
சப்தமில்லாமல் உலகை ஒன்று படுத்திவிட்டது இலங்கை தமிழ் முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்கள் குறித்து எந்த ஒரு ஊடகமும் செய்தி வெளியிடாது இருந்தபோது, முகநூல், வாட்ஸப், டிவிட்டர் போன்ற சமூக வளைதளங்கள் மூலமே செய்திகள் காட்டுதீ என பரவின. தாக்குதலுக்கு உள்ளான ஒரு சகோதரனின், அந்த அழுகுரல் ஆடியோ பதிவு அனைவரையும் சென்றடைந்துள்ளது.
இலங்கை, இந்தியா மட்டுமல்லாமல், ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் அரபு நாடுகள் வரை தங்கள் கண்டனத்தை பதிவு செய்ய காரணமாக இருந்தது இந்த சமூக வளைதளங்களே.
போராட்ட களத்திற்கு புயலென புறப்பட வைத்ததும் இந்த தளங்களே!
விபச்சார ஊடங்கள் இலங்கை கலவரத்தை மறைக்கவே முற்பட்டன. காரணம் அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் ஆயிற்றே!
போராட்ட களத்திற்கு புயலென புறப்பட வைத்ததும் இந்த தளங்களே!
விபச்சார ஊடங்கள் இலங்கை கலவரத்தை மறைக்கவே முற்பட்டன. காரணம் அவர்கள் தமிழர்களாக இருந்தாலும் முஸ்லிம்கள் ஆயிற்றே!
முகமூடி ஊடகங்கள் துணையின்றி, இது போன்ற வளைதளங்கள் மூலமும் சாதிக்க இயலும் என்பது தெளிவாக தெரிந்துவிட்டது. இனி தெளிவாக ஒரு முடிவு எடுப்போம், நமக்கென ஒரு ஊடகம் எப்படி முக்கியம, அதே போன்று சமூக வளைதளங்களில், நமது செயல் திறனும் செழுமையாக்கப்பட வேண்டும்.
ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இனி அவைகளை இன்பாக்ஸிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.
நேற்றைய ஹர்த்தால் கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு இரண்டாவது ஹர்த்தால். ஒருநாள் கடையை மூடினால் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்பது கூறத்தேவையில்லை.
அப்படி இருந்தும், அரசியல் அழுத்தங்களை துச்சமென மதித்து, தன் சமூகத்துக்காகக் குரல்கொடுக்க இரண்டாம் நாளும் கடைகளைப் அடைத்து ஹர்த்தால் அணுஷ்டிட்ட காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் கல்முனை மக்களை மறக்க முடியாது.
ராஜபக்ஷேவை சுற்றி வளைத்த 15 முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் – சரமாரியான கேள்வி.?
மனித உரிமை மீறலின் உச்சத்துக்கே ஒரு நாடு செல்லும்போது, அந்நாட்டுக்கு எதிராக சர்வதேச நாடுகளின் நெருக்குதலும், ஐ.நா.மன்றத்தின் தலையீடும் அவசியமாகும்.
குறிப்பாக இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழிப்பைத் தடுக்க, முஸ்லிம் நாடுகள் உடனடித் தலையீடு செய்ய வேண்டும்.அந்த அடிப்படையில் இலங்கையில் அதிபர் ராஜபக்சேவை, பங்களாதேஸ் – ஈரான் – இராக் – எகிப்து இந்தோனேசியா – குவைத் – மலேசியா – மாலத்தீவு – நைஜீரியா – பாக்கிஸ்தான் – பாலஸ்தீனம் – துருக்கி – ஐக்கிய அரபு அமீரகம் – சவூதி அரேபியா – கத்தார் ஆகிய நாடுகளின் தூதர்கள் சந்தித்து தமது அதிருப்தியையும் கண்டனத்தையும் பதிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில் முஸ்லிம் நாடுகளின் தூதர்கள் கூட்டாகத் திரண்டு வந்து கண்டித்தது இலங்கை அரசை நடுங்கச் செய்துள்ளது. முஸ்லிம் நாடுகளின் அழுத்தம் ஒருபுறம் வர, மறுபுறம் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கை முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.
குறிப்பு: இனி நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் உங்களுக்காக மீடியாக்களை உருவாக்குவதுதான் இதற்கு ஒரே வழி.
1 comments :
parppana terror org
Post a Comment