Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, November 1, 2011

வெகு விரைவில் வல்லரசாக போகும் இந்தியா !?

குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, துப்புரவு வசதி, மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்டவை குறித்து மத்திய நகர்ப்புற அமைச்சகம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.

12 மாநிலங்களில் உள்ள 1,405 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், 50 சதவீத நகரங்களில் இந்த அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என, கண்டறியப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் அமைத்து குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும். ஆனால், 50 சதவீத நகரங்களில் இந்த வசதி செய்து தரப்படவில்லை.

இந்த நகரங்களில், 80 சதவீத வீடுகளில் ஐந்து மணி நேரத்துக்கும் குறைவான அளவே, குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்படுகின்றன. இந்நகரங்களில் 70 சதவீத வீடுகளில் கழிவறை வசதியோ, கழிவுநீர் அகற்றும் வசதியோ இல்லை.

மகாராஷ்டிராவில் 249 நகரங்கள் உள்ளன. இதில், நவி மும்பை மற்றும் மால்காபூரில் மட்டும் தான் 24 மணி நேர தண்ணீர் சப்ளை உள்ளது. பெரும்பாலான நகரங்களில் பாதாள சாக்கடையே கிடையாது. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் 19 இடங்களில் தான் உள்ளது. கர்நாடகாவில் 52 நகரங்களில் மட்டும் கழிவுநீர் அகற்றும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் 124 நகரங்களில் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் தண்ணீர் சப்ளை செய்யும் வசதி செய்து தரப்படவில்லை.

இந்த நகரங்களில் கழிவுநீர் அகற்றும் வசதியும் இல்லை. மத்திய பிரதேசத்தில் 46 சதவீத நகரங்களில் மட்டுமே தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. இவ்வாறு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமங்கள் எத்தனை எத்தனை. குடிக்க தண்ணீர் இல்லை, மொண்ட தண்ணீர் செல்ல பாதாள சாக்கடை இல்லை, இதையெல்லாம் தட்டி கேட்பது யாரு. இதை விட்டு விட்டு குல்லா போட்டுகொண்டு ஊழலை ஒழிக்கிறேன் என்று புறம்போக்கு தனம் செய்யும் போக்கிரிகளுக்கு புடம் போட்டு ஊதும் பரதேசி நாளிதழ்கள் (தினமணி, தினமலர்) இந்தியா வல்லரசாகும் வெறும் செய்தி தாள்களில் மட்டும்.

ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரே, பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோரை முன்னிறுத்தி ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பு போராட்டம் நடத்தும் வேளையில் கர்நாடகா முதல்வராக பதவி வகித்த எடியூரப்பா புரிந்த நிலபேர ஊழலில் பெரும் பகுதி ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு சென்றுள்ளது.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!