Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Thursday, January 31, 2013

விஷரூபம் கமலுக்கு ஓர் கடிதம்

அன்புள்ள கமல் அவர்களுக்கு வணக்கம் ....1992-93 ஆம் ஆண்டுகளில் இயங்கிய கமல் நற்பணி இயக்க அனைதுக்கல்லூரி மாணவர் அமைப்பின் பச்சையப்பன் கல்லூரி பொறுப்பாளர் செங்குட்டுவன் எழுதுவது! இன்றைக்கு யாதவர் சங்கத்தில் உள்ள நண்பர் குணசீலன் அன்று உங்கள் நற்பணி இயக்கத்தின் தலைவர். நாங்கள் படித்த சென்னை முத்தையா செட்டியார் மேல்நிலைப்பள்ளியில் நீங்களும் படித்தீர்கள் என்று அன்றைக்கு பெருமைகொள்வோம் நாங்கள். 1992 ஆம் ஆண்டு தாகம் அனைதுக்கல்லூரி மாணவர் இதழாய் வெளியிடும் விழாவுக்கு நீங்கள் வருவதாக இருந்து,குணா படத்தின் படப்பிடிப்புக் காரணமாக நீங்கள் வாழ்த்து செய்தி மட்டும் அனுப்புனீர்கள். தாகத்தின் முதல் ஆண்டு விழாவில் கலந்துக்கொள்வேன் என்று சொன்னீர்கள். "சுட்டி" "தேன்மழை " போன்ற மாணவர் இதழ்கள் போல மாணவர் பருவத்தோடு நின்றுவிடாமல் "தாகம் " தொடர்ந்து வெளிவரவேண்டும் என்று வாழ்த்தினீர்கள்.

இந்த 22 ஆண்டுகளில் தாகத்தில் உங்களை விமர்சித்து எத்தனையோ கட்டுரைகள் வெளிவந்து விட்டது. இன்றைக்கு விஸ்வரூபத்திற்காக நீங்கள் தமிழ் நாட்டை விட்டே செல்கிறேன் என்று சொன்னபோது எனக்கும் கண் கலங்கியது ...ஆனால் கமல், உங்களை 5 வயது முதல் பாராட்டி சீராட்டி இன்று உங்களை கலைஞானியாக, கோடீஸ்வரனாக உயர்த்திய தமிழ் நாட்டை எவ்வளவு எளிதாக உங்களால் தூக்கி வீச முடிகிறது . காஷ்மீர் முதல் கேரளா வரை என்று தமிழ் நாட்டை நீங்கள் தவிர்தபோது இஸ்லாமிய சகோதரனை விட எனக்கு உங்கள் மீது கடும் கோபம் வந்தது! 50 ஆண்டுகாலம் உங்களை சுமந்த நாட்டிற்கு ,உங்கள் நாத்துடுக்கால் சிதம்பரம் நிகழ்ச்சியில் பேசிய காரணத்தால், உங்களை இன்றைய அரசு பந்தாடும் நிலையில்,தமிழர்களும் தமிழ் நாடும் என்ன பாவம் செய்தது உங்களை வளர்த்ததை த்தவிர ? ராசி அழகப்பன், குணசீலன், உங்கள் ராஜ்கமல் நிறுவனத்தின் நிழலாக இருந்த டி.என் .யெஸ் (குணா படத்தை தயாரித்து அழிந்து போனவர்) அய்யா அவர்களின் மகன் சக்தி, புதுக்கல்லூரி இப்ராஹிம் இப்படி எத்தனையோ தளபதிகள் அன்று உங்களுடன் இருந்தனர். இன்று அவர்கள் எல்லாம் எங்கே ? இந்தியாவில் ஏதேனும் ஒரு மதசார்பற்ற மாநிலத்தில் தங்குவேன் என்று சொல்கிறீர்களே ...கமல் உண்ட வீட்டிற்க்கே ரெண்டகம் செய்கிறீர்களே.

இந்தியாவில் தமிழ்நாட்டைத் தவிர ஒரு மதசார்பற்ற நாட்டை உங்களால் சொல்லமுடியுமா ? அக்ரகாரத்தில் பிறந்த உங்களை இன்று இந்த மதச்சார்பற்ற நாடுதானே உச்சியில் நிற்க்கவைத்துள்ளது ?ஏதாவது ஒரே ஒரு அக்ரகாரத்து அம்பி உங்களுக்காக இன்று சாலை மறியல் செய்திருப்பானா ? உங்கள் அக்ரகாரத்து எழுத்தாளர்கள் சோ, மதன், s .v .சேகர், உங்கள் குரு பாலச்சந்தர் உங்களை சந்தித்திருப்பார்களா ? இன்று உங்கள் வீட்டின் முன் அழுதவன் எல்லாம் இளிச்சவாய தமிழன் தானே ?எனக்கு அரசியல் கிடையாது ..மதம் கிடையாது என்று சிறு பிள்ளை தனமாக புலம்புகிறீர்களே கமல்,ஹேராம்,உன்னைப் போல் ஒருவன்,விஸ்வரூபம்,அன்பேசிவம் போன்றப் படங்கள் அரசியல் பேசாமல் எதை ப்பேசின ?மதம் பேசாமல் எதை பேசின ?.

