Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, May 15, 2011

அலை வரிசையினால் ஆபத்து!! கொஞ்சம் அடக்கி வாசிப்பது நல்லது?

லண்டன் : கம்பியில்லா இணையத் தொடர்பு வசதி உள்ள மொபைல் போன் மற்றும் கணினிகளால், புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் விளையும். அதனால், பள்ளிக்கூடங்களில் அவற்றை பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்' என்று ஐரோப்பிய கமிட்டி ஒன்று கூறியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளின் எம்.பி.,க்கள் மற்றும் அரசியல்வாதிகள் 84 பேர் அடங்கிய கமிட்டி ஒன்று, மின்காந்தப் புலத்தால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சமீபத்தில் ஆராய்ந்தது. அதில், கம்பியில்லா இணையத் தொடர்பு வசதி உள்ள மொபைல் போன்கள், பேபி மானிட்டர் எனப்படும் குழந்தைகளின் குரல்களை வெளிப்படுத்தும் கருவிகள் மற்றும் கணினிகள் ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுக்கள், மனித உடலில் புற்றுநோய், மூளையில் பல்வேறு நோய்கள் ஆகியவற்றை உருவாக்கும் என்பது தெரிய வந்தது.

இந்தக் கருவிகள் அனைத்தும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளதால், புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களின் தாக்கம் குறித்து ஒருவித அச்சம் நிலவி வருகிறது.

இதுகுறித்து விரிவாக ஆராய்ந்த ஐரோப்பிய கவுன்சிலின் கமிட்டி, "இது போன்ற கருவிகளை பள்ளிக்கூடங்களில் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். ஆஸ்பெஸ்டாஸ், புகை பிடித்தல் மற்றும் பெட்ரோலில் உள்ள காரீயம் இவற்றால் நோய்கள் ஏற்படுகின்றன என்பதை நாம் காலதாமதமாக அங்கீகரித்தது போல் இதிலும் அசட்டையாக இருந்து விடக்கூடாது' என்று கூறியுள்ளது.

ஆனால், இதுகுறித்து நிபுணர்கள் அதிக அளவில் கருத்து வேறுபடுகின்றனர். "இந்த விஷயத்தில் மிகக் குறைந்த அளவே ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக மொபைல் போன்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மிக மிகக் குறைந்த அளவு தான்' என்று கூறுகின்றனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!