Loading...

தினக்ஸ்

Sample Text

அ.தி.மு.க. அரசு தடுமாற்றம் அடைந்து வருகிறது: எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்.//.தொடர் மின்வெட்டு! – அதிகரிக்கும் மக்களின் போராட்டம்.//.பத்திரிகைகள் தனி மனித கண்ணியத்தைக் குலைக்கக் கூடாது : நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு.//.திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் திட்டங்கள் முடிவடைந்தும் உற்பத்தியை தொடங்காதது ஏன்? கலைஞர்.//.கெஜ்ரிவால் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை காட்டினார் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் .//.மாறி, மாறி கூட்டணி அமைத்தது தவறு : அன்புமணி ராமதாஸ்.//. .//. .

Monday, January 17, 2011

முப்பெரும் விழா நிகழ்ச்சிக்காக (1 மில்லியன்)

குவைத் நாட்டில் இந்தாண்டு கொண்டாடப்படவுள்ள முப்பெரும் விழா நிகழ்ச்சிக்காக அந்நாட்டு மன்னர் 10 லட்சம் (1 மில்லியன்) குவைத் நாட்டு மக்களுக்கு இலவசமாக உணவு பொருட்கள் மற்றும் இதர சலுகைகளை வழங்க உத்தரவிட்டுள்ளார். எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடான குவைத் நாட்டில், 50-வது சுதந்திர தினம், அமெரிக்க உதவியுடன் ஈராக் படைகள் குவைத்திலிருந்து வெளியேறிதன் (வளைகு‌டா போர் முடிவுக்கு வந்ததன்) 20-ம் ஆண்டு தினம், மன்னர்‌ ஷேக், -ஷபா- அல் அகமத் பதவியேற்றதன் 5-ம் ஆண்டு என முப்பெரும் விழா குவைத்தில் கொண்டாடப் படவுள்ளன. இது குறித்து குவைத் தேசிய செய்தி ஏஜென்சி எனும் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள ‌செய்தியில், குவைத் நாட்டில் ‌கொண்டாடப்படவுள்ள முப்பெரும் விழாவையொட்டி நாட்டின் தேர்வு செய்யப்பட்ட 10 லட்சம் பேருக்கு அரிசி, முட்டை, பால், உள்ளிட்ட உணவு பொருட்களை ஒவ்வொரு குவைத் குடிமகனுக்கும் 1000 தினார் (3,559 டாலர்) வெகுமதியும், புதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு கூப்பன்க‌ளும் வழங்க மன்னர் உத்தரவிட்டுள்ளார்.இந்த கூப்பன் மூலம் அடுத்தாண்டு மார்ச் மாதம் வரை உபயோகப்படுத்திக்கொள்ளலாம், இந்த புதிய உணவு திட்டத்தில் பிப்.1-ம் தேதி வரை புதியதாக பிறந்த குழந்தைகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். ஆனால் 20 லட்சம் வெளிநாட்டவர்கள் இத்திட்டத்தில் சேர அனுமதிக்கப்படவில்‌லை.

0 comments :

Post a Comment

இவ்ளோ தூரம் வந்திடீங்கே! மனசுல பட்டத சொல்லிட்டு போங்க, நன்றி.!