Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Wednesday, November 27, 2013

நம்மலுடைய கட்டாய கடமை!

நம்மலுடைய வீட்டை நாம் சுத்தமாக வைத்து இருக்கிறோம், அதை போல் நம் சுற்றத்தையும் சுத்தமாக வைப்பது நம்மலுடைய முக்கிய கடமை ஆகும். நாளைய நம்மளுடேய் சந்ததிகளுக்கு நாம் என்று எதாவது நல்லது செய்வது என்றால் நீர், நிலம், காற்று போன்றவற்றை சுத்தமாக வைத்தாலே போதும்.

ஏப்ரல் 22 நாள், உலக பூமி தினம் (World Earth Day)." ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு " .இந்த விதி எல்லாவற்றுக்கும் பொருந்தும். இயற்கை மட்டும் விதிவிலக்கா என்ன? இன்றைய இயந்திரச் சூழலில் நமக்கும் இயற்கைக்குமான உறவைப்பற்றி சிந்திக்க நேரமின்றி சதா ஓடிக்கொண்டே இருக்கிறோம். இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட நம்மால் வாழ முடியாது . இதை உணர மறக்கிறோம். எல்லாவற்றுக்கும் ஒரு விதமான கவர்ச்சி தேவைப்படுகிறது. நம்மை தாங்கிக் கொண்டிருக்கும் பூமியைப்பற்றிச் சிந்திக்கக்கூட நமக்கு " உலக பூமி தினம் " என்று ஒரு நாள் தேவைப்படுகிறது . 

பூமியின் முதல் எதிரி யார்? சந்தேகமே இல்லாமல் மனிதன் தான். இன்று பூமி இந்த அளவிற்கு பாதிக்கப்பட்டு இருப்பதற்கு நாமும் , நம் வாழ்க்கை முறையும்தான் காரணம் . அறிவியல் என்ற பெயரிலும், கண்டுபிடிப்புகள் என்ற பெயரிலும் தினமும் பூமியைக் காயப்படுத்துகிறோம். இயற்கையோடு இணைந்த அறிவியலால் மட்டுமே மனித குலத்திற்கு நன்மை ஏற்படும். இயற்கைக்கு எதிரான அறிவியல் சிறிய நன்மையையும், பெரிய தீமையையும் கொண்டிருக்கும். நமது ஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் இயற்கைக்கு எதிராகவே உள்ளது. இயற்கையின் தன்மைக்கு ஏற்ப புதிய கண்டுபிடிப்புகள் அமைவதில்லை நமது பயன்பாடும், வர்த்தகமும் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன விளைவு, பூமியே ஒரு பெரிய குப்பைத்தொட்டி ஆனதுதான் மிச்சம்.

இன்று நாம் பயன்படுத்தும் பொருள்களில் எத்தனை மண்ணில் மட்கக்கூடியவை. மிகவும் குறைவு. பயன்படுத்தியபின் தூக்கி எறி ( Use and Through ) கலாச்சாரம்தான் இன்றைய உலகை இயக்குகிறது, இந்தக் கலாச்சாரம் பொருள்களுக்கு மட்டுமல்ல மனிதனுக்கும் தான் ஒரு மனிதனை எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிந்து விடக்கூடியச் சூழல்தான் இன்று உள்ளது. நிலம், நீர், காற்று என்று பாகுபாடில்லாமல் அனைத்தும் மாசடைந்துள்ளது. நம் மீது நாமே குப்பைகளை அள்ளிப்போட்டுக்கொண்டு குப்பைகளுடனே வாழ்கிறோம். நம் வீட்டில் இருப்பது மட்டும் நம் குப்பையல்ல, பூமியில் எங்கு குப்பை இருந்தாலும் அது நம் குப்பைதான், அதற்கு நாம் மட்டுமே காரணம்.

இதற்கு என்ன செய்யலாம் ?, Reduce - குறைக்க வேண்டும் : பிளாஸ்டிக் மற்றும் பூமிக்கு எதிரான மண்ணோடு மண்ணாக மட்காத அனைத்தையும்.

Reuse - மீண்டும் பயன்படுத்த வேண்டும் : நாம் பயன்படுத்தும் அனைத்து பொருள்களையும் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்திய பிறகுதான் குப்பைக்கோ மறுசுழற்சிக்கோ போட வேண்டும்.

Recycle - மறுசுழற்சி செய்ய வேண்டும் : மண்ணில் மட்கும் தன்மை இல்லாத பொருட்களை கண்டிப்பாக மறுசுழற்சி செய்ய வேண்டும் . அது மிகச் சிறிய பொருளாக இருந்தாலும் சரி.

Restore - மீண்டும் சேமிக்க வேண்டும் : இயற்கையின் எந்தப் பொருளைப் பயன்படுத்தினாலும் அந்தப்பொருளை மீண்டும் உருவாக்கி சமநிலையைக் காக்க வேண்டும். உதாரணமாக ஒரு மரத்தை வெட்டினால் மீண்டும் ஒரு மரத்தை நட வேண்டும். இயற்கைச் சமநிலை பாதிக்கப்படும் வரை நம்மால் நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியாது.

முடிந்த அளவுக்கு இந்த விசயங்களை உங்கள் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டு வாருங்கள் . நான் ஒருவன் மட்டும் மாறுவதால் என்ன நடந்து விடப்போகிறது ? என்று ஒருபோதும் எண்ண வேண்டாம். நாம் எல்லோரும் ஒன்று படுவோம். பூமியைக் காப்பாற்றுவோம். தீதும் நன்றும் பிறர்தர வாரா.

1 comments :

அருமை... உணர வேண்டிய கருத்துக்கள்...

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!