Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, May 17, 2012

குடிமகனுக்கு ஊத்திக்கொடுத்த பெருமை ஜெயாவுக்கு! கலைஞர்!!

சென்னை: ஜெயலலிதாவின் ஆட்சியில், மது விற்பனையை அதிகரித்தது தான் ஓராண்டு சாதனை,'' என்று, கருணாநிதி கூறியுள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை: ஜெயலலிதாவின் ஓராண்டு ஆட்சியில், பழிவாங்கும் செயல், மக்களை அல்லல்படுத்தி கொடுமைப்படுத்தும் நடவடிக்கைகள், புதுப்புது ரகங்களை விளம்பரப்படுத்தி, மது விற்பனையை அதிகப்படுத்தியிருப்பது சாதனை. இவை அனைத்திற்கும் மேலாக, தமிழகத்தை இருண்டு போகச் செய்யும் அளவுக்கு, முன்னுக்குப்பின் முரணாக போராட்டத்தை, கூடங்குளத்தில் முதலில் தூண்டிவிட்டு, பிறகு அதை அடக்குவது போல் அடக்கி, தேவையில்லாமல் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது போன்ற செயல்களை, விரிவாக பிறகு எழுதுகிறேன்.

ஆடம்பரம் இல்லையா? அனைத்து பத்திரிகைகளிலும், முதல் நான்கு பக்கங்களுக்கு விளம்பரங்கள், கோட்டை வாயிலில், சட்டசபை வளாகத்தில் யானை, குதிரை, ஒட்டகம் வரவேற்க, செண்டை மேள, தாளங்கள் முழங்க, முதல்வருக்கு வரவேற்பு. இதெல்லாம் ஆடம்பரம் இல்லை என்றால், ஆடம்பரம் இல்லாத நிகழ்ச்சி தான் எது.

விதி 110க்கு வாழ்வு: தி.மு.க., ஆட்சியில் வைக்கப்பட்டிருந்த பெயரை, "தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுனர்கள் நல வாரியம்' என்று மாற்றி, முதல்வர் அறிவித்துள்ளார். இதற்காக முதல்வர் பெயரில், 110வது விதியின் கீழ் ஒரு அறிக்கை. அதற்கு ஒரு பாராட்டு. இந்த கூட்டத்தொடரில் மட்டும், விதி 110ன் கீழ் முதல்வர் படித்த அறிக்கைகளின் எண்ணிக்கை 39. மற்ற அமைச்சர்கள் இந்த விதியின் கீழ், படித்த அறிக்கைகளின் எண்ணிக்கை 0. இதற்கு முன் எந்த ஆட்சியிலும் இந்த அளவிற்கு, விதி 110ன் கீழ் முதல்வர்கள் அறிக்கை படித்ததில்லை. விதி 110க்கு, இந்த ஆட்சியில் வந்த வாழ்வு இது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

3 comments :

முதலில் சோபன் பாபுக்கு ஊதிகொடுத்தார் பின்பு எம் ஜி ஆருக்கு இப்போ மோடிக்கு, பேஸ் பேஸ் நன்னா இருக்கு

தமிழகத்தில் பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, பல மணிநேரங்கள் மின் தடையால் மக்கள் பெரும் அவதியுறும் வேளையிலும் மின்கட்டண உயர்வு, கூடங்குள போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் நடவடிக்கைகள், விலைவாசி உயர்வு, ரவுடிகள் ராஜ்ஜியம், சட்ட ஒழுங்கு சீரழிவு என அரசு நிர்வாகம் சீரழிந்துள்ள சூழலில் அவற்றை மூடி மறைக்க அரசு கஜானாவில் இருந்து இவ்வளவு பெரிய ஆடம்பர விளம்பரங்களை மேற்கொண்டுள்ள ஜெயாவின் அரசு கடந்த ஓர் ஆண்டில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்பதுதான் நடுநிலையாளர்களின் கருத்தாகும்.

அது சரி, இவரு என்னவோ மதுவிலக்கை அமுல் படுத்தியது மாதிரியும், இந்தம்மாதான் அதை நீக்கிய மாதிரியும் பேசிகிட்டு இருக்குது பெரிசு. மஞ்சள் துண்டு ஆட்சியே இருந்திருந்தாலும் சாராய விற்பனை அதிகரிச்சுதான் இருக்கும். இதுங்க ரெண்டுமே என்னைக்கு மக்கள் நலனுக்காக முயற்சி பண்ணியிருக்கு? ரெண்டுமே முடிஞ்சவரைக்கும் கொள்ளையடிப்பதையே கொள்கையாக வச்சிக்கிட்டு அலையும் கேசுகள் தானே? அப்படி இருக்க, ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்கிற மாதிரி பேசிகிட்டு இருக்காரு..........

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!