Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Saturday, April 21, 2012

இந்திய இளைஞர்களை தாக்கும் புற்று என்கிற பயங்கரம்?

புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோயால் பலியானவர்களில் 70 சதவீதம்பேர் இளைஞர்கள் என்று தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது.

இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கு பலியானவர்களில் 30-69 வயதுக்குள்ளானவர்கள் 70 சதவீதம்பேர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதிலும் புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதித்து உயிரிழந்தவர்களே அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் 2010ம் ஆண்டு புற்றுநோய் பாதித்து 5,56,400 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3,95,000 பேர் 30 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள்தான். இவர்களில் 2,00,000 பேர் ஆண்கள், 1,95,000 பேர் பெண்கள் ஆவர்.

ஆண்களில் புற்றுநோய் தாக்கி உயிரிழந்தவர்களில் 23 சதவீதத்தினர் வாய்ப் புற்றுநோய் ஏற்பட்டும், 12 சதவீதத்தினர் வயிற்றுப் புற்றுநோயாலும், 11 விழுக்காட்டினர் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.

பெண்களில், கழுத்துத் தொடர்பான புற்றுநோய் தாக்கி 17 சதவீதத்தினரும், மார்பகப் புற்றுநோய் தாக்கி 10 சதவீதத்தினரும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 42 சதவீத ஆண்களும், 18 சதவீத பெண்களும் புகைப்பிடிப்பது மற்றும் புகையிலைப் பயன்படுத்தியதால் வரும் புற்றுநோய் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் இவர்களில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வயதுடையவர்கள்.

இதன் மூலம், இந்தியா புகையிலைக்கு எதிராக அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நிலையிலும், புகையிலைப் பொருட்கள் மீது அதிகமான வரிகளை விதிக்க வேண்டிய நிலையிலும் இருப்பது தெரிய வந்துள்ளது. புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதே இதற்கு சரியான தீர்வாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

1 comments :

இந்தக் கருமத்தை சுத்தமாக ஒழித்தால்தான் என்ன? எதற்குக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்?

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!