Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Tuesday, January 25, 2011

வரதட்சணை கொடுமை, சபாஸ் போலீஸ்

அமெரிக்காவுக்கு தப்பிச்செல்ல இருந்த கணவனை, தகுந்த நேரத்தில் போலீசில் முறையிட்டு மடக்கினார் மனைவி. சாப்ட்வேர் இன்ஜியரான கணவன், மும்பை ஏர்போர்ட்டில் குடியுரிமைப்பிரிவு அதிகாரிகளிடம் சிக்கி திருதிருவென விழித்தார். இவரை விசாரணைக்காக கோவைக்கு அழைத்து வர தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

கோவை, ராமநாதபுரம், டி.நகர், அய்யப்பன் கோவில் வீதியில் வசிப்பவர் சுமித்ரா(29) எம்.பி.ஏ., பட்டதாரி. இவருக்கும் திருச்சி, முசிறியைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் சரவணகுமார்(31) என்பவருக்கும், 2006ல் ஆடம்பர திருமணம் நடந்தது. பெண் வீட்டார் 50 சவரன் நகை கொடுத்து, 10 லட்ச ரூபாய் செலவில் திருமணத்தை விமரிசையாக நடத்தினர். திருமணம் நடந்த போது, சுமித்ரா கோவையிலுள்ள தனியார் வங்கியிலும் சரவணகுமார் பெங்களூரிலுள்ள விப்ரோ நிறுவனத்திலும் பணியாற்றினர். அடுத்த சில நாட்களிலேயே சரவணகுமாருக்கு அமெரிக்காவிலுள்ள நிறுவனத்தில் வேலை கிடைத்து அங்கு சென்றுவிட்டார். அதன்பின், கோவையிலுள்ள மனைவி சுமித்ராவுக்கு போன் செய்த அவர், "உனது மாத சம்பளத்தை என் வங்கிக் கணக்கில் தவறாமல் செலுத்த வேண்டும் ஏற்கனவே, நீ வாங்கிய இரண்டு மாத சம்பளம் 50 ஆயிரம் ரூபாயை வங்கியில் செலுத்து' என, கட்டளையிட்டார். பணத்தின் மீது கணவன் குறியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த சுமித்ரா, அதன்படியே செய்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2009, மே மாதம் கோவைக்கு வந்த சரவணகுமார், மனைவியையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும், சரவணகுமாரின் உண்மையான முகம் வெளிப்பட்டது. "நீ, படித்துவிட்டு வீட்டில் சும்மா இருக்க வேண்டாம்' எனக்கூறி, மனைவிக்கு அங்கேயே வேலை தேடினார். இதற்காக, சுமித்ராவின், "பயோ-டேட்டோ'வை பல்வேறு நிறுவனங்களும் இணையதளம் வழியே அனுப்பினார். வேலைக்குச் செல்ல மறுத்த சுமித்ரா, தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்ததும் அடித்து துன்புறுத்த துவங்கினார். கருக்கலைப்பு செய்யாவிடில், விவாகரத்து செய்துவிடுவேன் எனவும் மிரட்டினார். மிரண்டு போன சுமித்ரா, கருக்கலைப்பு செய்து கொண்டார். கணவரின் தொல்லை தாங்காமல் அடுத்த சில நாட்களிலேயே கோவை வந்துவிட்டார். தன் நோக்கத்துக்கு உடன்படாததால் ஆத்திரமடைந்த சரவணகுமார், மனைவியுடன் போனில் பேசுவதை தவிர்த்தார்; தன் மொபைல் போன் எண்களையும் மாற்றிவிட்டார். கணவருடன் தொடர்பு கொள்ள முடியாமல் சுமித்ரா பரிவித்து வந்த நிலையில், எவ்வித தகவலும் தெரிவிக்காமல் கோவை வந்திறங்கினார் சரவணகுமார். அவருடன் சேர்ந்து வாழும் முயற்சியில் ஈடுபட்ட சுமித்ராவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதிருப்தி அடைந்த அவர், போலீசில் முறையிடுவதாக எச்சரித்துள்ளார். போலீசார் கைது செய்துவிடுவார்களோ என உஷாரான சரவணகுமார், அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில் இறங்கினார். இதுகுறித்து, கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் அளித்த சுமித்ரா, அமெரிக்காவுக்கு தப்பிச்செல்லும் முன் தன் கணவரை பிடிக்க வேண்டுமென்றும், அவர் வரதட்சணை துன்புறுத்தலில் ஈடுபட்டார் என்றும் தெரிவித் திருந்தார். ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

சரவணகுமார் அமெரிக்காவுக்கு தப்பிச் செல்லும் முயற்சியை முறியடிக்கும் விதமாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருந்து, முக்கிய விமான நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட் மற்றும் போட்டோ விவரங்கள் பரிமாறப்பட்டன. இந்நிலையில், கடந்த 21ம் தேதி அமெரிக்காவுக்கு செல்வதற்காக மும்பை விமான நிலையம் சென்ற சரவணகுமாரை, அங்குள்ள குடியுரிமைப்பிரிவு அதிகாரிகள், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்; காவலில் வைக்கப்பட்டார். இதுகுறித்த தகவல் கோவை மாநகர போலீசுக்கு தெரிவிக்கப்பட்டது. சரவணகுமாரை கோவைக்கு அழைத்துவர, கமிஷனர் சைலேந்திரபாபு உத்தரவுப்படி, தனிப்படை போலீசார் மும்பை விரைந்துள்ளனர்.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!