரியவில்லை. இறுதியாக நிரபராதி என விடுவிக்கப்பட்ட பின்னர் மீடியாக்கள் வழக்கம் போல மவ்னத்தை தான் பதிலாக கொடுத்தது கர்நாடக அரசு ஹனீபிற்கு வேலை தருவதாக உறுதி அளித்தது ஆனால் அதை புறக்கணித்த ஹனீப் மீண்டும் ஆஸ்திரேலியாவிற்கே புறப்பட்டு சென்றார். இவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஆஸ்திரேலியா அரசு விருது வழங்கி கவ்ரவித்தது. 

இந்திய சிறைகளிலும் ஹனீபை போன்ற பல இளைஞர்கள் காவல் மற்றும் உளவுத் துறையாலும் மீடியாக்களாலும் பொய்களின் மூலம் வஞ்சிக்கப்பட்ட பல முஸ்லிம் இளைஞர்கள் பொய்யான வழக்குகளில் நீதியும் இல்லாமல் வழக்கும் இல்லாமல் பல ஆண்டுகள் சிறையில் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.. ஆனால் என்னவோ இன்றுவரை அந்த அப்பாவிகளுக்கு நீதி வழங்கப்படாமல் அநியாயமாக அலைகழிக்கப்படுகின்றனர்..இவர்கள் முஸ்லிம்களாக வாழ்வது குற்றமா ?? அல்லது ஆட்சி அதிகாரங்கள் முதல் மீடியாக்கள் வரை ஹிந்துத்துவ வாதிகளால் கட்டுப்படுத்தப்படுவதன் விளைவா?. எது எப்படியோ அப்பாவிகளுக்கு நீதி மறுக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

Monday, August 5, 2013

உருண்டும் புரண்டும் உறக்கம் வரவில்லையா?

நம்மில் அநேகர் சரியான தூக்கம் இல்லாமல் அவதி படுகிறோம் அப்படி சரியான தூக்கம் வராமல் அவதி படுபவர்கள் கீழ்க்கண்ட எளிய மருத்துவத்தை உபயோகித்து பார்க்கலாமே!.

இரவில் உணவருந்திய பின் ஒரு தேக்கரண்டி தேன் சாப்பிடுங்கள்  நிம்மதியாக தூங்கலாம் வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி சாதத்தோடு பிசைந்து சாப்பிட தூக்கம் இல்லாமல் துன்பப்படும் நோய் குணமாகும் நரம்புகளுக்கு நல்ல வலு கிடைக்கும்.

இரவில் தூக்கம் வரவில்லை என்றால் கசகசாவை தூள் செய்து வைத்து கொண்டு படுக்க போகும் போது அதை பாலில் கலந்து சாப்பிடுங்கள் சுகமான தூக்கம் வரும் இரவில் தூங்கும் முன் சூடான பசும்பாலில் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும் நியாபக சக்தி பெருகும்.

தூங்கும் போது கண்டபடி தூங்க கூடாது பொதுவாக வலக்கை பழக்கமுள்ளவர்கள் இடப்புறமாகவும் இடக்கை பழக்கமுள்ளவர்கள் வலது புறமாகவும் திரும்பி படுக்க வேண்டும். 

எந்த கரங்களுக்கு வேலை மிகுதியோ அந்த கரம் மேலே இருக்கும் படி படுத்து தூங்கினால் தான் சரியான ஒய்வு கிடைக்கும்.

இரவில் படுக்கும் முன் இரண்டு கால்களையும் நன்றாக அழுத்தி தேய்த்து விடுங்கள் நல்ல தூக்கம் வரும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

இது ரொம்ப ரொம்ப முக்கியம் யாருக்கும் கெடுதல் நினைக்காமல்  யாரையும் கெடுத்து பேசாமல் வாழுங்கள், நல்ல தூக்கம் வரும்.

Saturday, August 3, 2013

முக்கிய முடிவெடுக்கும் முதலைகள்!?

டெல்லி: ஆட்சியில் காங்கிரஸ் இருந்தாலும், பிஜேபி இருந்தாலும் முடிவுகளை எடுப்பது கார்ப்பரேட் நிறுவனங்களே என்று தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் பணத்துக்காக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு நாட்டை விற்பதாக, குற்றம் சாட்டியுள்ளார்.

ஜெய்பால் ரெட்டியிடம் இருந்து பெட்ரோலியத்துறை பறிக்கப்பட்டதற்கு ரிலையன்ஸ் நிறுவனமே காரணம் என அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பெட்ரோலிய அமைச்சராக யார் வருவது என்பதை ரிலையன்ஸ் நிறுவனம் தான் தீர்மானிப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்தியில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வரும் அரசுகள் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவது ஏன் என கேள்வி எழுப்பினார். காங்கிரசும், பாரதிய ஜனதாவும் முகேஷ் அம்பானியின் சட்டைப்பையில் இருப்பதாக சாடினார்.

பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்த, ஜெய்பால் ரெட்டியை, அந்த பொறுப்பிலிருந்து அகற்ற காரணம், ரிலையன்ஸ் முகேஷ் அம்பானியே. கிருஷ்ணா – கோதாவரி பேசின் பகுதியில் ரிலையன்ஸ் எடுக்கும் எரிவாயுவுக்கு அதிக விலை கேட்டு, அதற்கு ஜெய்பால் அனுமதி அளிக்காததால் தான், அவருக்கு அறிவியல் தொழில்நுட்ப துறை வழங்கப்பட்டது. மணிசங்கர் அய்யர், ஜெய்பால் ரெட்டி தவிர்த்து, பிற பெட்ரோலிய அமைச்சர்கள், அம்பானிக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளனர். குறிப்பாக, முரளி தியோரா, நிதியமைச்சராக இருந்த, பிரணாப் முகர்ஜி ஆகியோர், ரிலையன்ஸ்சுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, காஸ் விலையை அம்பானி உயர்த்தியுள்ளார். அதற்கு, ஆட்சி, அதிகாரத்தில் இருந்தவர்கள் உதவி செய்துள்ளனர்.

அமைச்சர்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் தான் தேர்ந்தெடுக்கின்றனர். தொலை தொடர்பு அமைச்சரை, டாடா நிறுவனம் நியமிக்கிறது; பெட்ரோலிய அமைச்சரை ,ரிலையன்ஸ் நிறுவனம் நியமிக்கிறது. இது தான், இந்த நாட்டின் லட்சணம். பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. ஊழல் செய்பவர்களுக்கு உதவுவதும் குற்றமே; அந்த வகையில், பிரதமர் மீதும் வழக்கு பதிவு செய்யலாம். எனவே, ரிலையன்ஸ் நிறுவனத்தின் அந்த ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கெஜ்ரிவால் வலியுறுத்தினார். சக்திவாய்ந்த முதலாளிகள்தான் மத்திய அரசை வழிநடத்துவதாக அவர் விமர்சித்தார்.

அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள ரகசிய தொடர்பு:

முன்னதாக அவர், ஆடியோ டேப் ஒன்றை போட்டுக் காட்டினார். அரசியல் தரகர், நீரா ராடியாவுக்கும், முன்னாள் பிரதமர், வாஜ்பாய் மருமகனுக்கும் இடையே நடந்த, போன் உரையாடல் அது. அதில், தயாநிதிக்கு, தொலை தொடர்பு துறை அமைச்சர் பதவி கிடைத்தது எப்படி என்பது பற்றி பேசப்பட்டிருந்தது. அமைச்சர் பதவி குறித்து, தி.மு.க., மேலிடம், காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம், நேரடியாக பேரம் பேசிய விவரங்களை, நீரா ராடியாவும், வாஜ்பாய் மருமகன், ரஞ்சன் பட்டாச்சார்யாவும், தங்கள் போன் உரையாடலில் பேசிய விவரங்கள், அதில் இடம் பெற்றிருந்தன. அந்த உரையாடலில், காங்கிரஸ் முன்னணி தலைவர்களில் ஒருவரான, குலாம் நபி ஆசாத்திற்கும், தனக்கும், ஹாட் லைன் தொடர்பு இருப்பதாக, ரஞ்சன் பட்டாச்சார்யா கூறுகிறார். இரண்டாவது, டேப் உரையாடல், ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர், முகேஷ் அம்பானி தொடர்பானது. அதில் பேசிய, ரஞ்சன் பட்டாச்சார்யா, காங்கிரசும் என் சொந்த கடை போன்றது தான் என, பேசுகிறார்.

பின்னர் பிரபல வழக்கறிஞருமான, பிரஷாந்த் பூஷனுடன் பத்திரிகையாளர்களை சந்தித்த கெஜ்ரிவால்; “ நீரா ராடியா போன் உரையாடல், இந்த நாட்டின் உண்மையான நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆட்சி, அதிகாரத்தில் உள்ள கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே உள்ள ரகசிய தொடர்புகளை அம்பலம் ஆக்குகிறது. இந்த நாட்டை, கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் தான் ஆள்கின்றனர். காங்கிரசுக்கு ஓட்டு போட்டாலும், பாரதிய ஜனதாவுக்கு ஓட்டு போட்டாலும், முடிவெடுப்பது நிறுவனங்களின் தலைவர்களே.” என்றார்.

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!