Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Sunday, October 14, 2012

இப்படியான ஆண்களை அதிகம் விரும்பும் பெண்கள்

பிரிட்டனின், நாட்டிங்காம் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஆண்களின் சில புகைப்படங்களை பெண்களிடம் கொடுத்து, அவற்றை தங்கள் விருப்பத்திற்கேற்ப, கணினியில் அழகு படுத்தும்படி கூறி, ஆராய்ச்சி நடத்தினர்.

அதில் பெரும்பாலான பெண்கள், ஆண்களின் முகங்களுக்கு மிதமான சிவப்பு நிறத்தைக் கொடுத்து மெருகூட்டியிருந்தனர். மிதமான சிவப்பு நிறமுடைய ஆண்களின் முகமே, பெண்களின் விருப்பமாக உள்ளது. ஆனால், அதிக சிவப்பு நிறம், ஆண்களின் கரடுமுரடான சுபாவத்தை குறிப்பதாக, பெண்கள் கருதுகின்றனர்.

இது குறித்து போர்ட்ஸ்மவுத் பல்கலையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மற்றும் உளவியல் வல்லுனரான சமந்தா குறிப்பிடுகையில், "சிவப்பு என்பது ஆபத்தின் அடையாளம். பொதுவாக அதிக உடல் உழைப்பு இருக்கும் போதும், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் முகம் மிகவும் சிவந்து காணப்படும். ஆனால், வெளுத்த முகம், நோயையும் பயந்த சுபாவத்தையும் குறிக்கும். ஆதலால், இரண்டுக்கும் இடைப்பட்ட இளஞ்சிவப்பு (ரோஸ்) நிற முகமுடைய ஆண்களையே, பெண்கள் அதிகம் விரும்புகின்றனர், என்றார்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!