Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, November 17, 2013

அமெரிக்காவையே அசத்திய ஆச்சரிய மனிதர்!!

20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த வரலாற்று நாயகர்களில் ஒருவர் தான் இந்த மால்கம் x என்ற சகோதரர். அமெரிக்காவில் தலைவிரித்து ஆடிய இனவெறிக்கு எதிராக போராடி அதில் வெற்றியும் கண்ட ஒரு வரலாற்று நாயகன்.

சிறுவயதில் தந்தையை இழந்து, தாய் மனநிலை பாதிக்கப் பட்டு, கல்வி நின்று போய் தவறான வழிக்கு சென்ற மால்கம் x ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு குற்றத்திற்காக 10 ஆண்டுசிறை தண்டனை வழங்கப் பட்டு சிறையில் அடைக்கப் படுகிறார். (அங்குதான் அவருக்கு இஸ்லாம் அறிமுகமானது).

சிறையில் இருந்து விடுதலையாகி 1952 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு தன்னை நேசனல் ஆஃப் இஸ்லாம் என்ற இயக்கத்தில் ஐக்கியப் படுத்திக் கொண்டு இனவெறிக்கு எதிராக போராடியவர்.

ஆப்ரிக்க அமெரிக்கர் (கருப்பர்கள்) இனத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் அனைவரும் அவர்களுக்கு கீழே தான் என்றும் முக்கியமா வெள்ளையர்கள் அனைவரும் சாத்தான்கள் என்ற எண்ணம் கொண்டிருந்த சகோதரர் மால்கம் x அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை ஏற்படுகிறது.

அது அவர் இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் புனிதப் பயணமான ஹஜ் பயணத்தை மேற்க் கொள்கிறார். அங்கு அவர் பார்த்த காட்சி அவரை உறைய வைத்து விட்டது. "வெள்ளையர்கள்,கருப்பர்கள் என மக்கள் எந்த வித நிறம் இனம் பாராமலும் பழகிய காட்சி அவருக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.

ஆப்ரிக்க அமெரிக்கர்கள் தான் சிறந்தவர்கள் என்ற அவரின் எண்ணமும்,வெள்ளைக்காரர்கள் மீதான அவரின் தவறான எண்ணமும் மாறி மனிதர்கள் அனைவரும் சமம் என்ற கொள்கைக்கு அவரை வரசெய்தது.

அதற்கு பிறகு யாரையும் இழிவாக கருதாமல் இஸ்லாம் காட்டி தந்த வழிமுறையோடு தொடர்ந்து கறுப்பின மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்த சகோதரர் மால்கம் x. மக்களும் சாரை சாரையாக தங்களை இஸ்லாத்தில் ஐக்கியப் படுத்திக் கொண்டு மால்கம் x அவர்களின் பின்னால் அணி திரள ஆரம்பித்தார்கள்.

1965 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் இஸ்லாமிய உரை நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொள்ளப் பட்டார்.

#இதுதான் இஸ்லாத்தின் மகிமை.நபி(ஸல்) அவர்கள் கொண்டுவந்த கொள்கை இன்றளவும் செய்து கொண்டிருக்கும் ஒரு அற்புதம்.எந்த கொள்கையாலும் செய்ய முடியாத அறபுதம்.

நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் மக்களே அறிந்து கொள்ளுங்கள் ஒரு கருப்பன் வெள்ளையனை விடவோ, ஒரு வெள்ளையன் கருப்பனைவிடவோ, ஒரு அரபி அரபி அல்லாதவனை விடவோ எந்த சிறப்பும் இல்லை.உங்கள் இறை அச்சம் மட்டுமே உங்களை இறைவனிடத்தில் நீங்கள் யார் சிறந்தவர்கள் என்று நிரூபிக்கும் என்ற நபி(ஸல்) அவர்களின் அறிவுரை இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்ற ஒவ்வொரு முஸ்லிமும் இன்றளவும் கடைப் பிடிக்கும் கொள்கை.

இறைவன் நாடினால் மரணிக்கும் வரை நான் உட்பட எந்த ஒரு முஸ்லிமும் இந்தக் கொள்கையை விட்டு விலகமாட்டோம்., சகோதரர் மால்கம் x அவர்களை பற்றி மேலும் தகவல் தெரிந்து கொள்ள : http://www.ethirkkural.com/search/label/Malcolm%20X.

(மேலே உள்ள படம்: இதை பார்க்கும் பொழுதே உடல்கள் சிலிர்க்கிறது இந்த இடத்தில தான் பிறை 8 அன்றில் இருந்து பிறை 10 அன்று ஹஜ் கடமை பூர்த்தியாகும் வரை ஏழை பணக்காரன், கருப்பன் வெள்ளையன்,அரேபியன் அரபி அல்லாதான் என எந்த வித வித்தியாசமும் இல்லாமல் இங்கு அமைக்கப் பட்டுள்ள கூடாரங்களில் தங்க வேண்டும்.

அனைவருக்கும் இங்கே ஒரே மாதிரியான இருப்பிடம், உடை என இறைவன் முன் எவனுக்கும் எந்த சிறப்பும் இல்லை என்ற உணர செய்யும் ஓர் அற்புதமான இடம்.மனிதர்களின் அகம்பாவம் அழிந்து போக செய்யும் இடம்).

1 comments :

நல்லதொரு தகவலுக்கும் இணைப்பிற்கும் நன்றி...

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!