Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, February 28, 2012

அமலுக்கு வருகிறது பிரிட்டன் விசா புதிய விதிமுறைகள்!

லண்டன், பிப். 29: பிரிட்டனின் குடியேற்ற விதிமுறைகளில் புதிய திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி அந்நாட்டில் நிரந்தரமாக வாழும் உரிமை பெற்றிருக்கும் இந்தியர்கள், பயோமெட்ரிக் குடியிருப்பு உரிமம் எனப்படும் புதிய அட்டையைப் பெற விண்ணப்பிக்க வேண்டும்.,சட்டவிரோதக் குடியேற்றத்தைத் தடுப்பதற்காக இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டிருப்பதாக் கூறப்படுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டனில் குடியேறிய இந்தியர்களில் பெரும்பாலானவர்கள், அந்நாட்டு குடியுரிமையைப் பெறுவதற்குப் பதிலாக நிரந்தரமாக வாழும் உரிமையை மட்டும் பெற்றுக் கொண்டனர். அத்துடன் இந்தியக் குடியுரிமையையும் வைத்திருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் புதிய விதிமுறைகள் பொருந்தும்.

பயோமெட்ரிக் குடியிருப்பு உரிமம் என்பது ஒரு மின்னணு அடையாள அட்டையைப் போன்றதாகும். சம்பந்தப்பட்டவரின் பெயர், பிறந்தநாள், பிறந்த இடம் உள்ளிட்ட சுயவிவரங்களுடன், கைரேகை, முகப் பதிவு ஆகியவை அதில் அடங்கியிருக்கும்.

குடியேற்ற நிலை, பிரிட்டனில் அவர் பெற்றிருக்கும் உரிமைகள் போன்றவை பற்றி விவரங்களையும் இந்தஅட்டையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தியர்கள் மட்டுமல்லாமல், பல ஆண்டுகளுக்கு முன் பிரிட்டனில் குடியேறிய பெரும்பாலான பிற நாட்டவர்களும் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

அனுமதியில்லாமல் பிரிட்டனில் பணிபுரிந்து வரும் பிற நாட்டவர்களை குடியேற்றத்துறை அதிகாரிகள் கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. புதிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தப்பட்டால், இதுபோன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை உடனடியாக கண்டுபிடிக்க முடியும் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!