Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, February 12, 2012

ஆசிரியயை கொலை செய்த மாணவனின் வாக்குமூலம்?

சென்னை பாரி முனையில் புனித மேரி மேல் நிலைப்பள்ளியில் 9-வது வகுப்பு பயிலும் மாணவன் கடந்த வியாழக்கிழமை தனது ஆசிரியை உமா மகேஷ்வரியை கத்தியால் குத்தி கொலைச் செய்தான். இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட மாணவனிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து பல மணிநேரம் விசாரணை நடத்தினர். அப்பொழுது மாணவன் கூறியது:

நான் எனது பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் அவர்களுக்கு செல்லப் பிள்ளையாக இருந்தேன். தினமும் 100 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை பாக்கெட் மணி கிடைக்கும். ஹிந்தி எனக்கு சரியாக புரியாது. ஆதலால் ஹிந்தி பாடத்தில் எனக்கு மதிப்பெண்கள் குறைவாக கிடைக்கும். இதனை எனது ஸ்கூல் டைரியில் எழுதி பெற்றோர்களிடமிருந்து கையெழுத்து வாங்கி வர ஆசிரியை உமா மகேஷ்வரி கூறினார். தொடர்ச்சியாக 13 தடவை இவ்வாறு டைரியில் எழுதினார். கடந்த மாதமும் டைரியில் என்னைப் பற்றி மோசமாக அறிக்கை எழுதியதால் பெற்றோர்கள் என்னை கண்டித்தனர். இதனால் ஆசிரியை மீது எனக்கு கோபம் ஏற்பட்டது.

மூன்று தினங்களுக்கு முன்பு தியேட்டருக்கு சென்று ‘அக்னிபாத்’ என்ற ஹிந்து சினிமாவை பார்த்தேன். அதில் வரும் கொலைக் காட்சிகளைப் போல உமா மகேஷ்வரியையும் கொலைச் செய்ய திட்டமிட்டேன். வீட்டிற்கு அருகில் உள்ள கடையில் இருந்து ரூ.20 கொடுத்து கத்தி ஒன்றை வாங்கினேன். அதனை காகிதத்தில் பொதிந்து பள்ளிக்கூடத்திற்கு சென்றேன். சினிமாவில் கண்டது போல ஆசிரியையின் கழுத்திலும், நெஞ்சிலுமாக ஐந்து இடங்களில் கத்தியால் குத்தினேன். இவ்வாறு மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

கொலைச் செய்த மாணவனுக்கு நண்பர்கள் யாரும் இல்லை என்றும், யாரிடமும் பேசாத குணமுடையவன் என்றும் போலீசார் கூறுகின்றனர். உடல் வளர்ச்சி அதிகமாக இருப்பதால் அவனது வயதை உறுதிச்செய்ய மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் ஜுவைனைல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு ரிமாண்ட் செய்து சிறுவர்கள் சிறையில் மாணவன் அடைக்கப்பட்டான். கொலைச் செய்யப்பட்ட ஆசிரியை உமா மகேஷ்வரியின் உடல் வெள்ளிக்கிழமை சென்னையில் அடக்கம் செய்யப்பட்டது.

தன்னுடைய பாக்கட்டை நிறப்புவதை விட்டுவிட்டு சமூக அக்கறையுடன் கொஞ்சம் படமெடுத்தால் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கலாம்.,சினி துறையை சார்ந்தவர்கள் சிந்திப்பார்களா?

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!