1983 இல் ஈழப் படுகொலைக்காக உங்கள் தலைமையில் பல்லாயிரம் ரசிகர்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினார்களே இன்று உங்களுக்கு அந்த உணர்வே இல்லையா ? ஏன் இலங்கை தீவிரவாதம் பற்றி உங்களால் படம் எடுக்க இயலாதா ?அதற்கு ஒபாமா ஒப்புதல் தரமாட்டாரா ? காரணம் நீங்கள் இந்தியனாகி பல காலம் ஆகிவிட்டது கமல் ! தமிழனாக ..பிறகு இந்தியனாக, இந்தியாவில் வாழ முடியாதப் பட்சத்தில் அமெரிக்கனாக, ...அடடா...என்ன ஒரு மனித நேயம் உள்ள மனிதர். நடிகர்! இன்றைக்கு இங்கு நடக்கும் கூத்து, உலகில் எங்காவது நடக்குமா கமல்? உங்களை ஆளாக்கிய மண்ணிற்காக நீங்கள் ஒரே ஒரு படம் எடுத்ததில்லை.

ஆனால், உங்களை அமெரிக்காவின் விசுவாசியாக காட்டிக்கொள்ள, கேவலம் ஆஸ்கார் விருதுக்காக பலநூறு ஆண்டுகளாக நம்முடன் பிணைந்திருக்கும் இஸ்லாமிய சகோதரர்களை தொடர்ந்துக் கொச்சைப் படுத்திக்கொண்டே இருப்பீர்கள் ? உங்களுக்கு தமிழக மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற உடன் இங்கிருந்து வெளியேறுவேன் என்று அழுகிறீர்கள் ! வெட்கம் வெட்கம் ! நீங்கள் தமிழர்கள் படும் அவலங்களை வைத்து ஒரு படம் எடுத்து அதற்க்கு தடை என்றால் தமிழகம் உங்களை விட்டுக்கொடுத்திருக்குமா ? நீங்கள் சிறந்த நடிகர்தான் ..ஆனால் தமிழகத்திற்கு நண்றி உள்ள மனிதனா ? என்று உங்களை தொட்டுக்கேட்டுப்பாருங்கள்.

இந்த தமிழ்நாடும் தமிழனும் உங்களுக்கு கோடி கோடியாக அள்ளித்தரவேண்டும், ஆனால் நீங்கள் இந்த மக்களைப் பற்றி படம் எடுக்கவில்லை என்றால் கூடப் பரவாயில்லை எதாவது ஒரே ஒரு தமிழர் பிரச்சனைக்காக நீங்கள் குரல் கொடுத்தது உண்டா கமல் ? தயவுசெய்து நீங்கள் போகும் ஊரில் உள்ள மக்களுக்காகவாவது குரல் கொடுங்கள்...அவர்களையும் ஏமாற்றி விடாதீர்கள் ? எங்களைப் போல் அவர்கள் ஏமாற மாட்டார்கள்! போகும் போது இன்று தமிழக ரசிகர்கள் உங்கள் கடன் அடைக்க அனுப்பும் பணத்தையும் மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள் !அடுத்த ப் படம் எடுக்க உதவும் ! இந்தக் கடிதம் உங்களுக்கு மட்டும் அல்ல. எங்களை இன்றைக்கு சுரண்டிக்கொண்டிருக்கும் அத்தனை நடிகர்களுக்கும்தான். தயவு செய்து அவர்களையும் உங்களுடன் மதச்சார்பற்ற நாடான குஜராத்திற்கு அழைத்துச் சென்று விடுங்கள் ! நாங்கள் நிம்மதியாக வாழ்கிறோம் !!

என்று அன்புடன்
தாகம் செங்குட்டுவன் மற்றும் பழைய நற்பணி மன்ற தோழர்கள்.

2 comments :

கமல்ஹாசனின் பிறவிக் குணமும், இரட்டை வேடமும்.

பிரமாண்டமான பொருட்செலவில், மாபெரும் விளம்பரங்களினாலும் எலிசபத் டெய்லரால் துவக்கி வைக்கப்பட்டு, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாட்டில் நடந்த உண்மை வரலாற்றுப் படமான "மருத நாயகம்" படத்தை வெளியிடக் கூடாது என்று மறுப்புத் தெரிவித்ததும் வாயைப் பொத்திக் கொண்டு படப்பெட்டியை அன்றே முடக்கிப் போட்ட கமல்ஹாசன், இன்று உண்மைக்குப் புறம்பாக இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து எடுத்த படத்தை முஸ்லிம்கள் தடை செய்ய முயலுகையில் மத வெறியர்களைத் தூண்டிவிட்டு இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் உள்ள பிரச்னை போல் திசைத் திருப்புவதும் நாட்டை விட்டு போகப்போகிறேன் என்று கோழை போல் உளறியும் தனது மத வெறியை காட்டிவிட்டார் கமல்ஹாசன்.

சிலக் காட்சிகளை நீக்கி படத்தை வெளியிடலாம் என்று இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதை விட மருத நாயகம் படத்தை நிரந்தரமாக தடை செய்தது போல் உண்மைக்குப் புறம்பான இந்தப் படத்தையும் தடை செய்வதுதான் சிறந்தது. anbu chelvan.

தலித் மக்களுக்கு நடக்கும் கொடுமை குறித்து கேள்வி எழுப்ப அவருக்கு வக்கில்லை. அவர் மொழி பேசும் தமிழீல மக்களுக்கு இராணுவமும் புலிகளும் மாறி மாறி செய்த கொடுமைகளை விமர்சிக்கத் துப்பில்லை. அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கார் விருதை பெற இப்படியா அவன் மூத்திரத்தைக் கமல் குடிக்க வேண்டும். கடைசியாக ஒரு ஆங்கிலப் படம் இயக்கவும் வாய்ப்பும் கிடைத்துவிட்டது. எப்படியோ எதிரிக்கு எதிரி நண்பர்களாகிவிட்டீர்கள். naveen

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!